மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

? இறைவன் சந்தோஷத்தில் நமக்கு வரங்களை அருளுகிறார் என்றும் கோபத்தில் துன்பங்களைத் தருகிறார் என்றும் சிலர் சொல்வது, முரணான விஷயம் இல்லையா? கருணைக்கடலான இறைவன், நம் மீது கோபம் கொள்வாரா?

- கோ.வசந்தகுமார், திருநெல்வேலி-1

நல்ல கேள்வி. கருணைக்கடலான கடவுளின் மூர்த்தங்கள் - அவதாரங்கள் ஆயுதங்கள் தரித்திருப்பது ஏன் தெரியுமா? நல்லவர் களுக்கு அபயம் அளிக்கும் அதேநேரத்தில், தீயவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும் என்பதால்தான்.

`எப்போதும் தீமையை ஒழிக்கத் தயாராக இருக்கிறேன்' என்று உணர்த்தும்விதமாகத் திகழும் இந்த இறை வடிவங்கள், எளிய மக்களை நிம்மதிகொள்ளச் செய்கின்றன. மேலும், நிர்குணனான இறைவனையே கோபப்படுத்தும் அளவுக்கு மனிதன் பாவம் செய்துவிடக்கூடாது என்பதை உணர்த்தவே, இதுபோன்ற கூற்றுகள் சொல்லப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

இறைவனுக்குக் கருணையில்லை என்றால், ஒரு கணம்கூட நாம் வாழ முடியாது. அதேநேரம், `நியதிக்கு எதிரான கொடுமைகளுக்குத் தண்டனை நிச்சயம்' என்ற சத்தியத்தை உணர்த்தும்விதமாகவே, சாஸ்திரங்கள் இறையின் மறக்கருணை குறித்தும் விளக்குகின்றன.தண்டனை இல்லாவிட்டால் குற்றங்கள் பெருகிவிடும் என்பதால் உருவான கருத்துக்கள் இவை. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் பலன் உண்டு. எவ்வளவு காலமானாலும் எதிர்வினை நிகழ்ந்தே தீரும்.

ஞானநூல்கள் அளிக்கும் இதுபோன்ற கருத்துகள் யாவும், மனிதர் கள் ஒழுக்கத்தோடும் சுயக் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டவை. தீ விபத்து ஏற்பட்டால் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது போல், விமான பயணத்தில் எதிர்பாராத விபத்து நேரிட்டால் என்ன செய்யவேண்டும் என்று வழிகாட்டுவது போல்... சாஸ்திரங்கள் நமக்குச் சொல்லும் வழிகாட்டல்கள் இவை. அனைத்தும் நமது நல் வாழ்வுக்காகத்தான்; துன்ப வேளையிலும் நேர்மையாக வாழவேண்டும் என்று கற்பிப்பதற்காகத்தான். அன்பு மயமான நம் சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டால் இனிமையான வாழ்வைப் பெறலாம்.

? தியானத்தில் வெகுநேரம் ஆழ்ந்திருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்த இயலவில்லை. இப்படியான தியானத்தால் பலன் உண்டா?

- வீ.ராமநாதன், திருப்பூர்

‘மனதை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத் துவதே தியானம்' என்கிறார் பதஞ்சலி. எந்த நிலையிலும் மனம் அலைபாயாமல் குறிப்பிட்ட காரியத்தில் கவனம் செலுத்த தியானம் உதவும்.

வெகுசிலருக்கு மட்டுமே,  ஆரம்பத்திலேயே மனம் குவிந்து தியானம் வசப்படும். அதற்குக் காரணம் பூர்வ ஜன்ம புண்ணியம். ஆனால், பலருக்கும் ஆரம்பத்தில் தியானம் கைகூடுவதில்லை. பகவான் கிருஷ்ணனும் ‘பழக்கத்தின் விளைவா கவே தியானம் கைகூடும்’ என்கிறார்.

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

பலவித நெருக்கடிகளால் அலைபாயும் மனது, உடனடியாக ஒருமுகப்படுவது என்பது கடினம் தான். ஆகவே, தொடக்கத்திலேயே மனம் ஒருமுகப்படவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

பரபரப்பான வாழ்க்கையில் தியானம் அவசி யம். தியானம் பழகப் பழக மனம் லயித்துவிடும்.  அப்போது அது இறைவனை உணரும். அதன் விளைவால் மனதில் நிம்மதியும் சௌக்கியங்களும் உண்டாகும். துன்பங்கள் நேர்ந்தாலும் கலங்காது. ஆக, துன்பங்களின்போது துவண்டுவிடாமல் இருக்க தியானம் உதவும்.

? சந்திரனில் காலடி வைத்தபிறகும் சந்திரனை வழிபடுவது தவறல்லவா? மெய்ஞ்ஞானத்தை விட இன்றைய விஞ்ஞானம் மேலானது இல்லையா?

- கே.முருகவேள், தூத்துக்குடி


சந்திரனை விடுங்கள்... பூமாதேவி என்று பூமியை வணங்குகிறோம். இங்கு நாம் இல்லையா? இயற்கையின் எல்லா அம்சங்களையும் வழிபடுவது நம் தர்மம். அனைத்து ஜீவன்களிலும் இறையம்சம் உள்ளது என்பதே நம் நம்பிக்கை. இதையே வேதங்களும் போதிக்கின்றன.

சந்திரன் மட்டுமல்ல, இனி எந்தக் கிரகத்தில் மனிதர்கள் குடியேறினாலும் அந்தக் கிரகத்தின் புனிதத்தன்மை குறைந்துவிடாது. சூரிய- சந்திரர் களைப் பற்றி விஞ்ஞானம் ஆய்ந்துசொல்வதற்கு முன்பாகவே... அதாவது பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே `சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவர் ஈசன்' என வர்ணிக் கிறது நம் வேதம்.

ஆக, அப்போதே சூரியனின் ஆற்றல், சந்திரனின் தன்மை குறித்த ஞானம் நம்மிடம் இருந்திருக்கிறது.  கயிலாயத்தை அளந்துவிட்டோம் என்பதால், இனி அதை வழிபடத் தேவையில்லை என்று சொல்வது நியாயமாகாது!

விஞ்ஞானம் அளவுகோல் கொண்டது. எங்கே விஞ்ஞானம் தெளிவு பெறாமல், முன்னேற முடியாமல் தேங்கி நிற்கிறதோ, அங்கே மெய்ஞ் ஞானம் தகுந்த விளக்கத்தைத் தரும்.  விஞ்ஞானத் தின் பலனை முழுமையாக அனுபவிக்கக்கூட மெய்ஞ்ஞானம் தேவைப்படுகிறது.

அணுசக்தி விஞ்ஞானம். அது மெய்ஞ்ஞானம் கொண்ட நல்லவர்களின் கரங்களில் இருக்கும் வரைதான் நல்லது. விஞ்ஞானம் மாறக்கூடியது; மெய்ஞ்ஞானம் நிலையானது.

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஐயமின்றி அறிந்துவைத்திருப்பது மெய்ஞ்ஞானம். விஞ்ஞானம் இப்போதுதான் அறிய ஆரம்பித் துள்ளது. அதனால் `விஞ்ஞானத்தால் அறியப்பட்ட விஷயங்களை வணங்கத் தேவையில்லை ஒதுக்கி விடலாம்' என்றால், அது அறியாமையே!

கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?

? பிள்ளையாரை, குறிப்பாக அரசு மற்றும் வேப்ப மரத்தடியில் பிரதிஷ்டை செய்வது ஏன்?

- எம்.கீர்த்தனா, வாழைப்பந்தல்

மரங்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதைப்  புராண காலங்களிலிருந்தே வலியுறுத்தி வந்திருக் கிறார்கள் நம் முன்னோர். அதற்காகவே ஆலயம் தோறும் ஸ்தல விருட்சங்களை வைத்துப்  பாது காத்து வருகிறோம். அரச மரம் விஷ்ணுவின் அம்சம், வேப்ப மரம் பராசக்தியின் அம்சம்.

இந்த மரங்களின் அளவில்லாத நல்ல அதிர்வலைகளோடு, கணபதியின் அருளும் சேர்ந்து உலாவும் இடத்துக்கு வந்து வழிபடும் அன்பர்கள், நேர்மறை சிந்தனைகளை அடைந்து பயன்பெறுகிறார்கள். இது ஆன்மிகத்தோடு மருத்துவப்பயனும் இணைந்த சூட்சும விஷயம்.

மரங்களின் கீழே அருளும் கணபதி மிக மிக விசேஷமானவர். அங்கே வந்து வணங்குபவர்கள் உடல் நலமும், மன நலமும் பெற்று வாழ்வார்கள்.

? கிராமப்புறங்களில் சில பிணிகளை மந்திரித்துக் குணப்படுத்துவார்கள் என்பர். இது சாத்தியமானதா?

- எஸ். சந்திரசேகரன், சென்னை-53

இதேபோன்றதொரு கேள்விக்கு ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறோம். தெளிவான பயிற்சி, முறையான ஜபதபங்கள் செய்பவரால் மந்திரங்கள் வலுவாகும். அப்போது மந்திரம் பலித்து குணமா கும் என்பது நம்பிக்கை.

‘மணி, மந்திரம், ஔஷதம்' என்று அருளியுள்ளார் கள் நம் பெரியவர்கள். துளசி மாலை, ருத்ராட்சம், ஸ்படிகம், குளிகைகள் போன்றவை மணிகள். இவை தீய அதிர்வுகளை, கிருமிகளைத் தடுக்கும். `மந்திரம்' என்றால் `உச்சரிப்பதால் காப்பாற்றுவது' என்று பொருள்.  `ஔஷதம்' என்றால் மூலிகைகள், ரசவாதங்கள் கொண்ட மருத்துவ முறை.

இந்த மூன்று வழிகளும் நோய்களைக் குணமாக் கும் பொருட்டு நம் முன்னோர் அருளிய வழி முறைகள் ஆகும். தீமைகளை மணி தடுத்துவிடும், அப்படியும் சிரமம் என்றால் மந்திரங்கள் உதவும்.  அப்போதும் முடியாதபட்சத்தில் ஔஷத சிகிச்சை குணமாக்கும்.  தெய்வங்களைப் போற்றும் திருப் பதிகங்களும், பாசுரங்களும்கூட மந்திரங்கள்தான். நம்புபவர்களுக்கு அவை பலனளிப்பவை; நம்பாதவர்கள்,  தங்களுக்கான வழிகளில் பயன் பெறலாம் தவறில்லை.

ஒலி அலைகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. எண்ணற்ற அந்நிய ஆக்கிரமிப்பு களால் நாம் தொலைத்துவிட்ட பொக்கிஷங்கள் மீட்கப்படும் நிலை வந்தால், நம் முன்னோர் அருளிய மருத்துவமுறையின் சிறப்பை அறியும் வாய்ப்பும் கைகூடும்.

- பதில்கள் தொடரும்...

- காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002