Published:Updated:

கண்ணன் வருவான்!

கண்ணன் வருவான்!
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் வருவான்!

வீ.ஜே.செல்வராஜு

கண்ணன் வருவான்!

வீ.ஜே.செல்வராஜு

Published:Updated:
கண்ணன் வருவான்!
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் வருவான்!

ண்ணனின் மீது கோகுலத்துப் பெண்கள் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்கள். பாலைத் திருடிவிட்டான்; தயிரைக் குடித்துவிட்டான்; வெண்ணெய்ப் பானைகள் அத்தனையும் காலி என்று அந்தப் பெண்கள் யசோதையிடம் புகார் கூறினார்கள்.

“நம்ம வீட்டில் இல்லாத தயிரும் வெண்ணெ யுமா? ஏன் இப்படித் திருடி சாப்பிடுகிறாய்?” என்று கேட்டாள் யசோதை. கேட்கும்பொழுதே அவள் கண்களில் நீர் துளிர்த்தது. யசோதையின் கண் ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைத்தான் குழந்தைக் கண்ணன். பிறகு, ‘`இல்லேம்மா... நான் திருடவில்லை...” என்று சொல்லிச் சிரித்தான்.

பின்னர், அன்னையிடம் கேட்டான். ‘`ஏம்மா, பசுவிடமிருந்து கிடைக்கும் பால்தானே தயிர், மோர், வெண்ணெய், நெய் என்றெல்லாம் ஆகிறது? இல்லை... அவையெல்லாம் பசுவிட மிருந்தே கிடைக்குமா?''

யசோதை, ‘`இல்லை கண்ணா. அவையெல்லாம் நம்ம கோமாதா கொடுக்கும் பாலிலிருந்துதான் கிடைக்கின்றன” என்றாள்.

கண்ணன் வருவான்!

“பால் கெட்டியா இருக்குமா? தண்ணியா இருக்குமா?”

“சேச்சே... பால் கெட்டியாகத்தான் இருக்கும். நாமதான் அதில் தண்ணீர் சேர்க்கிறோம்?”

“எவ்வளவு பெரிய மோசடி! கன்னுக்குட்டிகூட கொஞ்சமாதான் பால் குடிக்கும். மீதி எல்லாத்தை யும் நாமளே எடுத்துக்கிறோமே... இது சரியா. நீங்களே சொல்லுங்க... இப்ப நாம போய், தயிர், வெண்ணெய், நெய்யைக் கொடுத்தால், அது பால் என்று மாடு ஒத்துக்கொள்ளுமா?” எனக் கேட்டான் கண்ணன், எதுவும் தெரியாதவன் போல்.

“அதற்கு எப்படி கண்ணா தெரியும்...” என்றாள் யசோதை.

“பார்த்தியாம்மா... என்னென்ன திருட்டுத்தனம் எல்லாம் நடக்குது? பாலில் தண்ணீர் கலக்குகிறோம், தயிராக்குகிறோம், வெண்ணெய், நெய் எல்லாம்  எடுத்துக்கிறோம்... எல்லாமே நமக்குன்னு உரிமை கொண்டாடலாமா?”

“என்ன கண்ணா சொல்றே...”

“நீங்க திருடியவற்றில் கொஞ்சம் நான் எடுத்துக் கொள்வதால், உங்கள் பாவச் சுமை குறையும் அல்லவா?”

யசோதைக்குப் புரிந்தது. சுற்றியிருந்த பெண் களுக்கும் புரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணன் வருவான்!“அந்த கன்றுக்குட்டி சாப்பிடுவதை இந்தக் கண்ணன் குட்டி சாப்பிடக்கூடாதா?”

என்று மீண்டும் கேட்டான் கண்ணன், தன் அழகிய கண்களைச் சிமிட்டியபடி. பரவசத்துடன் தன் மகனை யசோதை கட்டிக் கொள்ளும்முன், கோகுலத்துப் பெண்கள் அவனை வாரியணைத்துக் கட்டி முத்தமிட்டு, உச்சி மோந்தனர்!

கண்ணனின் போதனை நமக்கும்தான். `எல்லாம் என்னுடையது' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பிதற்றிக்கொண்டு இருக்கப்போகிறோம்? எங்கெங்கோ பிடுங்கி, எப்படி, எப்படியோ சேர்க்கிறோமே... எங்கே போய் இந்தச் சாப, பாவங்களுக்கு விமோசனம் தேடப் போகிறோம்?!

`சகலமும் கிருஷ்ணார்ப்பணம்' என்று அவனைச் சரணடையுங்கள்; அன்புடன் உங்கள் இல்லம் தேடி ஓடிவருவான் கண்ணன்! அப்படி, கண்ணனிடம் நம்மைச் சமர்ப்பிக்க ஏதுவாக, அவனுடைய மகிமைகள் சிலவற்றை அறிவோமா?

கிருஷ்ணப் பிரியன்


கிருஷ்ணரின் மடியில் படுத்து அர்ஜுனன் உறங்குகிறான். ஏதோ சிறு குழந்தையைத் தாலாட்டுவது போல், அவனைத் தட்டிக்கொடுத்து உறங்கவைக் கிறார் கிருஷ்ணர். தவிர, அவன் புஜங்களை வேறு பிடித்துவிடுகிறார். இந்தக் காட்சியைப் பார்த்துவிடும் நாரத மகரிஷிக்கு வியப்பு ஏற்படுகிறது.

‘பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமன் மடியில் அர்ஜுனனா... என்ன கொடுமை இது? ஒரு மானிடனுக்கு இப்படி ஓர் உயர்ந்த ஸ்தானமா?'

என்று மனதுக்குள் புழுங்கினார் நாரதர். மேலும், எந்நேரமும் பரம்பொருளின் திருநாமத்தை உச்சரித் துக் கொண்டிருக்கும் தன்னைவிட, இந்த  அர்ஜுனன் உயர்ந்தவனா என்ற எண்ணமும் அவருக்குள் எழுந்தது. அவரின் இந்த எண்ணத்தைக் கிருஷ்ணர் அறியாமல் இருப்பாரா? சைகைக் காட்டி நாரதரை அருகில் அழைத்தார். கீழே உதிர்ந்து கிடந்த ரோமம் ஒன்றை எடுக்கச் சொன்னார்.

நாரதருக்கு உள்ளுக்குள் கடும் கோபம். கேவலம்... ஒரு ரோமத்தை நான் கையால் எடுப்பதா என்று தயங்கினார். கிருஷ்ணரோ சிரித்தபடியே ‘`ம்ம்... எடு” என்றார். தயக்கத்துடன் ரோமத்தைக் கையில் எடுத்தார் நாரதர். `` அது அர்ஜுனனின் தலைமுடி தான். அதைக் காதில் வைத்து வரும் சத்தத்தைக் கேள்... '' என்றார் பகவான். அப்படியே செய்தார் நாரதர். அந்த உதிர்ந்த முடி ‘`கிருஷ்ணா... கிருஷ்ணா” என்று ஜபிப்பதைக் கேட்டதும், அர்ஜுனனின் கிருஷ்ண பக்தியை எண்ணி சிலிர்த்துப்போனார். தன் செயலுக்கு மன்னிப்பும் வேண்டினார்.

ஆம்! அர்ஜுனன், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கிருஷ்ணனுக்கே சமர்ப்பித்துவிட்ட பக்தன்!

கண்ணன் வருவான்!

முராரி கிருஷ்ணன்

கேரளத்திலுள்ள கொல்லம் பகுதியில் ஆதிகாலத் தில் நடந்த சம்பவம். அங்கு, முரன் எனும் அரக்கனின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டிருந்தது. ஆடு, மாடுகளைக் கொன்று உண்ணும் அந்த அரக்கன், மனிதர்கள் தென்பட்டால் அவர்களையும் கொன்று புசிப்பான்.

அது அடர்ந்த காட்டுப் பகுதியானதால், அங்கு வசித்த மக்களின் நிலையை மற்ற ஊர் மக்களோ, அந்நாட்டின் மன்னவனோ அறிந்திருக்கவில்லை. எனவே, அரக்கனின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்ற ஆளின்றி தவித்தனர் அப்பகுதி மக்கள்.

அவர்களில் ஒரு மூதாட்டி மட்டும் குருவா யூரப்பனை வேண்டிக் கொண்டிருந்தாள்.

“என் இதய தெய்வமே! நீ குழந்தையாய் இருக்கும்போது எத்தனை அசுரர்களைக் கொன்றிருக்கிறாய். குதிரை வடிவில் வந்த கேசிகனைக் கொன்றாய். குவாலய பீடம் எனும் யானையைத் தூக்கி வீசினாய். அரக்கி பூதனை யின் விஷத்துடன் அவளின் உயிரையும் உறிஞ்சினாய். இங்கே எங்களைத் தொல்லைப் படுத்தும் அரக்கனை உன்னால் அழிக்க முடியாதா? தசாவதாரக் கிருஷ்ணனாக இருந்தால்தான் உனக்கு வீரமா?” என்று கெஞ்சலும், கொஞ்சலும், அதட்டலுமாகக் கேட்டு கண்ணீர் வடித்தாள்.

அன்றைக்கு மாலை கண்ணன் சிறு குழந்தையாக வந்தான். யாரோ ஒரு குழந்தை என்று எண்ணிய கிழவி, கண்ணன் தங்குவதற்கு அனுமதித்தாள். அன்றிரவு அசுரன் அலறிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் அவன் இறந்து கிடப்பதைக் கண்டு ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரு மூச்சு விட்டனர் நிம்மதியாக.

அன்று கிழவியின் வீட்டுக்குக் குழந்தையாக வந்தவர்... ‘முகுந்தா, முராரி’ என்று பாடு கிறோமே... அந்த முராரி கிருஷ்ணர்தான். கொல்லத்திலிருந்து சுமார் 10 கி.மீ, தொலைவிலுள்ள `முகத்தல' எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார். கிழக்கு நோக்கி அருளும் இவருக்குச் சீவேலி, நவகவ்ய பூஜைகள் உண்டு. பாயசம்தான் அவருக்குப் பிடித்த நைவேத்தியம் என்கிறார்கள்.

கண்ணனின் கடாட்சம்!

ருக்மிணியுடன் கண்ணபிரான் பாண்டுரங் கனாகக் காட்சி தரும் திருக்கோலத்தைப் பெரிதும் விரும்புவார் பக்த துக்காராம். அவன் அழகில் மயங்கி, பல கீர்த்தனைகளைப் பாடி மகிழ்ந்திருக் கிறார் அவர்.

துக்காராமின் மனைவி கமலா பாய்க்கோ, அவரின் செய்கைகள் எரிச்சலைத் தருவதாக இருக்கும். கணவன் வேலைவெட்டிக்குப் போகா மல் இப்படி பாண்டுரங்கனே கதி என்று கிடந்தால் குடும்பம் என்னவாகும். அவள் குடும்பத்தினர் வேறு அவளை மோசமாக நடத்தினார்கள். பாவம், அவள் என்னதான் செய்வாள்?!

அவளுடைய வேதனை யைக் கண்ட பகவான் கண்ணன், ருக்மிணியைப் பார்த்தான். அவள் கண்ண னின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாகச் சிரித் தாள். ஓர் ஏழைப் பெண் ணாக  துக்காராமின் இல்லத்தை அடைந்தாள். அப்போது, கமலா வீட்டில் இல்லை.

துக்காராமிடம் அழுது, புலம்பினாள் ஏழைப் பெண். “நான் ஏழை. உடுத்திக்கொள்ள மாற்றுப் புடவைகூட இல்லை. உங்கள் கண்ணனிடம் சொல்லக்கூடாதா?” என்று இறைஞ்சும் குரலில் கெஞ்சினாள்.

துக்காராமுக்குப் பொறுக்கமுடியவில்லை. உடனடியாக உள்ளே சென்று, தன் மனைவியின் புடவையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.

அங்கிருந்து புறப்பட்ட ஏழைப்பெண், சரியாகக் கமலாபாய் வரும் நேரமாகப் பார்த்து, அவளைக் கடந்து சென்றாள். தன் மனைவியின் லீலையைப் பார்த்து கண்ணன் சிரித்துக்கொண்டான்.

கண்ணன் வருவான்!

இங்கேயோ, பத்ரகாளியாக மாறிவிட்டாள் கமலாபாய்.

 ‘`எல்லாத்துக்கும் காரணம் இந்தப் பாண்டு ரங்கன்தான். முதலில் அவன் சிலையை உடைக்க வேண்டும்” என்று வெறிபிடித்தவளாய் அம்மிக் குழவியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தாள்.

துக்காராம் பதறிப்போனார். ஆனாலும் அவரால் அவளின் வேகத்தைத் தடுக்கமுடிய வில்லை. மிகுந்த ஆங்காரத்துடன் பூஜையறைக்குள் நுழைந்தவள்,  ``கண்ணா! இன்றோடு நீ காலி...'' என்றபடியே, குழவிக் கல்லைத் தலைக்குமேல் தூக்கி, கண்ணனின் விக்கிரகத்தின் மீது கல்லை போட தயாரானாள். கிருஷ்ணரின் விளையாடல் ஆரம்பமானது.

அவர் ருக்மிணியைப் பார்க்க, அவள் தன் மேனியில் அந்தப் பழைய புடவையை உடுத்திக்கொண் டாள். ஆம்! கண்ணனோடு திகழும் ருக்மிணியின் சிலை யில் தனது புடவை திகழ் வதைக் கண்டதும் உண்மை புரிந்தது கமலாபாய்க்கு; பதைபதைத்துப் போனாள்.

``இந்த ஏழைக் கிறுக்கியின் புடவையை அந்த அன்னை அணிந்திருப்பதா?

நயவேன் பிறர் பொருளை என்றாயே... இந்தக் கிறுக்கி யின் கிழிசல் புடவையை உன் மனைவி கட்டுவதா?

நள்ளேன் கீழாரோடு என்றாயே... ஐயோ கண்ணா... கோபத்தில் புத்திக்கெட்டுப் போன என் புடவையை அன்னை அணியலாமா?''

- என்று அழுதுப் புலம்பினாள் கமலாபாய்.

அதைக் கண்டு பொறுக்கமுடியாத ருக்மிணி தேவி, ``போதும் தங்கள் விளையாட்டு'' என்றாள் கண்ணனிடம். மறுகணம், கண்ணனின் கடாட்சம் கிடைத்தது கமலாபாய்க்கு. அவளின் இல்லத்தில் லட்சுமிகடாட்சம் நிறைந்தது!

கண்ணனின் கருணையை எண்ணிச் சிலிர்த்தார் துக்காராம். இன்றைக்கும் அவரின் பாடல்கள், கண்ணனின் பெருமையைப் பறைசாற் றிக் கொண்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism