Published:Updated:

கதம்பம்: கோவை ஸ்பெஷல்...

Marudhamalai
பிரீமியம் ஸ்டோரி
News
Marudhamalai

கதம்பம்: கோவை ஸ்பெஷல்...

கதம்பம்: கோவை ஸ்பெஷல்...

பூப்போட்டு உத்தரவு!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவையில் இருந்து வடமேற்கில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மருதமலை. அற்புதமான முருகன் தலம். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாக ஸ்ரீவிநாயகர்; அருகில் காவடி தூக்கியபடி ஸ்ரீஇடும்பன்; கருவறையில் தண்டாயுதம் ஏந்தி, கிழக்கு நோக்கியபடி மருதாசல மூர்த்தியாக காட்சி தருகிறார், முருகக் கடவுள்.

திருமணம் முதலான சகல விசேஷங்களுக்கும் இங்கே பூப்போட்டு உத்தரவு கேட்கும் சம்பிரதாயம் வெகுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அனுமனின் தாகம் தீர்த்த முருகக் கடவுள்!

கோவையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய தடாகம் கிராமத்தில் மலைப்பகுதி உள்ளது. குன்றிருக்கும் இடத்தில் குடியிருக்கும் குமரக் கடவுள், இந்த மலையில் இல்லாமல் போய்விடுவானா? இந்த மலையின் மேல், ஸ்ரீஅனுமரின் தாகத்தைத் தீர்த்தருளிய முருகப்பெருமான், அனுவாவி ஸ்ரீசுப்ரமணியர் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். இங்கு, ஸ்ரீஅனுமனுக்கும் சந்நிதி உண்டு. அனுமனுக்காக, வேலவன் வேல் கொண்டு உருவாக்கிய சுனையை இன்றைக்கும் தரிசிக்கலாம்!

பதிகம் பாடினார்...பாலகன் பிழைத்தான்!

கோவை -சென்னை சாலையில், கோவையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அவிநாசி ஸ்ரீகரணாம்பிகை சமேத ஸ்ரீஅவிநாசியப்பர் ஆலயம். சுந்தரர், முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிருடன் வரவழைத்த அற்புதத் தலம் இது!

'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே...’ என்று துவங்கும் பதிகத்தைப் பாடி, 'கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என முடிக்கும்போது, முதலையின் வாயில் இருந்து உயிர் பிழைத்து வந்தானாம் சிறுவன். குளத்துக்கு அருகில் சுந்தரருக்கு சந்நிதியும் உண்டு. பங்குனி மாதத்தில், 'பாலகனை மீட்ட வைபவம்’ சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.  

சுந்தரரின் பதிகத்தைப் பாடி, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைகள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

- அ.விஜய் பெரியசாமி, கல்பாக்கம்

சடாரிக்கு பதில் ஸ்ரீராம பாணம்!

கோவை மாவட்டம், காரமடையில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர், அவ்வளவு பிரசித்தம்! பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாளின் திருச்சந்நிதியில் பக்தர்களின் சிரசில், சடாரி வைத்து ஆசீர்வதிப்பார்கள். இந்தத் தலத்தில் சடாரிக்குப் பதிலாக, வெள்ளியால் ஆன ஸ்ரீராம பாணத்தை வைத்து ஆசி வழங்குகின்றனர், பட்டாச்சார்யர்கள். இந்த ராம பாணத்தில் ஸ்ரீசுதர்சன சக்கரம் இருப்பதாகவும், இந்த ஆசீர்வாதத்தால் வீண் பயம் மற்றும் குழப்பத்தில் இருந்து பக்தர்கள் விடுபட்டு, தெளிவு பெறுவர்; நிம்மதியாக வாழ்வர் என்பது ஐதீகம்!

- பார்வதி சர்மா, சென்னை-53

இஷ்ட ஸித்தி ஸ்தூபி...

கோவை  - மேட்டுப்பாளையம் சாலையில், கொண்டைவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது பாலாஜி கார்டன் பகுதி. இங்கேயுள்ள ஸ்ரீஸித்தி விநாயகர், விசேஷமானவர்!

வாரணாசி, நேபாளம், உஜ்ஜயினி போல், ஸ்ரீவிநாயகரின் நேரடிப் பார்வையிலுள்ள இஷ்ட ஸித்தி ஸ்தூபியை இங்கே தரிசிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில், நம் வேண் டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, இந்த ஸ்தூபியில் கட்டிவிட்டு, விநாயகரைத் தரிசித்துச் சென்றால் போதும், 48 நாட்களுக்குள் நம் கோரிக்கைகளை ஈடேற்றித் தருவார் ஸ்ரீஸித்தி விநாயகர் என்பது நம்பிக்கை!

- ரமா பாண்டுரங்கன், கோவை