Published:Updated:

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த

Published:Updated:
‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!
‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

மகிழ்ச்சி தழைக்கட்டும்!

ப்ரல் 14-ம் தேதி, சனிக்கிழமையன்று ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நவகிரக ஆதிபத்தியங்களில் சூரியபகவான் ராஜ்ஜியாதி பதியாகவும் தான்யாதிபதியாகவும் திகழ, சனி மந்திரியாகவும், சுக்கிரன் அர்க்காதிபதியாகவும் விளங்க... பிறக்கப்போகும் விளம்பி வருடத்தில், தெய்வங்களுக்கான விழாவைபவங்கள் அதிகம் நடைபெறும். மழைப்பொழிவும் உண்டு. வருஷ தேவதையாக காமதேனு வருவதால், கால்நடைகள் பஞ்சமின்றி திகழும். சுபிட்சம் பெருகும் எனலாம்.  

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

இப்படியான வளமும் வனப்பும் குறையின்றி பெருக, இவ்வருடம் முதல், நமது சங்கடங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் பொங்கிப்பெருகிட, முழுமுதற் தெய்வமாம் கணபதியைக் கைதொழுது வேண்டுவோம். அத்துடன் இவ்வருடத்தின் ராஜ்ஜியாதிபதியாய்த் திகழும் ஆதவனையும் அனுதினமும் துதித்து வழிபட்டு, பிணிகள் தீண்டாத பெருவாழ்வைப் பெற்று மகிழ்வோம்.

ஸ்ரீவிநாயகர் துதி

மண்ணுல கத்திற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணுவன் மலரடி பணிந்து போற்றுவாம்


- கந்தபுராணம் 

மேஷம் 

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்


ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். புதிய நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம்.

3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் - மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், இருவருமே அதைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லதொரு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற் றும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள்.

4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், இனம் புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 முதல் பல வகைகளிலும் வளர்ச்சிப் போக்கைக் காணலாம். மகனுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள்.

30.4.18 முதல் 27.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துப் பிரச்னை களை பேசித் தீர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை கேது 10-லும், ராகு 4-லும் இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மகனுக்கு வெளிநாட்டில் வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாயின் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அவசரம் வேண்டாம்.

13.2.19 முதல் கேது 9-ல் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

3-ல் ராகு அமர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். 2.8.18 முதல் 30.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், பயணத்தின்போது கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 9-ல் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். வேற்றுமொழி பேசும் அன்பர்களால் எதிர்பாராதவகையில் சில உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டு விட்டதாக அடிக்கடி நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும், பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ஆனி, ஆவணி, தை, மாசி ஆகிய மாதங் களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங் களும் கையெழுத்தாகும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவற்றை நீங்களே முன்னின்று நடத்துவது நலம் பயக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன், அதுபற்றி சட்ட நிபுணரின் ஆலோசனையைக் கேட்பது மிக அவசியம். தை, மாசி மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்ப தாக அமையும்.

பரிகாரம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புத்தூர் எனும் ஊரில் அருளும் சுப்ரமணியரை, சஷ்டி திதி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்


உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வருடம் பிறப்ப தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்தஸ்து உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 6-ல் மறைந்து இருப்பதால், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். விலையுயர்ந்த பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், போட்டி, பொறாமைகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 13.3.19 முதல் வீண் அலைச்சல், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருக்கும் பூர்வீகச் சொத்தில் அதீத கவனம் செலுத்தவும்.

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். கடந்தகால இழப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும் ராகு 2-லும் அமர்வதால், மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக்கொள்வது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத் தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. 31.8.18 முதல் 1.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.கணவன் - மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.

 30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 9-ல் இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பாதிப் பணம் தந்து பதிவு செய்யாமல் இருந்த சொத்தை, மீதிப் பணம் தந்து பதிவு செய்து கொள்வீர்கள். சகோதரர்களுடன் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தை சிலநேரங்களில் கோபப் பட்டாலும், நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

அஷ்டமத்தில் சனிபகவான் தொடர் வதால், வியாபாரத்தில் புதியவர்களை நம்பிக் கடன் தரவேண்டாம். ஆடி, ஐப்பசி மாதங்களில் பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும். வர்த்தக சங்கத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றவேண்டிய நிலை ஏற்படும். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகப் பணியின் காரணமாக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். ஆனாலும், உத்தியோகத்தில் நீடிப்பது பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வந்து சேரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடின உழைப் பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

தஞ்சை மாவட்டம், மணலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை, ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று வழிபட்டு வாருங்கள். நோய்கள் நீங்கும்; நன்மைகள் பெருகும்.

மிதுனம்

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்


உங்கள் ராசிக்கு 10-ல் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை உழைத்த உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு 5-ல் இருப்பதால், அறிஞர்களின் நட்பால் சில விஷயங் களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 6-ல் மறைவதால், வரவுக்கு அதிகமான செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்திலும் கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் ஏற்பட்டு நீங்கும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசாரத்தில் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகை களை வாங்குவீர்கள். தெய்வ நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள்.

2.1.19 முதல் 29.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் - மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.  வருடம் முழுவதும் சனிபகவான் 7-ம் வீட்டில் கண்டகச் சனியாகத் தொடர்கிறார். புதிய நண்பர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 8-ல் இருப்பதால், சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

 புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், வாகன பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் அமர்வதால், உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க் கவும். மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வியாபாரத்தில் சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங் களை நுணுக்கமாக கவனித்து, பெரிய முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்து வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள்.

ஹார்டுவேர், ஓட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். என்றாலும் கண்டகச் சனி தொடர்வதால், கூட்டுத் தொழிலைத் தவிர்ப் பது நல்லது. பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும். மூத்த அதிகாரி சில முக்கிய ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகளைத் திரும்பப் பெறுவீர்கள். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சமூகத்தில்  உங்களுக்குப் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளை, ஒரு சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்துமுடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் உணர்வுபூர்வமாக அணுகாமல் யோசித்து முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் 5-ல் அமர்வதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். மகனுடைய உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.  13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்கள் ஏற்படும். சேமிப்புகள் கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த தடை விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.

30.1.19 முதல் 24.2.19 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு பிரச்னை போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும், கேது 6-லும் அமர்வதால், உடல் ஆரோக்கியம் தொடர்பான வீண் கவலையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணை யுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திருமணத் தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியம் பாதிக்கப்படக்கூடும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டும். வெளிநாட்டு நிறுவனம், புகழ்பெற்ற நிறுவனம் என்று வரும் விளம்பரங்களை நம்பி, விசாரிக்காமல் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யவேண்டாம். வைகாசி, ஆனி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், உங்களது திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கடுமையாக உழைத்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல்களைத் தந்தாலும், அனுபவ அறிவால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

ஈரோடு மாவட்டம், பவளமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமியை, பூசம் நட்சத்திர நாளன்று வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,


வருட ஆரம்பம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிறப்பதால், வேலைகளைப் போராடி முடிக்கவேண்டியது வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் துரத்தும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் திருமணத்தை முன்னிட்டு கடன் ஏற்படக்கூடும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராகு 12-லும் கேது 6-லும் தொடர்வதால், நீண்டகாலமாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டா கும். விழாக்கள், விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.

கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்தி ருப்பதால், சில வேலைகளை இரண்டு மூன்று முறை போராடித்தான் முடிக்க வேண்டியிருக்கும். பேச்சால் பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, கவனம் தேவை. 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 4-ல் அமர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழிச் சொத்தைப் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். மற்றவர்களின் ஆலோசனையை அப்படியே ஏற்காமல், சிந்தித்து முடிவு செய்வது நல்லது. சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று தீர விசாரிக்கவும்.

ஆனால், 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 5-ல் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்லதொரு வேலையும் அமையும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 5-ல் நீடிப்பதால், தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள்.  மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர் பான முயற்சிகள் தாமதமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.

25.2.19 முதல் 21.3.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், கணவன்-மனைவிக்கிடையில், வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும்; பொறுமை அவசியம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைக்கு அலர்ஜி போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 6-ல் சேர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

வியாபாரத்தில். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். பங்குனி மாதத்தில் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத் திலிருந்து புதிய பங்குதாரர் வர வாய்ப்பு இருக்கிறது. உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வைகாசி மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் பிற்பகுதி உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி எனும் ஊரில் அருளும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

கன்னி

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்


இந்த வருடம் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பொது இடங்களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு லாப வீட்டில் இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மன உறுதி உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ல் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

 14.4.18 முதல் 3.10.18 வரை குருபகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங் கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். 4.10.18 முதல் குரு 3-ம் இடத்தில் அமர்வதால், காரியங்களை முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். சில நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும், தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் சேரும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 4-ல் அமர்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் அதிகரிக்கும்.

22.3.19 முதல் 13.4.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆண்டு முழுவதும் சனிபகவான் 4-ல் தொடர் வதால், வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சொத்து வாங்கும்போது பத்திரங்களை உரிய சட்ட நிபுணரிடம் காட்டி, அவருடைய ஆலோச னையைப் பெறவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம், விலை உயர்ந்த நகைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 5-ல் இருப்பதால், கர்ப்பிணிகள் அடிக்கடி உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரியின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிப்பது நல்லது.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து, விற்பனையையும் லாபத்தையும் அதிகரிப்பீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள்.

மார்கழி, தை மாதங்களில் புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். பங்குதாரர்கள் கோபப்பட்டாலும், நீங்கள் பொறுமையாக அனுசரித்துச் செல்லுங்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள் வீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாகக் காணப்படும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தொலைநோக்குச் சிந்தனையால் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

நாகை மாவட்டம், தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியை, அஷ்டமி திதிநாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; தீவினைகள் யாவும் நீங்கும்.

துலாம்

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்


உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களை தலைநிமிர வைக்கும். சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம் பிக்கை பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். தேவையில்லாத பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், குடும்பத்தில்  இதுவரையிலும் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உங்கள் குடும்பத்தில் வீண் கலகத்தை ஏற்படுத்திவந்த ஏற்படுத்திய சுற்றத்தாரை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.

 14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச் சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகமாகும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். 

13.2.19 முதல் 9-ல் ராகு நுழைவதால், நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

30.04.18 முதல் 27.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

நெருக்கமானவர்களுடன் மனவருத்தம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்துத் தகராறுகள் வந்து செல்லும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள்.

வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பற்று-வரவு உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.  பெரிய நிறுவனங்களுடன் ஏற்படும் புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.  அலுவலகச் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையும். மார்கழி, தை மாதங்களில் பதவி உயர்வுக் காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்குவதுடன், அடுத்தடுத்து உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்


கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை


உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். 

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவை யான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக் குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

3.10.2018 வரையிலும் குரு தரும் பலனால், திடீர்ப் பயணங்கள் மற்றும் திடீர்ச் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாள்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து போகும் வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால், அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வாரிசுகள் இல்லாமல் வருந்திய தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேது வுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.

வருடம் பிறக்கும் முதல் 12.2.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3-ல் நிற்பதால், சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். 13.2.2019 லிருந்து வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால், குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த் திடுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆவணி மாதம் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்கு தாரர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புதிய வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பெரிய மனிதர் களின் நட்பையும், வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.

தனுசு

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்


 இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.

ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தரவேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு ஏற்கவும்.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.

வருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் அசெளகரியங்களும் உண்டு. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டி யாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட் களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும்.

புரட்டாசி மாதங்களில் புதிய பங்குதாரர் கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.

மொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களை எல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

திருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்


உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பி-கள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வீடுகட்ட திட்ட அனுமதி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.

 3.10.2018 வரை குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆனால், அவை பலனளிக்காது.

4.10.18 முதல் 12.3.19 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சில நல்ல மனிதர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி 12-ல் மறைவதால் செலவுகள் அதிகமாகும். நல்ல விஷயத்துக் காக வெளியே கடன்வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வு ஏற்படும். 13.2.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால், ஆரோக்கியம் மேம்படும். மகளுக்குத் திருமணம் கூடிவரும்.

இந்தாண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால், வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

15.5.2018 முதல் 8.6.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், சண்டைச் சச்சரவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள், வந்துபோகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்னைகளும் வரும்.

 30.4.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் சேர்வதால், உடல்நலம் பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. சகோரர்களால் அலைச்சல்களும், செலவினங்களும் உண்டாகும்.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சித்திரை, ஆனி ஆகிய மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்கு தாரர்களுடன் அவ்வப்போது சிற்சில சச்சரவுகள் வரக்கூடும். புது ஏஜென்சி எடுக்கும்போது யோசித்துச் செயல்படுங்கள்.

அவ்வப்போது சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று-வரவு உயரும்.

உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்ற குழப்பமும் டென்ஷனும் அதிகரிக்கும்.

மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்வழியில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மார்கழி, தை ஆகிய மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையவும் வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சங்கடங் களைச் சமாளிக்க வைத்து, சாதனையை நோக்கி உங்களை நகர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.

கும்பம்

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி  1,2,3-ம் பாதம்


இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால், பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

3.10.2018 வரை குரு 9-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலைப்பளு குறையும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி லாப வீட்டில் வந்து அமர்வதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் யோகம், பணவரவு உண்டு.

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 12-ம் வீட்டில் நிற்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ல் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவர்.
 
13.2.2019  முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலம் சரியாகும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் வரக்கூடும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.

 9.6.2018 முதல் 4.7.2018 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், சின்னச்சின்ன வாகன விபத்துகள் வரும் என்பதால், கவனமாக பயணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக் கெல்லாம் சண்டை வரும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகளைச் செய்யுங்கள். அதிக வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வரும். கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். சித்திரை, ஆடி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்யவேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளைப் பகைக்கவேண்டாம். மாசி மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், விடாமுயற்சி யாலும் கடும் உழைப்பாலும் உங்களுக்கு முன்னேற் றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

 தர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.

‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்!

மீனம்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப் பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.

இந்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் நல்ல விதமாக நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

 13.3.2019 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

5.7.2018 முதல் 1.8.2018 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவர். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.

14.4.2018 முதல் 12.2.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமையை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்கு களை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கை யாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக் கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், வசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம்

தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.