மெய்ம்மறந்த தருணம்...

நாகஸ்வரச் சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பூஜை, வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாதவர் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

ஒருமுறை, திருச்செந்தூர் திருவிழாவுக்குச் சென்றிருந்தார் அவர். அன்று ஏழாம் நாள் திருவிழா. மிக அற்புதமாய் நாகஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார் ராஜரத்தினம் பிள்ளை. வாசஸ்பதி ராக ஆலாபனை கரைபுரண்டு ஓடும் வெள்ளமாய் பிரவகித்தது.,

இந்நிலையில் அழகுத் திருக்கோலத்துடன் அங்கே எழுந்தருளிய முருகனின் மீது கண் பதித்தாரோ, இல்லையோ... சட்டென்று அவரது வாசிப்பு தடைப்பட்டது. ஸ்வாமியின் அலங்காரத்தில் மெய்ம்மறந்து போனார். சில நிமிடங்களில் சுயநினைவு வந்ததும், ஸ்வாமியின் அருகில் சென்று தன் கழுத்தி லிருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைக் கழற்றி ஸ்வாமிக்கு அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் வந்து வாசிக்கத் தொடங்கினாராம். இதுவல்லவோ இறை பக்தி!

(மங்கல இசை மன்னர்கள் நூலிலிருந்து...)

அன்பு என்பது...

சீடன் ஒருவன் தன் குருநாதரிடம் `அன்பு என்றால் என்ன' எனக் கேட்டான். குருநாதர் பதில் சொன்னார்:

``மிகக் குறைவான நிலையிலுள்ள வெறுப்பு உணர்வுதான் அன்பு எனப்படுவது. வெறுப்பு - அன்பு, ஞானம் - மூடம், ஆரோக்கியம் - பிணி, மகிழ்ச்சி - துன்பம்... என எல்லா மனிதரிடமும் இருவேறுபட்ட குணங்கள் இருக்கும். ஒருவனிடம் ஒரு குணம் குறைந்து திகழ்ந்தால், அதற்கு எதிர்மறையானது அதிகம் தென்படலாம். அதற்கேற்பவே அவனை `இத்தகையவன்' எனக் குறிப்பிடுகிறோம். அறிஞனிடம் மூடத் தன்மை மிக ஆழத்தில் கிடக்கும். ஆரோக்கிய மானவனிடமும் அடி ஆழத்தில் நோய் அடங்கிக்கிடக்கும்.

ஒருவனிடம், மாறுபட்ட இரு குணமும் சம அளவில் 50:50 என்ற விகிதத்தில் வெளிப்படாது. இதைக் கொண்டுதான் ஒருவனை எடைபோடுகிறோம்.

- ஆர்.சி.சம்பத்

நீராடும் நியதிகள்

நீராடுவதில் உரிய நியதிகளைப் பின்பற்றச் சொல்கின்றன ஞான நூல்கள். தினமும் வைகறைப் பொழுதிலேயே குளித்துமுடிக்க வேண்டும். நள்ளிரவில் நீராடக் கூடாது. சமுத்திரம், ஆறு, தீர்த்தக் கட்டங்களில் நீராடும்போது தீர்த்த தேவதைகளைப் பிரார்த்தித்தபடி நீராடுவது சிறப்பு. `எண்ணெய் தேய்த்துக் குளிப்பதிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் நாம்' என்பார்கள் பெரியோர்கள். ஆம்! பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். ஆண்களுக்கு உகந்த கிழமைகள், புதனும் சனியும்!