சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!
##~##
நா
கை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது திருக்கடையூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்.

இங்கே, ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், தனிச்சந்நிதியில் காட்சி தரும் இந்த அனுமனைத் தரிசிக்க, எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன்... சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் என ஏந்தியபடி கொள்ளை அழகுடன் திருக்காட்சி தந்தருளும் ஸ்ரீஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியும் கூட!

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற கேட்டை நட்சத்திர நாளிலும் இங்கு வந்து ஸ்ரீஅனுமனை சேவிப்பது கூடுதல் பலனைத் தரும் என்கின் றனர் பக்தர்கள். மார்கழி மூல நட்சத்திர நாளான, ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, வழிபட்டுச் செல்கின்றனர்.

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!

வெற்றிலை மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, வடை மாலை, பூமாலை என பஞ்ச மாலைகளை (ஐந்து மாலைகள்) ஸ்ரீஅனுமனுக்கு அணிவித்து வணங்கினால், அனைத்து தோஷங்களும் நீங்கும். பாரிஜாதப் பூமாலை சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், வடை மாலை, சுண்டல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும். திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்!

உடல் நலம் குன்றியவர்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் என பாதிக்கப்பட்ட வர்கள், நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி (ஒன்பது அகல் விளக்குகள்) ஸ்ரீஅனுமனை வழிபட்டால், தீராத நோயும் தீரும்; எதிரிகள் தொல்லை இனியில்லை; தீய சக்திகள் நம்மை அண்டாது என்கிறார் அனந்தமங்கலம் கோயிலின் மாதவன் பட்டாச்சார்யர்.  

           - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா