பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள் விசேஷங்கள்!

ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 10 வரை விழாக்கள் விசேஷங்கள்...

கோகுலாஷ்டமி

செப்டம்பர் 2 (ஆவணி 17) : கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினம் இன்று. கிருஷ்ண பட்ச அஷ்டமி திதி, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கிருஷ்ணன். கிருஷ்ணருக்கான விழாவாக மட்டுமல்லாமல் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாகவும் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. மறுநாள் பாஞ்சராத்ர ஜயந்தி சகல விஷ்ணு ஆலயங்களிலும் நடைபெறும்.

சூரிய வழிபாடு தினம்

செப்டம்பர் 9 (ஆவணி 24) : அமாவாசை.எண்ணியவை யாவும் நிறைவேறும் மங்கள மாதம் இது. ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் தன் சொந்த வீட்டில் ஆட்சியாக அமர்கிறார். இதன் காரணமாக ஆவணி, மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெற்றது. இந்த மாத இந்த மாத அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசிகளுடன், சூரியனின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மறைஞான சம்பந்தர் குருபூஜை

செப்டம்பர் 10 (ஆவணி 25) : மறைஞான சம்பந்தர் குருபூஜை தினம் இன்று. சைவ சமய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய மகான் இவர். சந்தான குரவர்கள் நால்வரில் இவர் முக்கியமானவர். 16-ம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வசித்த இவர் மெய்கண்ட தேவரை அடியொற்றி வாழ்ந்தவர். சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் தந்தவர் இவர். சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது போன்ற அரிய நூல்களை எளிமைப்படுத்திப் பரப்பியவர். இவரது சீடரே உமாபதி சிவாசாரியார். ‘கண்கட்டி பண்டாரம்’ என மக்களால் அழைக்கப்பட்ட இவர், தனது வாழ்நாள்களை யெல்லாம் சைவப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர்.

திருவண்ணாமலை கிரிவலம்

செப்டம்பர் மாதம் 24-ம் தேதி திங்கட்கிழமை காலை 8.02 மணி முதல் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி வரை திருவண்ணாமலை கிரிவலம் நடைபெறும்.

தொகுப்பு: மு.ஹரி காமராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு