
மகிழ்ச்சி... பரவசம்!
அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் வரலாறும், அதன் சிறப்புகளும்... படித்ததும் வாழ்வில் ஒருமுறையேனும் வெள்ளூர் சென்று தரிசித்து வரவேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திவிட்டன!
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்
பேரும் புகழும் அருளும் அரங்கனின் ஆனித் திருமஞ்சன அருள் தகவலைச் சிந்தை குளிர சிறப்பாய் வழங்கி, பக்திப் பெருக்கைக் கூட்டியது சக்தி விகடன்.
- எஸ்.கவிதா, ஸ்ரீரங்கம்
வைகாசி மாத அமாவாசையன்று திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடைபெற்ற அபிஷேகங்களை அழகிய படங்களுடன் தந்திருந்தது, நேரில் சென்று தரிசித்த உணர்வை ஏற்படுத்தியது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை - 72
நல்வாழ்வு அருளும் நான்கு ராமேஸ்வரங்களின் மகிமையை காரண காரியங்களோடு விளக்கி பரவசப்படுத்திவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்
