சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

தீபமேற்றி வழிபட்டால்... ஒளிமயமான வாழ்க்கை!

தீபமேற்றி வழிபட்டால்... ஒளிமயமான வாழ்க்கை!

தீபமேற்றி வழிபட்டால்... ஒளிமயமான வாழ்க்கை!

டலூரில், கெடிலம் நதிக்கரையில், கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்தான், கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரில் வசிப்பவர்களுக்கு கண்கண்ட தெய்வம்!  

கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது வீர ஆஞ்சநேயரின் திருக்கோயில். அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்தது. பிறகு, வனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீஅனுமன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அன்று முதல், கடலூர் வாழ் அன்பர்களின் கவலைகளையெல்லாம் போக்கி அருள்கிறார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்.

##~##
அமாவாசை நாளில், ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் வாழ்க்கையையே பிரகாசமாக்கி அருள்வார் ஸ்ரீஅனுமன். சனிக்கிழமைகளில் விளக்கேற்றி, வடை மாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம், தடைப்பட்ட முன்னேற்றம் ஆகியவை நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஸ்ரீஅனுமன் ஜயந்தி (மார்கழியின் மூல நட்சத்திர) நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீஅனுமனை மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். இந்தத் திருநாளில், ஸ்ரீஅனுமனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் என அமர்க்களப்படும்.

ஸ்ரீராமநவமி விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதப் பிறப்பின் போது இங்கே நடைபெறும் லட்சதீப பெருவிழாவில் தீபமேற்றி வணங்கினால், இன்னல்கள் யாவும் தீரும்; இன்பம் பொங்க நிம்மதியுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீஅனுமத் ஜயந்தி திருநாளில், இந்தத் தலத்துக்கு வந்து தீபமேற்றி, வழிபடுங்கள். நம் வாழ்வில் ஒளி வீசச் செய்வார், ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

கட்டுரை, படங்கள்: ஆ.நந்தகுமார்