மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

? சூரிய நமஸ்காரம் சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

- ராமகிருஷ்ணன், சென்னை - 90

`நமஸ்காரம்' என்பதே அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. அனைத்தும் தெய்வச் செயல் என்பதன் அடையாளம்தான் நமஸ்காரம்.

நம் கண்களுக்குப் பிரத்யட்சமாகத் தெரியும் கடவுள் சூரிய பகவான். சகல உயிர்களுக்கும் அன்னம் அளிப்பவன் சூரியன் என்பதால், சூரியபகவானுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு முறைதான் சூரிய நமஸ்காரம். பூமியின் அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியபகவானை வழிபடுவதன் மூலம், அனைத்து தேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறது வேதம். சூரிய நமஸ்காரம் நம் உடல், அறிவு, மனம் ஆகியவற்றுக்கு ஆற்றலை அளிக்கிறது.

அதிகாலை சூரிய ஒளி, நமக்கு எண்ணற்ற ஆரோக்கியப் பலன் களை அளிப்பதாக இன்றைய மருத்துவம் வியப்புடன் பரிந்துரைக் கிறது. சூரியனின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெற்று நிறை வான வாழ்க்கை வாழ சூரிய நமஸ்காரம் அவசியமாகிறது.சூரியனை வழிபட எளிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களால் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி, சூரியனின் அனுக்கிரகத்தை சூரியனின் கிரணங்கள் மூலமாக நாம் பெறவேண்டும்.

அனைத்து இயக்கங்களுக்கும் மூலாதாரமான சூரியனை வழிபடுவதென்பது வெறும் சடங்கு அல்ல. அது, நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லதொரு மார்க்கம்; எந்தச் செலவுமின்றி நாம் ஆரோக்கியம் பெறுவதற்கானச் சிறப்பு வழி.

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

? விரதங்களின் அவசியம் என்ன? உண்ணாமல் கொள்ளாமல் வழிபட்டால்தான் ஆண்டவனின் அருள் கிடைக்குமா?

- ராதா சங்கர், காரைக்குடி

‘விரதம்’ என்றால் கட்டுப்பாடு என்றும் பொருள். நமக்குப் பிடித்தமான, அவசியமான பொருள்கள் இருந்தும் அவற்றை அனுபவிப்பதைத் தவிர்க்கும் நிலையே விரதம். பொருள்களின் மீது ஆசையைக் குறைந்து பரம்பொருளான இறைவ னின் மீது ஈடுபாட்டைக் கொண்டுவரும் முயற்சியே விரத வழிபாடு.

புண்ணிய காலங்களில் மேற்கொள்ளப்படும் விரதங்கள் மிகுந்த பலனை அளிக்கும். செல்போன் சிக்னல் நன்றாகக் கிடைக்கும்போது, நாம் பேசுவது மிகவும் தெளிவாகக் கேட்பதுபோல், விரத காலங்களில் உபவாசமிருந்து வழிபடும்போது, மனம் இறையுணர்வில் லயிப்பதுடன், இறைவ னுடன் ஒன்றிணையவும்  செய்கிறது. அப்போது நமது வழிபாடு முழுமையடைகிறது.

நல்லவற்றைப் பழகவும் செய்யவும்தான் நாம் இந்தப் பிறவி எடுத்திருக்கிறோம். மாமிசம் உண்பது, போதை வஸ்துகளைப் பயன்படுத்துவது, புலன்களின் இச்சையைத் தூண்டும் செயல்கள் போன்றவற்றை விலக்கவேண்டும் என்பது ஞான நூல்கள் காட்டும் தர்மநெறி. இயலாதவர்கள் விரத காலங்களில் அதற்கான முயற்சியைத் தொடங்கி, மெள்ள மெள்ள அத்தகைய பழக்கங்க ளிலிருந்து விடுபடவேண்டும். இதுதான் விரதம் கடைப்பிடிப் பதன் பிரதான நோக்கம்.

இதற்காகவே விரதம் அனுஷ்டிப்பதற்கான புண்ணிய காலங்களை சாஸ்திரங்கள் விதித்திருக் கின்றன. விரதங்களைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நம்மைக் கட்டா யப்படுத்துவதில்லை. நம் நல்வாழ்வுக்காகத்தான் விரதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு நாம் விரதங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.

கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

? மறுபிறவி குறித்து இந்து மதம் மட்டுமே  குறிப் பிட்டுப் பேசுகிறது. மறுபிறவி என்பது உண்மைதானா?

- மோகனா, திருச்சி-1

மறுபிறவியை இந்து மதம் மட்டுமே வலியுறுத்த வில்லை. பௌத்த, சமண மதங்களும் பலவாறாக வலியுறுத்திக் கூறுகின்றன. மறுபிறவி என்ற கருத்து எல்லோருக்கும் அவசியமானது. மறுபிறவி என்ற நம்பிக்கைதான் பலருக்குத் தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. விடையே தெரியாத பல உயர்வு, தாழ்வு குறித்த மனச் சலனங்களுக்குத் தீர்வாக அமைவதுடன், மனிதனுக்கு நம்பிக்கை ஊக்கம் அளித்து அவனை முன்னேறச் செய்கிறது,  இந்த மறுபிறவி நம்பிக்கை.

‘நல்லவன் கஷ்டப்படுவதும், தீயவன் சந்தோஷ மாக இருப்பதும் ஏன்?’ என்ற கேள்விக்கு விடை அளிப்பது, இந்த மறுபிறவித் தத்துவம்தான். கர்ம வினைகளுக்கேற்ப பிறவி உண்டு என்பதால்தான், நம்மில் பலர் ஒழுங்காக வாழ்கிறார்கள். நன்மை செய்தால் அடுத்தப் பிறவியில் சுகமாக வாழலாம் என்ற கருத்து அமைதியை உருவாக்குகிறது. தேவையற்ற பாவச் செயல்களைக் குறைக்கிறது. பாவச்செயலுக்குத் தண்டனை உண்டு என்ற நியதி, மனிதர்களை நியாயவான்களாக வாழ வைக்கிறது. மறுபிறவி நம்பிக்கையானது உறவு களை இழந்த நபர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக் கிறது. `பிறவியே வேண்டாம்' என்று வணங்குவதே நம் வழக்கம். பிறவிகள் வேண்டாம் என்று எண் ணும் அன்பர்கள், கர்மவினைகளில் கவனமாக இருக்கவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

- காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002