Published:Updated:

புதிய புராணம்! - தெய்வ சித்தம்!

புதிய புராணம்! - தெய்வ சித்தம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - தெய்வ சித்தம்!

ஷங்கர்பாபு - ஓவியம்: ம.செ

புதிய புராணம்! - தெய்வ சித்தம்!

ஷங்கர்பாபு - ஓவியம்: ம.செ

Published:Updated:
புதிய புராணம்! - தெய்வ சித்தம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - தெய்வ சித்தம்!

காபாரத யுத்தத்தில் கௌரவர்கள் வெற்றி பெற வேண்டுமெனில் என்ன நடந்திருக்க வேண்டும்? அர்ஜூனனை பாண்டவர்கள் இழந்திருக்க வேண்டும். அதற்குக் கர்ணனிடம் இருந்த `சக்தி ஆயுதம்’ ஒன்றே போதும்.    

புதிய புராணம்! - தெய்வ சித்தம்!

கர்ணனிடமிருந்து கவச-குண்டலங்களை யாசித்துப் பெற்ற இந்திரன், கர்ணனுக்கு சக்தி ஆயுதத்தை அளித்திருந்தான். இதுவொன்று போதும் அர்ஜுனனை வீழ்த்த. ஆனால், நடந்ததோ வேறு!

`எனில், போரின் துவக்கத்திலேயே இந்த ஆயுதத் தைப் பயன்படுத்தி அர்ஜுனனை வீழ்த்தியிருக்கலாமே’ என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். நம் சார்பில் அன்றே இதுபற்றி சஞ்சயனிடம் கேட்டு விட்டார் திருதராஷ்டிரன். பதிலை அறியுமுன் நமக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வோம்.

வாழ்வில் நீங்கள் ஏமாற்றத்தைச் சந்தித்திருக் கிறீர்களா? நன்றாக முயற்சி செய்தும் தோல்வி வாய்த் தது ஏன் எனும் குழப்பத்துக்கு நீங்கள் ஆட்பட்டது உண்டா?

இந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலானோர் `ஆம்' என்றே பதில்சொல்வார்கள். காரணம் என்ன? இதற்கும் சேர்த்தே விளக்கம் தருகிறது பாரதம்.

போர் துவங்குமுன் சக்தி ஆயுதத்தைப் பிரயோகித்து அர்ஜுனனை வீழ்த்திவிட வேண்டும் என்றே கெளரவர் தரப்பில் முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், போர் துவங்கிய பின் நிலைமைகள் மாறின. கடோத்கஜனை வீழ்த்த கர்ணனுக்கு சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், அர்ஜுனன் தப்பித்துவிடுகிறான். `தெய்வ சித்தமே இதற்குக் காரணம்’ என்று விளக்குகிறார் சஞ்சயன்.

நமது கதையும் இப்படித்தான். என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால், செய்யத் தோன்றவில்லை. எல்லாம் சரியாகத்தான் செய்தோம். ஆனால் நினைத்தது நடக்கவில்லை. எனில், காரணம்?

தெய்வ சித்தம்!

எங்கெல்லாம் நமது அறிவால் காரணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ, அங்கெல்லாம் தெய்வ சித்தம் நிறைவேறுகிறது என அறிந்துகொள்ள வேண்டும்.

எது நம் கட்டுப்பாட்டைத் தாண்டி நடக்கிறதோ... அது தெய்வ சித்தமே என்பதை உணர வேண்டும்.

நமது உடம்பிலேயேகூட சில செயல்பாடுகள் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்; சிலவை கட்டுக்குள் அடங்காதவையே!

மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டது. நமக்குத் தெரியாத விஷயங்களைக் கணக்கிடவே இயலாது. எது தேவையோ அதை அறிவதற்கான வாய்ப்பும் வசதியும் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவையில்லாததும், அவசியமற்றதும் நமக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன.

உங்களின் இதயம்தான் உங்களின் மூளைதான் என்றாலும் அவற்றின் செயல்பாடுகளில் உங்களால் நேரடியாகத் தலையிட முடியாது. காரணம், கடவுளுக்கு உங்களது செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை. எனவே, அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பை உங்களுக்கு வழங்காமல், உங்களை உங்களிட மிருந்தே பாதுகாக்கிறார்! அதுவே கடவுளின் விருப்பம்!

சிறிது யோசித்தால்... புரியாத விஷயங்களும், சாமானிய மூளைகளுக்கு எட்டாதவையும் பூமியில் இருப்பதும்கூட ஒருவகையில் நல்லதுக்குத்தான் என்றும், அவற்றைப் பற்றிய விஷயங்கள் புரிந்து விட்டால் வாழ்வின் சுவாரஸ்யம் போய்விடும் என்றும் தோன்றுகிறது!

எனில், எதையும் எதிர்மறையாக்கி நம்மைக் கஷ்டப்படுத்துவது மட்டும்தான் தெய்வத்தின் சித்தமா?

வேடன் ஒருவன் எய்த அம்பு, ஜோடிப் பறவைகளில் ஆண் பறவையைக் கொன்றுவிட, பெண் பறவை அலறுகிறது. தீயில் வீழ்ந்து தானும் மாய்ந்துபோகிறது. அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் இதைக் கண்டு பெண் பறவையின் பரிதாப நிலையைக் காணச் சகிக்காமல் வேடனைச் சபித்துவிடுகிறார். ஆனால், அந்தச் சாபம் சாதாரண வார்த்தைகளாக இல்லாமல் ஒரு கவிதை போன்று ஸ்லோகங்களாக அமைகிறது.

முனிவருக்குத் தன்னையே நம்பமுடியவில்லை... ‘நாமா இப்படி கவிதை நடையில் பேசினோம்?’ என்று வியக்கிறார்.

அப்போது, `இது இறையருளால் வாய்த்தது' என்று அவருக்கு உணர்த்தப்பட்டது. அத்துடன், `ராமனின் கதையை இதுபோன்று இனிய ஸ்லோகங்களால் பாடவும்' என்ற அறிவுறுத்தலும் அவருக்குக் கிடைத்தது. ராமாயணம் பிறந்தது!

ஆம்! நடந்தது எதுவுமே அவரது சித்தப்படி நடக்க வில்லை; தெய்வ சித்தமே நடத்தியது. நமது வாழ்விலும் இப்படியான தருணங்கள் வாய்ப்பதுண்டு. ஆனால், நாம்தான் கவிதையை உணராமல் காயத்தை மட்டும் பத்திரப்படுத்திக்கொள்கிறோம்!

நடப்பது அனைத்தும் இறைச்சித்தப்படியே என்பதை உணர்ந்துகொண்டால்,  அதன் பிறகு நமது வாழ்வில் குறையொன்றுமில்லை!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism