Election bannerElection banner
Published:Updated:

`` `வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe

`` `வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe
`` `வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe

`` `வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe

மிழ் எழுத்துலகில் தேனீயைப் போல் இயங்கி வருபவர் பட்டுக்கோட்டை பிரபாகர். பல நூறு சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்  எழுதிக் குவித்தவர். திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார். அவ்வளவு ஏன் இந்த வாரம் வெளியான இமைக்கா நொடிகள் படத்துக்குக்கூட இவர் தான் வசனம்  பட்டுக்கோட்டைபிரபாகரின் ஆன்மிகம் எப்படியானது. அவரது பார்வையில் வழிபாடென்பது என்ன?

அவரைச் சந்தித்துப் பேசினேன்.  

``ஆன்மிகத்துல எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. அதுக்காக நான் நாத்திகவாதியும் கிடையாது. கேள்விகளுடன் இருக்கும் ஒரு மனிதன்... அவ்வளவுதான். என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு. ஆன்மிகத்துல நிறைய கலப்படம் வந்துடுச்சுங்கிறது உண்மை.  பியூரான ஆன்மிகங்கிறது இப்போ இல்ல. 

பார்வை இல்லாதவன் யானையைப் பார்த்த மாதிரி, ஆன்மிகத்துல ஆள் ஆளுக்குக் கருத்துகளை அள்ளிப்போட்டு அதை வேறுமாதிரியான புரிதலுக்குக் கொண்டு போய்விட்டுட்டாங்க. இன்றைய ஆன்மிகங்கிறது அவரவர் புரிதல்ங்கிற மாதிரிதான் இருக்கு. பொதுவான புரிதலுக்கு வந்த மாதிரி எந்த ஆன்மிகமும் இல்ல.

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எல்லா மகான்களும் அன்பைத்தான் போதிக்கிறாங்க. அன்பு மட்டுமே அல்டிமேட்டா இருக்கிறபட்சத்துல, `என் ஆன்மிகம் சிறந்தது, உன் ஆன்மிகம்தான் சிறந்தது'ன்னு சண்டை போட்டுக்கிறதுல எந்தவித அர்த்தமும் இல்ல. 

போக வேண்டிய இடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஒருத்தன், பஸ்சுல போறான். ஒருத்தன் நடந்து போறான். ஒருத்தன் ஃப்ளைட்ல போறான். ஒருத்தன் உருண்டு புரண்டு போறான். அவ்வளவுதானேயொழிய, வேற எதுவும் இல்ல. ஆனா, இந்த ஆன்மிகத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஒவ்வொரு மதமும் சொல்ற சடங்குகள் சம்பிரதாயங்கள்ல எனக்குக் கேள்விகள் இருக்கு. 

அதனால, ஆன்மிகத்துல கேள்விகளுடன் நிற்கிற மனுஷனாத்தான் நான் இருக்கேன். ஆனா, அதுக்காக, அதன் மேல எந்தவித விமர்சனங்களையும் நான் வைக்கமாட்டேன். ஆன்மிகத்துல இருக்கறவங்களை முட்டாள்னு நான் சொல்லமாட்டேன்.

திருமண பந்தத்தைப் பொறுத்தவரை, சீர்த்திருத்த திருமணத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனா, என் குடும்பத்தினருக்கோ சடங்கு சம்பிரதாயத்துடன் நடக்கும் திருமணத்தில்தான் நம்பிக்கை. 

என்னுடைய ரெண்டு மகள்களுக்கும் வைதீக முறையிலதான் திருமணம் நடந்துச்சு. அது, காம்ப்ரமைஸ். அவங்களோட எண்ணங்களையும்  உணர்வுகளையும் மதிக்கணுமில்லையா, அதுக்காக. அதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். ஆனா, என் விருப்பத்துக்காக, தலைவர்கள், பிரபலங்களையெல்லாம் அழைச்சு அவங்க வாழ்த்துரைகளையும் சேர்த்துவச்சு, திருமணத்தை நடத்துனேன். என்னுடைய திருமணமும் அப்படித்தான் நடந்துச்சு. 

கோயிலுக்கு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் கூப்பிட்டாங்கன்னா கண்டிப்பாப் போவேன். அங்கே போயிட்டு, `நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க'னு சொல்லிட்டு வெளியில இருக்க மாட்டேன். அவங்ககூடவே போய் சாமி கும்பிடுவேன். ஆனா, நானாக தனியா ஒருமுறைகூட கோயிலுக்குப் போனதில்ல.   

இந்த மாதிரி, `டிட்டாச்சுடு வித் அட்டாச்மென்ட்டா'தான் நான் இருக்க விரும்புறேன். இதை, `வானப்பிரஸ்த நிலை'னு சொல்வாங்க. எப்பேர்பட்ட மனுஷனும் ஒண்ணு பணத்துல விழுந்துடுவான். இல்ல பாசத்துல விழுந்துடுவான். அந்த இடத்துக்கு நான் இன்னும் வரலை. அதை நோக்கித்தான் நான் பயணம் பண்ணுறேன். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அது பலவிதத்துல வெற்றி தோல்விகளைச் சமமா எடுத்துக்கிறதுக்கு உதவியா இருக்கு. ஆனா, அந்த இடத்துக்கு அவ்வளவு ஈஸியா நம்மால போயிட முடியாது. 

கடவுள், ஆன்மிகம் குறித்த தேடல் எல்லா மனிதர்களிடமும் நிச்சயம் இருக்கும். நானும் 1996-ல ஈஷா யோக மையத்துல தியானம், யோகா  பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். அது என்னை நான் உணர்றதுக்குப் பெரிய அளவுல உதவியா இருந்துச்சு.

சென்னை அடையாறுல இருக்கிற அனந்த பத்மநாபன் கோயிலுக்கு நானும் மனைவியும் வாரா வாரம் போவோம். அப்புறம் சீரடி சாய்பாபா மேல ஈடுபாடு வந்துச்சு. ரொம்ப எளிமையா வாழ்ந்துகாட்டி நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்கிட்டு இருக்கார். 

உண்மையா ஒரு ஞானி எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு சீரடி சாய்பாபாவோட வாழ்க்கை உதாரணமா இருக்கு. சீரடிக்கு நானும் ஒருமுறை போயிட்டு வந்திருக்கேன்'' 

சிலிர்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்!  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு