Published:Updated:

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்
பிரீமியம் ஸ்டோரி
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

Published:Updated:
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்
பிரீமியம் ஸ்டோரி
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

விளம்பி வருடம் சித்திரை மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி வருடம்  வைகாசி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  ஆனி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம் ஆடி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  ஆவணி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  புரட்டாசி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  ஐப்பசி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  கார்த்திகை மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  மார்கழி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  தை மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்


விளம்பி  வருடம்  மாசி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

விளம்பி  வருடம்  பங்குனி மாத பஞ்சாங்கத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

இந்த வருடம் இப்படித்தான்!

‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்


ங்களரகமான விளம்பி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை, காலை 6 மணி 55 நிமிடத் துக்கு, 14.4.18 அன்று பிறக்கிறது. அன்றையதினம் கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்தில்... நவாம்சத்தில் சிம்ம லக்னம், சிம்ம ராசியிலும், மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாமகரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில் சனி புத்தியிலும் கேது அந்தரத்திலும் வெற்றிகரமான விளம்பி வருடம் பிறக்கிறது.  

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

விளம்பி வருட வெண்பா...

விளம்பி வருடம் விளைவு கொஞ்சம் மாரி
அளந்து பொழியும் அரசர் களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதா குங்கொடுமை
ஆவா புகலரி தாம்.

-  என்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடல்படி, இவ்வருடத்தில் மழை விட்டுவிட்டு திட்டுத்திட்டாகப் பொழியும். நாட்டை ஆள்ப வர்கள் வேலியே பயிரை மேய்வது போல் நடந்து கொள்வார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்த விளம்பி வருடம் பிறப்பதாலும், மழைக்கோள் சுக்கிரனின் போக்கு சாதகமாக இருப்பதாலும், விவசாயம் பாதிக்காத அளவுக்கு  மழை உண்டு. என்றாலும், சனிக் கிழமையில் இந்தாண்டு பிறப்பதால் ஒரு சில இடங்களில் நெற்பயிர், வேர்க்கடலை போன்ற பயிர்கள் பூ வைத்து காய்க்கும் தருணத்தில், மழையின்றி பாதிப்படைய வாய்ப்புள்ளது. பூச்சி, எலி மற்றும் காட்டுப்பன்றிகளின் தொல்லையாலும் விவசாயம் பாதிக்கும்.

இந்தாண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் நாடாள்வோருக்கு சாதகம் உண்டாகும். பணத்தட்டுப்பாடு குறையும். ரியல் எஸ்டேட் ஓரளவு வளர்ச்சி பெறும். மணல் தட்டுப்பாடு நீங்கும். கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறையில் குறைகள் களையப்படும்.

மந்திரியாக சனி பகவான் வருவதால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்குள் ‘ஈகோ’ பிரச்சனை அதிகரிக்கும். மலைக் காடுகள் அழியும். வனவிலங்குகளின் எண்ணிக்கை குறையும். அரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும்.

அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால், மக்களிடையே சொகுசு வாழ்க்கைக்கான ஆசைகள் அதிகமாகும். கலையுணர்வு பெருகும். வாசனைத் திரவியங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் மற்றும் தங்கநகைகளின் விலை அதிகரிக்கும்.

மேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். சாம்பல் நிற மேகங்கள் திரளும். நதிகளை இணைக்கத்திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் இனங்கண்டறியப்பட்டு ஆழப்படுத்தப் படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவமழை சீராக இருக்காது. பருவம்
தவறி மழை பொழியும்.

 சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் தந்து பட்ஜெட்டில் பெருமளவு நிதியை ஒதுக்கும். எல்லை தாண்டி வரும் தீவிரவாதம் கடுமையாக ஒடுக்கப்படும். அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்படும். ராணுவத் துறையில் இருப்பவர்களுக்கு சம்பளம் கூடும். சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேகமான நவீன புதிய செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும்.

ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தட்பவெட்ப நிலை மாறி மாறி வரும். விபத்துகள் அதிகரிக்கும். விளம்பி வருடம் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனிபகவான் சேர்ந்து காணப்படுவதால் உலகெங்கும் வன்முறைகள் அதிகரிக்கும். மின்கசிவால் தீ விபத்துகளும், அழிவும் ஏற்படும். விளைநிலங்களின் பரப்பளவு புதிய தொழிற்சாலைகளின் வரவால் குறையும். சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும்.

தனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். திருதியசஷ்டமாதிபதியாக புதன் வருவதாலும், புதன் நீச கதியில் நிற்பதாலும் அரசு பொதுத் தேர்வுகள் கடுமையாகும். அனுமதியில்லாத கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.

கம்ப்யூட்டர் துறையில் மீண்டும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆசிரியப் பணிக்கு அதிகமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பாக்ய விரயாதிபதியாக குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும். புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும். வெளிநாட்டில் இருக்கும் குற்றவாளிகள் சரணடைவார்கள். 

எனினும்,  இந்த விளம்பி வருடம் கடந்த வருடத்தைக் காட்டிலும் மக்களிடையே மகிழ்ச்சியையும், பணவரவையும் தருவதாக அமையும்.

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

இந்த வருடத்தில் கிரகணங்கள்...

ஆடி மாதத்தில் சந்திர கிரகணம்

வி
ளம்பி வருடத்தில் ஆடி மாதத்தில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

விளம்பி வருடம் ஆடி மாதம் 11 - ம் தேதி (27.7.2018) வெள்ளிக்கிழமை அன்று, உத்திராடம் நட்சத்திரம் 4-ம் பாதம் மகர ராசியில் இரவு 11.54 -மணிக்கு சந்திரனை தென்மேற்கு திசையில் கேது பிடியில் கிரகணம் துவங்குகிறது. 28.7.2018 அன்று பின்னிரவு 1.52 மணிக்கு அதிகமாகி, பின்னிரவு 03.49 மணிக்கு வடகிழக்கு திசையில் விடுகிறது.

சந்திர கிரகணத்தின் பலன் 

டி மாதம், தட்சிணாயணம் கிரீஷ்ம ருதுவில் பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் கிருத்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் ப்ரீத்தி செய்யவேண்டும்.

இவர்கள் அருகிலுள்ள அம்மன் ஆலயங்களுக்குச் சென்று நெய்விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவதால், சுப பலன்கள் அதிகரிக்கும். மனச் சஞ்சலங்கள், உடற்சோர்வு முதலான பிரச்னைகளும் நீங்கி உள்ளமும் உடலும் பொலிவு பெறும்.

சூரிய கிரகணம்

விளம்பி வருடம் ஆனி மாதம் 29-ம் தேதி (13.7.2018) வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரம் அன்று ஏற்படும். ராகு கிரஸ்தம் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

அதேபோல், ஆடி மாதம் 26-ம் தேதி (11.8.2018) அன்று ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு கிரஸ்தத்திலும், மார்கழியில் 22-ம் தேதி (6.1.2019) பூராடம் நட்சத்திரத்தில் கேது கிரஸ்தத்திலும் சூரிய கிரகணம் ஏற்படும். இந்தியாவில் தெரியாது.

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

இந்த வருடத்தில் கிரகப்பெயர்ச்சிகள்

குருப்பெயர்ச்சி


நி
கழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18 - ம் தேதி வியாழக் கிழமை (4.10.2018) குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்
‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

ராகு, கேது பெயர்ச்சி

நி
கழும் விளம்பி வருடம் மாசி மாதம் 1-ம் தேதி புதன்கிழமை (13.2.2019) ராகு பகவான் கடகத்திலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகரத் திலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.