Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
##~##
ரு
த்திராட்சம் அணிவதில் விதிமுறைகள் இருப்பதாகச் சொல்வார்கள். திருமணம் ஆனவர்கள் மற்றும் பெண்கள் ருத்திராட்சம் அணியலாமா? எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்? உண்மையான நேபாள ருத்ராட்சம் வாங்க வேண்டுமெனில், தமிழகத்தில் எங்கு கிடைக்கும்? தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்!

- வி.சக்திவேல், மேட்டூர்

கௌசிக கோத்திரம், வடமாள் வகுப்பைச் சேர்ந்த எங்களின் பூர்வீகம் திட்டச்சேரி. எங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு தடங்கல் நீங்க, திட்டச்சேரியில் இருக்கும் பெருமாள் கோயிலில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள். அந்தப் பெருமாள் கோயில் குறித்து அறிந்தவர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

- வித்யா மூர்த்தி, பெங்களூரு

உதவலாம் வாருங்கள்!

மாடக்கோயில்கள் எழுபது என்பர். இது சரியா அல்லது அவற்றின் எண்ணிக்கை எத்தனை? அவை அனைத்துமே சிவாலயங்கள்தானா? அந்தத் தலங்களின் பெயர் மற்றும் முகவரி அறிய ஆவல். அதுபற்றி அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்.

- வி.எஸ்.வேலாயுதன்  

ண்டபாணி தேசிகர் பாடிய பாடல்கள் சி.டி.தொகுப்பாக வெளியாகியுள்ளதா? எங்கு கிடைக்கும்?

- வி.சேதுமாதவன், சேலம்

ஷீர்டி சாயிபாபாவின் குழந்தைப் பருவம், 16 வயது பாலகனாக அவர் ஷீர்டிக்கு வருகை தந்தது, அப்போதைய அற்புதங்கள் ஆகியவை அடங்கிய வாழ்க்கைச் சரிதத் தொகுப்புகள் கொண்ட புத்தகம் எங்கு கிடைக்கும்? தகவல் அறிந்தவர்கள் உதவினால் மகிழ்வேன்.

- டி.வி.கணேசன், சென்னை-92

கேரளாவில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் குடிப்பழக்கத்தினை நிறுத்துவதற்கு பக்தர்கள், அரிவாள்மீது சத்தியம் செய்வார்கள் என்றும், அந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டால், குடிப்பழக்கத்தில் இருந்து மீளலாம் என்றும் அறிந்தேன். அந்த அம்மனின் பெயர், கோயிலின் விபரம் ஆகிய தகவல்களை அன்பர்கள் தெரியப்படுத்தினால் மிக்க நன்றியுடைவனாக இருப்பேன்.

- பி.எல்.சரவணன், சென்னை-45

உதவலாம் வாருங்கள்!

துளஸி தாசர் இயற்றிய ஸ்ரீராம சரித மானஸ் நூல் எங்கு கிடைக்கும் என்று கடந்த 8.2.11 இதழில், ஈரோடு வாசகர் வெங்கட்ராமன் கேட்டிருந்தார்.

சென்னை தி.நகர், பாண்டி பஜார் அருகிலுள்ள ஹிந்தி பிரசார சபாவில் 'ஸ்ரீராம சரித மானஸ்’ புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும் என்று பெங்களூரு வாசகி அம்முலு அம்மாள் தெரிவித்துள்ளார்.

''ஜெங்கார ஸ்ருதி செய்குவாய், கருணாலய நிதியே! காணக் கண் கோடி வேண்டும்’ எனத் துவங்கும் பாடல் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்?'' என்று கடந்த 6.9.11 இதழில் திருச்செங்கோடு வாசகி பத்மாவதி கேட்டிருந்தார்.

'ஜெங்கார ஸ்ருதி செய்குவாய்’, 'கருணாலய நிதியே!’, 'காணக் கண் கோடி வேண்டும்’ என்று மூன்று பாடல்கள் உள்ளன. 'கருணாலய நிதியே’ என்ற பாடல், 'ராக பாவம் ததும்பும் தமிழ்க் கீர்த்தனைகள்’ என்ற நூலில் உள்ளது. ராமானுஜ தாசன் தொகுத்த இந்த நூல், பயனீர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது என்று கடலூர் வாசகர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மூன்று பாடல்களையும் வாசகர்கள் திருச்சி வாசகர் ஞானம் சுப்ரமணியன், கும்பகோணம் வாசகி  விஜயலட்சுமி, சென்னை வாசகி ஜெயலட்சுமி ஆகியோர் அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் பாடல்கள், வாசகி பத்மாவதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

உதவலாம் வாருங்கள்!

சாரக்கோவை எனும் நூல் எங்கு கிடைக்கும் என்று கடந்த 4.10.11 இதழில், சென்னை வாசகர் வி.ஜி.சத்தியநாராயணன் கேட்டிருந்தார்.

பாடல்களின் மூலம் மற்றும் பொருள் விளக்கத் துடன், 'ஆனந்த வாழ்வுக்கு ஆசாரக்கோவை’ என்ற தலைப்பில் சென்னை எல்.கே.எம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார் புத்தகமாக வெளியிட்டுள்ளனர் என்று சென்னை வாசகர் ராஜசேகரன், ஆத்தூர் வாசகர் கஜபதி தெரிவித்துள்ளனர். சென்னை மண்ணடியில் உள்ள உமா பதிப்பகத்திலும் ஆசாரக் கோவை புத்தகம் கிடைக்கும் என்று அரியலூர் வாசகர் வீராசாமி தெரிவித்துள்ளார்.

பண்டையத் தமிழ் நூல்களின் மூலம், 'புராஜக்ட் மதுரை’ (றிக்ஷீஷீழீமீநீt விணீபீuக்ஷீணீவீ) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் இருந்து பதிவிறக்கம் செய்த பிரதியை, சென்னை வாசகி ராஜேஸ்வரி அனுப்பியுள்ளார். அந்தப் பிரதி, வாசகர் சத்தியநாராயணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சோளிங்கருக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில்தான், எங்களின் குலதெய்வக் கோயில் என்கின்றனர். இந்தக் கோயில் குறித்து அறிந்தவர்கள், தகவல் தாருங்கள் என்று கடந்த 15.11.11 இதழில், திருநின்றவூர் வாசகி வி.என்.லட்சுமி கேட்டிருந்தார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ளது சோளிங்கர். அரக்கோணத்தில் இருந்து பேருந்தில் சென்று, தக்கான்குளத்தில் இறங்கினால், அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம். அருகில் உள்ள சோளிங்கர் பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மர் ஆலயமும், சின்ன மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் ஆலயமும் அமைந்துள்ளது. மேலும், அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில், ஹரியும் ஹரனும் அருள்பாலிக்கும் தலமாக திருமாதலம்பாக்கம் கோயில் அமைந்துள்ளது என கோவை வாசகர் சி.கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபைரவர் பாடல்கள் எங்கு கிடைக்கும் என்று கடந்த 15.11.11 இதழில், சென்னை வாசகி ஹேமலதா கேட்டிருந்தார்.

'ஸ்ரீகால பைரவர் பூஜா மந்திரங்கள்’ என்ற புத்தகத்தில் ஸ்ரீபைரவர் பாடல்கள் தெளிவுற அமைந்துள்ளன. என்.கிருஷ்ணமூர்த்தி தொகுப்பில் வெளியான இந்தப் புத்தகம், ஸ்ரீவன்னி விநாயகர் புத்தக நிலையம், 58-அ, ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில், மதுரை-1 என்ற முகவரியில் கிடைக்கும் என்று கோவை வாசகர் சி.கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீரமண மகரிஷி சரணாகதி பாடல்’ எங்கு கிடைக்கும் என்று கடந்த 13.12.11 இதழில், குறித்து மதுரை வாசகி வி.சியாமளா கேட்டிருந்தார்.

மனவாசி ராமஸ்வாமி ஐயர் இயற்றிய சரணாகதி பாடல்கள், மால்குடி சுபாவின் குரலில் 'சரணாகதி’ என்ற பெயரிலேயே சி.டி-ஆக வெளியாகி உள்ளது. மேலும், ஸ்ரீரமணரின் சீடர்கள் வெளியிட்ட 'பஜே ரமண நாமம்’ என்ற சி.டியிலும், சரணாகதி பாடல் உள்ளது. திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தின்  நூல் விற்பனை நிலையத்தில் இந்த  சி.டி-க்கள் கிடைக்கும் என சென்னை வாசகி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு