தொடர்கள்
Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

`அடேய் ராமா!’

ராமனுக்கு முடிசூட்டு விழா! அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை கவிழ்க்க... அயோத்தியில் கோலாகலமாக விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. வேதியர்கள் வேத கீதமும், மாதர்கள் மங்கல நாதமும் முழங்கினர். முனிவர்கள் மந்திராட்சதையைத் தெளித்தனர். சிற்றரசர்கள் கைகூப்பி வணங்கினர். அப்போது அங்கே ராமனின் பால்ய சினேகிதனான ஸ்ரீநிவாசன் ‘`அடே, ராமா! எப்படா வந்தாய்?” என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

ஆன்மிக துளிகள்

ஒரு கணம் அரச சபையே ஸ்தம்பித்தது. மாமன்னரை எவனோ ஒருவன், `ராமா' என்று பெயர் சொல்லி அழைப்பதா என்ற கோபம் அனைவருக்கும். லட்சுமணன் கையில் ஆயுதத்தை எடுத்தான்; பரத, சத்ருக்னரும் அவன் மீது பாய ஆயத்தமானார்கள். அனுமனோ மிகுந்த ஆத்திரத்துடன், ‘`இவன் தலையைப் பிளந்துவிடுகிறேன்'' என்று கதாயுதத்தைத் தூக்கினார். எங்கும் பரபரப்பு!

ஆனால், ராமர் எழுந்தோடி வந்து ஸ்ரீநிவாசனை மார்புடன் தழுவிக்கொண்டதுடன், உரிய பதிலைச் சொல்லி அவனை அன்புடன் அழைத்து வந்து தன்னுடன் அரியணையில் அமர்த்திக்கொண்டார். பின்னர் சபையினரைப் பார்த்து, ‘`என் அருமைத் தந்தையார் எனக்கு முடிசூட்டி மகிழ விரும்பினார். ஆனால், இந்த விழாவில் அவர் இல்லையே என்று வருந்தினேன். எல்லோரும் என்னை ராகவேந்திரா, ரகுநாதா என்றுதான் அழைப்பார்கள். என் தந்தை மட்டுமே அன்பு கனிய ‘அடேய் ராமா' என்றழைப்பார். அப்படி இன்று ‘அடேய் ராமா!' என்றழைத்த என் நண்பனும் என் பிதாவே. அவரே இவன் வடிவில் வந்துள்ளார்” என்றார் கண்ணீர்மல்க.

பண்பை வளர்க்கும் பாரதக் கதை!

ராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த இதிகாச நூல்கள். நீண்டநெடுங்காலமாக இவற்றைக் கோயில்களில் வாசிக்கும் வழக்கம் உண்டு. கோயில்களில் பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகின்ற சாசனங்களும் உண்டு.

மழை பெய்வதற்காக `விராட பருவம்' வாசிப்பார்கள்.

பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் போதிக்கக் கதை சொன்னால், எளிய மக்களின் மனதில் அது சீக்கிரமாகப் பதிந்து விடுகிறது. அப்புறம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அழகும் பண்பும் ஏற்பட்டு விடுகின்றன. தருமர் முதல் சகாதேவன் வரை, பாரதத்தின் கதாபாத்திரங்கள் பலரும் நமக்குப்  பல பண்புகளைக் காட்டுகிறார்கள்.

ஆன்மிக துளிகள்

பொறுமையின் வடிவமாக பீஷ்மர் இருக்கிறார். தானம் கொடுப்பதன் சிறப்பை கர்ணன் உணர்த்துவான். அதேபோல், வீரத்துக்கு கண்ணியத்துக்கும் அர்ஜுனன். இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களைப் பற்றிய ஞாபகம் மனதுக்கு வந்தாலே, எல்லாவிதமான நல்ல பண்புகளையும் பெற்றுவிடுவோம். படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்துகொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தமமான பாத்திரங்களைப் போல் நடக்க முடியாமல் போனாலும், இதுதான் நாம் கடைப்பிடிக்கவேண்டிய உண்மை யான முறை என்பது நினைவுக்கு வரும். இதற்கே பலன் உண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அக்காலத்தில் உயர்ந்த தருமமும் நீதியும் நாட்டில் இருந்தன.

இப்படி, நமக்கு அறிவுறுத்தியவர் யார் தெரியுமா?

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்!