ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங் களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஆனந்த ராம த்யானம் சம்பூர்ணம் படிக்க ஆவலாக உள்ளேன். இந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கு கிடைக்கும்? இதை அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால், மகிழ்வேன்.

- ஆர்.லக்ஷ்மி, திருவனந்தபுரம்

. க.டந்த சில வருடங்களாகவே, கடும் கழுத்துவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். பல சிகிச்சைகள் மேற்கொண்டும், எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற, ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா? பதிகங்கள் இருக்கிறதா? விபரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தெரிவியுங்களேன்..
- ஆர்.ஏ.பூரணி, சென்னை

எங்கள் பாட்டி, என் சிறுவயதில், தேப்பெருமாநல்லூர் 'அன்னதான சிவன்’ மற்றும் நெமிலி பெரியவர் ஆகிய மகான்கள் குறித்து விவரித்துள்ளார். தற்போது, அந்த மகான்களைப் பற்றி ஏதேனும் நூல்கள் இருந்தால், படிக்க ஆவலாக இருக்கிறேன். அந்தப் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? தகவல் தாருங்களேன்.

- ஸ்ரீநிவாஸ் வெங்கடேஷ், ஜெய்ப்பூர்

அம்பாளின் பெருமையைப் போற்றிச் சொல்கிற 108 ஸ்லோகங்கள் கொண்ட 'ஆனந்த சாகரஸ்தவம்’ தமிழ் அர்த்தத்துடன் படித்து, தினமும் பாராயணம் செய்ய விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தை, எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்? எங்கு கிடைக்கும்? அல்லது அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால், அதன் ஒரு பிரதியை அனுப்பி உதவினால், மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை

கேரளாவின் பந்தனம்தட்டா தாலுகாவில், பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற ஆலயம் ஒன்று இருப்பதாக அறிகிறேன். அந்தக் கோயில் எங்கே இருக்கிறது? அங்கு அருள்பாலிக்கும் ஸ்வாமியின் திருநாமம் என்ன? தமிழகத்தில், பித்ரு தோஷம் போக்குவதற்கும் பித்ரு காரியங்களைச் செய்வதற்குமான முக்கிய தலங்கள் என்ன? தகவல் தந்தால் மகிழ்வேன்.

- வி.சந்திரசேகரன், கூந்தலூர்

'ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்’ படித்துப் பாராயணம் செய்ய ஆவலாக உள்ளேன். அந்த ஸ்லோகத்தின் பிரதியை அனுப்பி வையுங்கள் என்று 22.2.11 இதழில், மயிலாடுதுறை வாசகி என்.லலிதா கேட்டிருந்தார்.

ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்தை, திருச்சி வாசகர் வெங்கட்ராமன் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த ஸ்லோகம் இதோ...

சௌராஷ்ட்ரே சோமநாதச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓங்கார மலேஷ்வரம்
பரல்யாம் வைத்யனாதச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தேதுராமேசம் நாகேச தாருகாவனே
வாரானஸ்ய து விஷ்வேஷம் த்ரயம்பகம் கௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம் குஸ்ருணேக்ஷம் சிவாலயே
ஏதானி ஜோதிர்லிங்கானி சாயம்ப்ராத: படேன்னர்
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினச்யதி!

'சூரிய சதகம்’ எனும் நூல் எங்கு கிடைக்கும் என்று புதுக்கோட்டை வாசகர் எஸ்.சிங்கமுத்து, கடந்த 17.5.11 இதழில் கேட்டிருந்தார்.

'சூரிய சதகம்’ நூல், ஸ்ரீவிவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தர்மபுரி - 636703 எனும் முகவரியில் கிடைக்கும் என்று உடுமலைப்பேட்டை வாசகர் இரா.பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீஅனுமன் கவசம்’ எங்கு கிடைக்கும் என்று கடந்த 28.6.11 இதழில், வாசகர் ஏ.என்.ராமகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

புதுச்சேரி வாசகி தீபா, 'ஸ்ரீஅனுமன் கவசம்’ பிரதியை அனுப்பி வைத்துள்ளார். அதேபோல், லிப்கோ கம்பெனியின் வெளியீடான சுந்தரகாண்டம் நூலில் உள்ள ஸ்ரீஅனுமன் கவச ஸ்லோகங்களை, சென்னை வாசகி ஆர்.மீனாட்சி அனுப்பியுள்ளார். இந்த இரண்டு ஸ்லோகங்களும் வாசகர் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'கடந்த பல வருடங்களாக, சர்க்கரை நோய் மற்றும் கால் வலியால் என் கணவர் அவதிப்பட்டு வருகிறார். இவற்றில் இருந்து மீள்வதற்கு ஸ்லோகங்கள், பரிகார பூஜைகள் ஏதும் உள்ளனவா?’ என்று பெங்களூரு வாசகி ஜனனி, கடந்த 12.7.11 இதழில் கேட்டிருந்தார்.

ஸ்ரீவிநாயகரின் திருவுருவப் படத்தை, கிழக்கு முகமாக வைத்து, ஸ்வாமிக்கு அருகம்புல் மாலை சார்த்தி, தீபமேற்றி, ஸ்ரீவிநாயகர் அகவல் பாடலை, மனமுருகப் பாடி, பாராயணம் செய்து வழிபடுங்கள். பழங்கள் மற்றும் அவல் ஆகியவற்றை, ஸ்ரீகணபதிக்கு நைவேத்தியம் செய்து வணங்குவது விசேஷம்.

மேலும், பூஜை முடிந்ததும், அருகம்புல் சாற்றினை, 48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால், சர்க்கரை நோய் முதலான சகல நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என சென்னை வாசகர் சிவ.மீ.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரும் கோவை வாசகர் சி.கதிர்வேலுவும் திருச்சி - திருவாசி தலத்தில், ஞானசம்பந்தர் பாடிய நோய் தீர்க்கும் பதிகத்தையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பதிகம், வாசகி ஜனனிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'ஸ்ரீநூக்காலம்மன் கோயில் எங்கு உள்ளது? இந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட ஆவலாக உள்ளேன்’ என்று சென்னை வாசகி ஸ்ரீமதி, 26.7.11 இதழில் கேட்டிருந்தார்.

சென்னை - திருவள்ளூர் சாலையில், திருவள்ளூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காக்களூர் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகில் ஸ்ரீநூக்காலம்மன் கோயில் கொண்டிருக்கிறாள் என்று காக்களூர் வாசகர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சேந்த மங்கலம். இங்கிருந்து, கிழக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், சித்தூர் கிராமத்தில் ஸ்ரீநூக்காலம்மன் கோயிலைத் தரிசிக்கலாம் என்று சென்னை வாசகர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமும் பூஜையில், பாராயணம் செய்வதற்கு, 'ஸ்ரீகாமாட்சி அன்னை ஆயிரம் அகவல்’ எங்கு கிடைக்கும் என்று ஹுப்ளி வாசகி டி.ஏ.லலிதா கடந்த 29.11.11 இதழில் கேட்டிருந்தார்.

சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் நிறுவனம்,

'எங்கள் குல தெய்வமம்மா’ எனும் சி.டியை வெளியிட்டுள்ளது. அந்த சி.டி.யில் பாடகர் வீரமணிதாசனின் குரலில் ஸ்ரீகாமாட்சி அம்மனின் அகவல்களை கேட்டு மகிழலாம் என்று சென்னை வாசகி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீகாமாட்சி அன்னை ஆயிரம் அகவல்’ புத்தகப் பிரதியை, அருள்பித்தன் சென்னை பெருங்களத்தூர் வாசகர் காமாக்ஷிதாசன் ஸ்ரீநிவாஸன் அனுப்பியுள்ளார். இவை, வாசகி லலிதாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.