Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

ஒவியம்: இளையராஜா

ஆன்மிக துளிகள்

ஒவியம்: இளையராஜா

Published:Updated:
ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

விநாயகருக்கு அர்ச்சனை

றுகம்புல் விநாயகருக்கு உகந்தது நமக்குத் தெரியும். அதே போல் வன்னி இலை மற்றும் மந்தாரை மலர்களாலும் பிள்ளை யாரை அர்ச்சனை செய்து வழிபடலாம் என்பர் பெரியோர்கள். `இந்த இலைகளைக்கொண்டு தம்மை வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் விலகும், இஷ்ட காரியங்கள் கைகூடும்’ என்பது பிள்ளையார் பெருமானின் அருள்வாக்கு என்கின்றன புராணங்கள். காரணம் என்ன தெரியுமா? 

ஆன்மிக துளிகள்

மந்தரான் - சமி என்ற தம்பதி, பிள்ளையாரைப் போன்றே உருவம் கொண்ட புருசுண்டி முனிவரை, அவரது உருவத்தைக் கண்டு கேலி செய்தார்கள். அதனால் கோபம் கொண்ட முனிவர், அவர்களை மரங்களாகும்படி சபித்தார். பின்னர் தவறு உணர்ந்து வருந்திய அந்தத் தம்பதியிடம், ‘‘வருந்தாதிர்கள். மரங்களாகித் திகழப்போகும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொண்டு அருள் பாலிப்பார்’’ என்று ஆற்றுப்படுத்தினார். அதன்படியே நடந்தது. மந்தாரனின் குருவான செளனக முனிவர், வன்னி-மந்தாரை மரங்களின் அடியில் இருந்த விநாய கரை வழிபட்டு தவமிருக்க, அதனால் மகிழ்ந்த விநாயகர், மேற் சொன்னதுபோல் வன்னி மரத்துக்கும், மந்தாரை மலருக்கும் மகிமைகூட அருள்பாலித்தாராம்.

- எஸ்.கீர்த்தனா, சென்னை-4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லதே நடக்கும்

‘அ
ப்பாவுக்கு ஏழரைச் சனி, எனக்கு பத்தில் குரு...’ என்றெல் லாம் அம்மா புலம்பிக்கொண்டிருக்க, பக்கத்துவீட்டு தாத்தா மிக அருமையான பாடலைச் சொல்லிக்கொடுத்தார். மேலும் அவர் அறிவுரைப்படி நானும் என் அம்மாவும் தினமும் அந்தப் பாட லைப் பாடி, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளிப் பூக்களும் சமர்ப்பித்து முருகனை வழிபட ஆரம்பித்தோம். 

ஆன்மிக துளிகள்மெள்ள மெள்ள பிரச்னைகள் விலகின. மன சஞ்சலங்களும் இப்போது இல்லை. தாத்தா சொல்லிக்கொடுத்த பாடல் இதுதான்

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னில்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே


அருணகிரி நாதர் அருளிய கந்தரந்தாதிப் பாடல் இது. அனு தினமும் இப்பாடலைப் பாடி வழிபட நவகிரகங்களும் நல்லதே செய்யும்.

- ரமா பிரபா, மதுரை-3

தெரிந்துகொள்வோம்...

சி
வ சகஸ்ரநாமம், மகாபாரதத்தில்  அனுஸாஸன பர்வதத்தில் உள்ளது. இது, பகவான் வாசுதேவனால் அருளப்பட்டது. 

அர்ஜுனனின் வில் காண்டீபம், ஸ்ரீராமனின் கரத்தில் இருக்கும் வில் கோதண்டம் என்பது நமக்குத் தெரியும். பரமேஸ்வரனின் கையிலுள்ள வில்லுக்கு என்ன பெயர் தெரியுமா? பிநாகம்!

நாரதர் கையில் உள்ள - வீணையின் பெயர் - மகதி. பக்த பிரகலாதனின் மகன் விரோசனன். இந்த விரோசனன் மைந்தனே மகாபலி. இவர், முற்பிறவியில் எலியாகத் திகழ்ந்து, சிவாலயத்தின் தீபத்தைத் தூண்டிவிட்ட புண்ணியத்தால் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்தார்.

- உமா வெங்கடேசன், சென்னை

வீட்டில் விளக்கேற்றும் போது...

னுதினமும் காலையும் மாலையும் சந்தியா காலங்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். திருவிளக்குக்கு மலர்கள் சமர்ப்பித்து தீபம் ஏற்றி வழிபடும்போது, கீழ்காணும் பாடலைப் பாடி வணங்கலாம்.

முடிவிலா ஆற்றல் உடையாய் போற்றி
மூவுலகுந் தொழ மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி


நல்ல நாள் கிழமைகளில் இந்தப் பாடலைப் பாடி திருவிளக்கு நாச்சியாரை வழிபடுவதால், வீட்டில் சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; சுபிட்சம் பெருகும்.

- பிரியா மனோகரன், திருச்சி-2

பாலமுருகனுக்கு பழப்பாயசம்!

தி
ருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை யிலிருந்து சுமார் 13 கி.மீ தூரத்தில் உள்ளது ஆய்க்குடி. பிரசித்திப்பெற்ற முருகன் திருத்தலம் இது. இங்கு அருள்பாலிக்கும் பால சுப்ரமணியருக்கு, பழப் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டும் வரங்கள் விரை வில் கிடைக்கும்; எடுத்துக்கொண்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

-இல.வள்ளிமயில், திருநகர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism