மனிதர்களாகப் பிறந்த அனைவரும் அவர வருக்கான கடமைகளை உரியவகையில் நிறைவேற்றவேண்டும். அதுதான் சுயதர்மம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையில் சுயதர்மத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

அப்படி, தான் வலியுறுத்திய சுயதர்மத்தை தானும் கடைப்பிடித்து வாழ்ந்தார். அவதாரப் புருஷன் என்றாலும், மனிதனாகப் பிறந்திருந்த நிலையில், கிருஷ்ணன் கோகுலத்தில் ஆநிரை களை மேய்த்தார். ஒரு சீடனாக சாந்தீபனி முனிவருக்குப் பணிவிடைகள் செய்தார். ஓர் அரசனாக, துவாரகையைப் பாதுகாத் தார். அனைத்துக்கும் மேலாக, தன்னையே சரணடைந்திருந்த அர்ஜுனனுக்குத் தேரோட் டியாக இருந்து, அவன் போரில் வெற்றி பெற துணைநின்றார்.

ஓவியம்: கேஷவ்

அந்த அளவுக்கு சுயதர்மத்தை சற்றும் தவறாமல் கடைப்பிடித்து, அதன் மூலம் நாமும் சுயதர்மத்திலிருந்து வழுவக்கூடாது என்பதை நமக்கெல்லாம் வலியுறுத்திய கண்ணன், தனது வலக் கரத்தில் பாஞ்சஜன்ய சங்கினை ஏந்திய திருக்கோலத்தில் ஒரு தலத்தில் காட்சி தருகிறார்.

குருக்ஷேத்திரத்தில் மட்டும்தான் கண்ணனின் வலக்கரத்தில் சங்கம் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே கோலத்தில் கண்ணன் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலம்கூட, ஒருவகையில் குருக்ஷேத்திரம்தான்.

இந்தத் தலமும் சுயதர்மத்தின் மகிமையை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. ஆம், மன்னன் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட சுயதர்மத்தை நிறைவேற்ற, அதையொட்டி இறைவனுக்கு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம்தான், இதோ நாம் இப்போது தரிசிக்கச் செல்லும் மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம் அது...

பல்லவப் பேரரசில் புகழ் பெற்று விளங்கிய மன்னர்களில் ஒருவர் மகேந்திரவர்மன். அவரது ஆட்சிக் காலத்தில் பல்லவப் பேரரசு திருச்சி வரை விரிந்துபரந்திருந்தது. மக்களின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினாலும், ராஜ்ஜியத்தை விஸ்தரித்தது போதும் என்ற எண்ணத்தினாலும் போருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கலைகளை வளர்ப்பதிலும், மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் மகேந்திரவர்மன்.

அதுதான் தருணம் என்று பல்லவ நாட்டின் மீது போர்தொடுத்தான் சாளுக்கியன் இரண்டாம் புலிகேசி. வலிய போரைத் திணிக்கும் சாளுக்கிய புலிகேசியை எதிர்த்து தீரத்துடன் போரிட்டது பல்லவ சைன்னியம். அப்படி, கடும்போர் நடந்த இடங்களில் ஒன்று இந்த மணிமங்கலம். பிற்காலத்தில் நரசிம்மவர்மப் பல்லவன், பெரும் போர் நடைபெற்ற இந்த மணிமங்கலத்தையும் குருக்ஷேத்திரமாகவே கருதி, போரில் இறந்தவர்கள் அனைவரின் ஆத்ம சாந்திக்காகவும் இங்கு கிருஷ்ணருக்குக் கோயில் எழுப்பினான்.

108 திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம்!

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், கருட மண்டபம், கொடி மரம், பலிபீடம், தீப ஸ்தம்பம் என்று மிகவும் நேர்த்தியான முறையில் கோயில் எழுப்பப் பட்டிருக்கிறது. கருவறையில், ஸ்ரீதேவி பூமிதேவி சமேதராக - பத்ம பீடத்தின் மீது நின்ற திருக் கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார் ஸ்ரீராஜ கோபால சுவாமி. மேல் வலக் கரத்தில் சங்கும், மேல் இடக் கரத்தில் சக்கரமும், கீழ் வலக் கரத்தில் அபய ஹஸ்தமும், கீழ் இடக் கரத்தில் கதாயுதமும் திகழ, பேரழகு வடிவினராக சேவை சாதிக்கும் பெருமாளின் வடிவழகு, நம் மனதைக் கொள்ளைகொள்கிறது.

பிராகாரத்தில் செங்கமலவல்லித் தாயார், ஆண்டாள் ஆகியோர் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். தாயார் சந்நிதிக்கு முன்பு ஊஞ்சல் மண்டபம் காணப்படுகிறது. மேலும் சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், ராமாநுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

பிராகார கோஷ்டங்களில் விநாயகர், யோக நரசிம்மர், பரமபத நாதர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் அருளும் ராஜகோபால சுவாமியையும், பரமபதநாதரையும், இதே ஊரில் மற்றொரு கோயிலில் அருளும் வைகுண்ட பெருமாளையும் சேவித்தால், 108 திவ்யதேசங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ராஜகோபால சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால், கண் தொடர்பான நோய்களும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் களும் தீரும் என்பது நம்பிக்கை.

குருக்ஷேத்திரத்தில் வலக் கரத்தில் பாஞ்ச ஜன்யம் ஏந்தியிருந்த கோலத்திலேயே காட்சி தரும் மணிமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமியை தரிசித்து வழிபட்டால், நம்முடைய கடமைகளைச் சிறப்பாகச் செய்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும் என்பது உறுதி.

உங்கள் கவனத்துக்கு...

திருத்தலம்: மணிமங்கலம்

இறைவன்: ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி

தாயார்: ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார், ஸ்ரீஆண்டாள்

திருவிழாக்கள்: புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி ஆகிய விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும், காலை 6.30 முதல் 10.30 மணி வரை; மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவிலும், தாம்பரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் மணிமங்கலம் இருக்கிறது. தாம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.