Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

கூலி வேலை செய்து அன்றாடம் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தவரின் பிள்ளை. சிறுவயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவன், தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான்.

பார்த்தார் தந்தை. `இது போதும்' என்று சொல்லி, மகனின் படிப்பை நிறுத்திவிட்டார். பையனுக்கு 10 வயது ஆனது. அவனை உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி, பயிற்சி கொடுத்தார் தந்தை. அதுமட்டுமல்ல, “ஏய்! யாரு என்ன வேலையைச் சொன்னாலும் சரி! போய்ச் செய்யணும். வேலையை முடிச்சிட்டு, மறக்காமல் கூலிய வாங்கிட்டு வந்திரு!” எனக் கட்டளையும் இட்டார்.பையனும் அப்படியே செய்துவந்தான்.

அதேநேரம்,  பையனின் மனதில், தமிழை நன்றாகக் கற்கவேண்டும் எனும் பெருத்த ஆசை இருந்தது. இருந்தாலும் என்ன செய்ய? உழைத் தால்தான் அன்றாடம் உணவு எனும்போது, படிப்புக்கு எங்கு போவது?

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

இப்படியே இரண்டாண்டுகள் கழிந்தன. வேலையில்லாத நாட்களில், அவ்வூரில் இருந்த ஒரு மடத்துக்குச் சென்று பொழுது போக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் அந்தப் பையன். அவனுக்கு நல்ல காலம் கூடிவந்தது போலும். அந்த மடத்துக்கு சுந்தர அடிகள் எனும் மகான் ஒருவர் வந்தார். மொழிப்பற்று மிகுந்த அவர், தமிழ் நூல்கள் பலவற்றிலும் கரை கண்டவராக இருந்தார். மடத்தின் மேம்பாட்டுக்கான சில ஏற்பாடுகளைச் செய்யவே வந்திருந்தார் அவர். 

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்


பையன் அவரிடம் நெருங்கிப் பழகத் தொடங் கினான். அடிகளிடமிருந்து தமிழ் நூல்களை வாங்கி, அங்கேயே விருப்பமுடன் படிக்கத் தொடங்கினான். பையனின் தமிழார்வத்தைக் கண்ட அடிகள், அவனுக்கு உணவு, உடை  முதலானவற்றை அளித்து,  அவன் மடத்திலேயே தங்கியிருந்து படிக்கும்படிவழிவகை செய்தார்.

 இதன் காரணமாக அந்தப் பையன், வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டான். விவரம் அறிந்த தந்தைக்குக் கோபம் வந்தது. அவர் ஒருநாள் நேரே மடத்துக்கு வந்து, பையனை விளாசித்தள்ளி விட்டார். அடிகளுக்கு மனம் கனத்தது. “ஏன் அடிக்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

“வீட்டுல குடிக்கறதுக்குக் கூழ்கூடக் கிடையாது. இந்தப் பயல் என்னடான்னா, இங்கே வந்து பொழுது கழிக்கிறான். ஏதாவது வேலை செஞ்சி கூலி வந்தாதானே, இவனே சாப்பிட முடியும்...” என்று தனது தரப்பு நியாயத்தைச் சொன்னார் தந்தை. 

அவரை ஆறுதல்படுத்திய அடிகள், “பையன் ஆர்வமாகக் கல்வி கற்கிறான். அந்த ஆர்வத்தைப் பார்த்துதான், அவனை இங்கேயே தங்கவைத்து கல்வி கற்பிக்கிறேன். இவனைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். இவன் என்னுடனேயே இருக்கட்டும்” என்றார்.

அடிகளாரின் சொல்லை மறுக்கமுடியாமல், அரைகுறை மனதோடு திரும்பினார் அந்தத் தந்தை.

தந்தையின் வறுமையைச் சொல்வதா, சிறுவனின் தமிழ்ப் பற்றைச் சொல்வதா, அவனுக்கு ஆதரவளித்த அடிகளாரின் கருணையைச் சொல்வதா... எது எப்படியோ, அந்தச் சிறுவன் பாடிய காவடிச் சிந்துதான், இன்று தமிழறிந்த உலகெங்கும் பிரபலமாகப் பரவியிருக்கிறது!

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

ஆம்! `காவடிச்சிந்து' என்றதும் நம் நினைவுக்கு வரும் ‘அண்ணாமலை ரெட்டி யார்’தான், அந்தச் சிறுவன்.

திருநெல்வேலி - கரிவலம்வந்தநல்லூருக்கு அருகிலிருக்கும் சென்னிகுளம் எனும் ஊரில், 1861-ல் பிறந்தவர் அண்ணாமலை ரெட்டியார். பெற்றோர் சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மாள். சிறு வயதிலிருந்தே கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம்கொண்ட அண்ணாமலை, திருப்புகழ் பாடல்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றைப் படித்து வந்தார். முருகப்பெருமானிடம் தனது கருத்தைப் பதித்த அவருக்கு, அறுமுகனின் அருள் முழுமையாகக் கைகூடியது. அதன் விளைவே, ‘காவடிச்சிந்து’ எனும் அருந்தமிழ் நூல். சரி! வாருங்கள்! சுந்தர அடிகள் ஆதரவில் அண்ணாமலை இருந்ததாகப் பார்த்தோம் அல்லவா? அதைப் பார்க்கலாம்.

அடிகளாரின் ஆதரவில் அருந்தமிழை ஆழமா கவும் அழுத்தமாகவும் கற்ற அண்ணாமலையை, சேற்றூர் அரசரிடம் அறிமுகப்படுத்திய அடிகளார், அரசரின் ஆதரவைப் பெற ஏற்பாடு செய்தார். சேற்றூர் அரசர்  சுந்தரராசுத் துரை, தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். அவர் முன் தான் இயற்றிய பாடல்களைப் படித்தார் அண்ணாமலை.

பாடல்கள் அரசரைக் கவர்ந்தன. என்றாலும் அண்ணா மலையை மேலும் பரீட்சிக்க எண்ணி னார். ஆகவே, “ `காரிகை' எனும் சொல் ஏழு இடங்களில் வரும்படியாக, ஒரு செய்யுளை உடனே இயற்றுக” என்றார்.

அண்ணாமலை உடனே பாடினார். அந்தப் பாடலைக் கேட்ட அரசர் வியந்தார். `எப்படிப் பட்ட பாடலையும் இயற்றும் திறன் கொண்டவன் இவன்' என்று தீர்மானித்தார். அதைப் புரிந்து கொண்ட அடிகளார், அண்ணாமலைக்கு இலக்கணப் பயிற்சி அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அரசரிடம் கேட்டுக்கொண்டார். அரசரும் ஒப்புக்கொண்டார். ஓராண்டு காலம் அங்கேயே தங்கி, இலக்கணப் புலமை நிரம்பப் பெற்றார் அண்ணாமலை. அதன்பின் அரசரிடம் அனுமதி பெற்று, சென்னிகுளம் திரும்பினார்.

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

மலர் மரத்தில் இருந்தாலும், அதன் நறுமணம் எங்கும் பரவுவதைப்போல, சென்னிகுளத்தில் இருந்த அண்ணாமலையின் தமிழ்ப்புலமை தேசம் கடந்து பரவியது. ஊற்றுமலையில் பெருநிலக் கிழாராக இருந்த இருதாலய மருதப்பத் தேவர், அண்ணாமலையைத் தன் அவைக்களப் புலவராக அமர்த்தினார். அண்ணாமலையும் பலவிதமான பாடல்களைப் பாடினார்.

திருப்புகழில் மகிழ்ந்து அதிலேயே தோய்ந்து போன அண்ணாமலை, தானும் அதேபோல் கந்தக் கடவுளைப் பாட ஆர்வம் கொண்டார். கழுகு மலை கந்தப்பெருமான் மீது காவடிச்சிந்து பாடினார். அதுமட்டுமா? ஊற்றுமலைப் பெருநிலக் கிழார் கழுகுமலைக்குக் காவடி சுமந்து போன போது, காவடிச்சிந்து பாடல்களைப் பாடியபடி அண்ணாமலையும் கூடவே சென்றார். அந்தப் பாடல்களைக் கேட்டு, வழிநடை களைப்பை எல்லாம் மறந்த பெருநிலக்கிழார், அண்ணா மலையைப் பாராட்டிப் பரிசில்கள் வழங்கினார்.

பெரும் ஆதீனகர்த்தர்களும் அண்ணா மலையைப் பாராட்டி, அவருக்குப் பெருமை சேர்த்தார்கள். ஓசைநயம், பொருள்நயம், சொல் நயம், சந்தநயம் ஆகியவற்றோடு, கழுகு மலையின் இயற்கை வளம், கோயில் வளம் எனப் பலவும் நிறைந்த காவடிச்சிந்து, கந்தப்பெருமானை அழகாகத் துதித்து வேண்டுகிறது.

ஆறுமுகன் அருளையும், அருளாளர்கள் -அறிவாளிகள் ஆகிய அனைவரிடமுமிருந்து  பாராட்டுதல்களையும் பெற்ற அண்ணாமலை, 26-ம் வயதில் நோய்வாய்ப்பட்டார்.  பற்றிய நோய், நான்கு ஆண்டுகள் அண்ணாமலையைப் படாத பாடு படுத்தியது. 1891-ம் ஆண்டு தை அமாவாசை யன்று, அவர் முருகப்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.

1861-ல் செல்வமில்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவர், அருள் செல்வத்தையும் பொருள் செல்வத்தையும் ஒருங்கே பெற்றார். அப்படி, தான் அடைந்த அருளை `காவடிச் சிந்து' எனும் திருவருள் செல்வமாக நமக்கு அளித்திருக்கிறார்.ஆம்! அண்ணாமலைக் கவிராயரின் காவடிச் சிந்து, இன்றும் பாடுபவர்களுக்கும் கேட்பவர் களுக்கும் ஆனந்தத்தை அளித்து வருகிறது.

சென்னிகுளத்தில், அண்ணாமலைக் கவி ராயரின் மணிமண்டபமும் சமாதியும் உள்ளன. அவருக்குக் கிடைத்ததைப்போல், குருவருளும் திருவருளும் நமக்கும் கிடைக்க வேண்டுவோம்!

 - திருவருள் பெருகும்...

சொல்லின் செல்வன்  பி.என்.பரசுராமன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர்

ம்பிகையின் மனதுக்கு ஆனந்தம் அளிப்பவராக, பத்துக் கரங்களுடன் அருளும் கணபதியை, கொல்லூர் மூகாம்பிகை கொயிலில் தரிசிக்கலாம்!