. செ.வ்வாய் தோஷத்தால் திருமணத் தடை ஏற்பட்டு வருந்துபவர்களும் சனி தோஷத்தால் சங்கடம் நேருமோ எனக் கலங்குபவர்களும் ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்தால், சங்கடங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷம் பெருகும் என்கின்றனர் ஈரோடு வாழ் பக்தர்கள்!.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலை விலும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது வ.உ.சி.பூங்கா. இந்தப் பகுதியில்தான் கோயில் கொண்டுள்ளார், ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர்.

பேச்சிப்பாறை எனும் பகுதியில், சுயம்புத் திருமேனியாகக் காட்சி தந்த அனுமன், இங்கே இந்த ஆலயத்தை நிறுவி, பிரதிஷ்டை செய்யப் பட்டார் என்கிறது ஸ்தல வரலாறு. ஸ்ரீமகா கணபதியும் ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயரும் தனித்தனிச் சந்நிதிகளில் கோயில் கொண்டிருக்கின்றனர், இங்கே! சனி பகவானால் பிடிக்கப்படாத ஸ்ரீவிநாயகரும் இங்கு அமைந் திருப்பதால், இதை சனிப் பரிகாரத் தலம் எனப் போற்றுகின்றனர். மேலும், இங்கு வந்து ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீவிநாயகரையும் வழிபட, செவ்வாய் தோஷமும் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை!

இந்தத் தலத்தில், சனிக்கிழமைகளில், ஸ்ரீஅனுமனுக்கு வடை மாலை சார்த்தி வழிபடுவதுடன், பக்தர்கள் நேர்த்திக்கடனாக, எலுமிச்சை மாலை சார்த்தியும் வழிபடுகின்றனர். இதனால், எதிரிகள் தொல்லை இருக்காது; தீய சக்திகள் அண்டாது என்கின்றனர், பக்தர்கள்.

வருடந்தோறும், மார்கழி மூல நட்சத்திர நாளில், ஸ்ரீஅனுமத் ஜயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பால், தயிர், தேன், இளநீர், தயிர் ஆகியவற்றால் அபிஷேகம், பூக்களால் அலங்காரம், 1,008 வடை மாலை மற்றும் வெள்ளிக் கவசம் என அழகுறக் காட்சி தருவார் ஆஞ்சநேயர். இங்கு, செந்தூரத்துடன் ஸ்ரீஅனுமனுக்குச் சார்த்திய வெண்ணெயையும் பிரசாதமாகத் தருகின்றனர்!

கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்