Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

நாங்கள் தெலுங்கு பிராமணர்கள் (பட்டைய வம்சம்; காசிப கோத்திரம்; கொழிஞ்சி நாட்டவர்கள்). எங்களின் குலதெய்வம் எது என்று தெரிய வில்லை. திருப்பதி ஸ்ரீவேங்கடா சலபதிதான் குலதெய்வம் என்கின்றனர் சிலர். இன்னும் சிலர், 'உங்களின் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும்’ என்கின்றனர். விவரம் தெரிந்த அன்பர்கள், எங்களின் குலதெய்வம் எது என்று தெரிந்தால், சொல்லுங்களேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- என்.பத்மாவதி, உடுமலைபேட்டை

கொல்லிமலை - ஸ்ரீஅறப்பளீஸ் வரர் பற்றிய நூறு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடலை மனனம் செய்து, சிவனாரை வழிபட ஆசை! சிறிதான கையடக்கப் பிரதியாக வெளியாகி இருந்ததாக ஞாபகம். இந்த நூல் எங்கு கிடைக்கும்? தகவல் தந்து உதவினால் மகிழ்வேன்.  

- எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர்

நாங்கள் தொண்டை மண்டல சைவ முதலியார் வகுப்பைச் சேர்ந்த வர்கள் (மங்கலக்கிழார் கோத்திரம்). பலவருடங்களாகவே எங்களின் குல தெய்வம் குறித்து எதுவும் தெரிய வில்லை. இதுகுறித்து அறிந்தவர்கள், குலதெய்வக் கோயில் எங்கே உள்ளது; எப்படிச் செல்வது எனும் விவரங்களைத் தெரிவித்தால், வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும்!

- கணேஷ், திருச்சி-3

ஸ்ரீமத் பாகவதம் தமிழில் விளக்கங்களுடன் எங்கு கிடைக்கும்? அறிந்த அன்பர்கள் தகவல் தாருங்களேன்!

- அ.கிரிராசன், சைதாப்பேட்டை, ஆரணி

##~##
வி
நாயக சதுர்த்தியன்று, அவருக் குப் பிடித்த 21 பத்ரங்களைக் (இலைகள்) கொண்டு, அர்ச்சித்து வழிபடுவது விசேஷம் என்கின்றனர். 21 பத்ரங்களும் என்னென்ன? எங்கு கிடைக்கும்?

- சுதாகிருஷ்ணன், சென்னை-64

பிரம்மாண்ட மகா புராணம் எனும் நூல், திருத்தலங்களின் பெரு மைகளை விவரிக்கும் புத்தகமா? இந்தப் புத்தகத்துடன், தமிழில் பத்ம புராணத்தை அழகுற விளக்கும் நூலையும் தேடி வருகிறேன். எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்கள்.

- வே.குணசேகரன், சென்னை-23

சிவகாசி அருகில் உள்ள வில்வ நத்தம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கார்காத்தார் இனத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள். வங்காநடை கோத்திரம் என்பர். கடந்த இரண்டு தலைமுறையாகவே, எங்களது குல தெய்வம் தெரியவில்லை. இதுகுறித்து விவரம் தெரிந்தவர்கள், தகவல் தாருங்களேன்.

- எஸ்.ரவிச்சந்திரன், பெரியாண்டிபாளையம்

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'பெண்ணுக்கு 21 வயதாகியும் பூப்படைய வில்லை என்றும், குடும்பத்தில் மாதவிடாய்க் கோளாறால் பெண்கள் நிறைய பேர் அவதிப்படுகிறோம்’ என்றும் தெரிவித்ததுடன் வழிபடும் தலம் குறித்துக் கேட்டிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

பெண்கள், பூப்படையாமல் இருப்பதை ருதுபூரண தோஷம் என்பார்கள். கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமானில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஆண்டாங்கோயில்.  இந்தத் தலத்து அம்பிகைக்கு, மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்து, மருதாணி பூசி, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, இடித்த எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டால், ருதுபூரண தோஷம் விரைவில் விலகும்; சீக்கிரமே பூப்படைவார்கள்; மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். வெள்ளை உளுந்து களி மற்றும் பிட்டு ஆகியவை நைவேத்தியம் செய்வதும் சிறப்பு என்று மதுரை வாசகி எம்.என்.லலிதா தெரிவித்துள்ளார்.

பாபநாசம் சிவனின் பாடல் கள் எங்கு கிடைக்கும் என்று பெல்லாரியில் இருந்து வாசகி மைதிலி ஸ்ரீநிவாசன் கேட்டிருந்தார்.

சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் கிரி டிரேடிங் நிறுவனத்தார் (044 - 2494 0376), பாபநாசம் சிவனின் பாடல்களை, ஸ்வர சாகித்யங்களுடன் அழகுற (9 தொகுதிகளாக) வெளியிட்டுள்ளனர் என்று சென்னை வாசகர் எம்.ஏ.ராஜ சேகரன் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் சிவனின் மகள் மாதுஸ்ரீருக்மிணி ரமணி, ருக்மணி தெரு, ஸ்ரீசிருங்கேரி மட ஸ்ரீசாரதா கோயில் அருகில், மேற்கு மாம்பலம், சென்னை - 33 எனும் முகவரியில் உள்ளார். இவரிடம், பாபநாசம் சிவனின் பாடல் தொகுப்பு உள்ளது என்று சென்னை வாசகர் என்.கணபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அருளும் தலம் எங்கேயுள்ளது என சென்னை, வாசகர் லோகிதா மதன்குமார் கேட்டிருந்தார்.

சென்னை, அயன்புரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையில், ஸ்ரீசோலையம்மன் கோயில் உள்ளது. இங்கு, நவக்கிரகங்கள், தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர். இங்கு, ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசை அன்று சிறப்பு ஹோமமும் நடைபெறுகிறது என்று சென்னை வாசகர் எம்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற ஏதேனும் ஸ்லோகம் உள்ளதா என்று கூந்தலூர் சந்திரசேகரன் எனும் கும்பகோணம் வாசகர் கேட்டிருந்தார்.

மன பயம் நீங்கினால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். மன பயத்தைப் போக்குவதற்கு ஸ்ரீபிரத்யங்கிரா தேவிக்கான 'ஓம் ஸ்ரீகோதரூபே மகா பிரத்யங்கிரா...’ எனத் துவங்கும் நான்கு வரி ஸ்லோகத்தை தினமும் தூங்கு வதற்கு முன்பு சொல்லி வழிபட்டால், பயம் நீங்கும்; நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம் என்று சென்னை வாசகர் எஸ்.கோபாலன் தெரிவித்துள்ளார்.

தர்வண வேதம் மற்றும் மந்திரங்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று திண்டிவனம் வாசகர் வி.சக்திவேல் கேட்டிருந்தார்.

சென்னையில் அலைகள் வெளியீட்டகம் (044 - 2481 5474) எனும் பதிப்பகம், அதர்வண வேதம் நூலை 2 தொகுதி களாக வெளியிட்டுள்ளது. 20 காண்டங்கள், 731 சூக்தங்கள், 5,848 பாடல்கள் ஆகியவற்றைக் கொண்டது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன்  தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் விலை ரூ.850/-.

தவிர, ரிக் வேதம் (மூன்று தொகுதிகள்), யஜூர் வேதம் மற்றும் சாம வேதம் ஆகியவற் றுக்கான நூல்களும் இங்கு கிடைக்கும் என்று சென்னை வாசகர் எஸ்.கோபாலன் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism