Published:Updated:

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

முப்பொழுதும் நம்மைத் தப்பாமல் காக்கும் விநாயகர் அவதரித்த தினம், ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திருநாள். இதையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.

‘பிடித்துவைத்தால் பிள்ளையார்’ என்பார்கள் பெரியோர்கள். ஆம்! பெரிதினும் பெரிதானவர் விநாயகர். எனினும், பக்தர்களுக்கு எளியவர் அவர். மண், மஞ்சள், வெல்லம், மாவு... என கிடைக்கும் பொருளில், பிள்ளையாரை நினைத்துப் பிடித்துவைத்தால் போதும், அதில் கனஜோராக எழுந்தருளிவிடுவார் கணபதி. அவருக்கு விரிவான வழிபாடுகள் தேவை யில்லை; எளிதில் கிடைக்கும் அறுகம்புல்லைக் கொண்டு அன்போடு அர்ச்சித்தாலே போதும், அதில் அகமகிழ்ந்து அருள்வாரி வழங்குவார் அந்த வள்ளல்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

அதுமட்டுமா? பிள்ளையாரே மூவருக்கும் முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையானவர். இந்த ஞானமுதல்வரை தீபத்தால் வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும். ஆம்! வழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. தெய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். ஆக, பிள்ளையாரை தீபங்களால் ஆராதிப்பது சிறப்பு அல்லவா?

அவ்வகையில், சக்தி விகடனும் தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரி இணைந்து வழங்கும், `ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்’ சிறப்புப் பரிசுப்போட்டி அறிவிப்பு வெளியானதும், எண்ணற்ற வாசகர்கள் வெகு ஆர்வத்தோடு தங்கள் படைப்புகளை அனுப்பிவைத்தார்கள். அவற்றில் தேர்வுசெய்யப்பட்ட - பரிசுக்குரிய சிறந்த படைப்புகள் இந்த இதழில்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

கொழுகொழு பிள்ளையார்; கொழுக்கட்டை பிள்ளையார்! இயற்கை பிள்ளையாரை உருவாக்கும் எண்ணத்தில், மாவினால் உருவான அழகிய பிள்ளையார் இவர்.

பிள்ளையார் உருவானதும் 'எலி இல்லையே அம்மா!' என்று ஞாபகப்படுத்தி, அதைத் தயார் செய்தது, என் மகள் கனிஷ்கா.

மோதகப் பிள்ளையாருக்கு, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களைப் படைத்து, மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி வணங்கி மகிழ்ந்தோம். குழந்தைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற போட்டிகள், மிக மிக அவசியமே!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

பிள்ளையாரை வழிபட்டபிறகே எந்தக் காரியத்தையும் தொடங்கவேண்டும் என்பார்கள்.    அவ்வகையில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டே  உருவாக்கினோம் அவரை.

அரிசி மாவில் மஞ்சள் பொடி சேர்த்து பிள்ளையாரைப் படிப்படியாக உருவாக்கினோம்.  எவ்வித குறையுமின்றி, அமர்ந்த நிலையில் அழகுப் பிள்ளையார் உருவானார். எப்போதும் சேட்டை செய்யும் என் மகன் பிள்ளையார் செய்யும்போது சமர்த்தாக அமர்ந்திருந்தது, வியப்பு! தீபங்கள் ஒளிர மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கணபதியை தரிசித்த கணம், மிகவும் சிலிர்ப்பு!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

நானும், என் மகன் தேஜஸ் அருணும் ஆர்கனிக் முறைப்படி களிமண் விநாயகர் செய்யும் முறையை, ஏற்கெனவே ஒரு பயிற்சியில் கற்றுக்கொண்டுள்ளோம். அந்தப் பயிற்சி இப்போது கைகொடுத்தது. வரும் சதுர்த்திக்கு இப்போதே விநாயகர் தயார்.

இந்த கணேசரின் கையில் உள்ள கொழுக்கட்டையின் உள்ளே சில காய்கறி விதைகளை வைத்து உருவாக்கியுள்ளோம். நீரில் கரைத்தாலும் செடியாய் முளைப்பார் எங்கள் கணபதி. மகன் தேஜஸ், அனுதினமும் பக்தியோடு இவரை வழிபடுவதில் மகிழ்ச்சி. சரணம் கணேசா!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

கோபுர வாசலில் துவார கணபதி! கோதுமை மாவில் உணவு வண்ணங்களைச் சேர்த்து உருவாக்கினோம்.  கணபதியின் பிரமாண்டத்தை உணர்த்தும் வகையில், பின்னணியில் கோபுர பொம்மையை நிறுத்தினோம். தாமரை மலர் மீது அமர்ந்த லட்சுமி கணபதியை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். விநாயகப்பெருமான் அழகாக எழுந்தருள, அவருக்கான லட்டும் மாவிலேயே!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ங்கள் நிலத்தில் கிடந்த சிறிய பாறைத் துண்டு ஒன்று, பார்ப்பதற்குப் பிள்ளையாராகக் காட்சி அளித்தது. அந்த நேரத்தில்தான் சக்தி விகடன் அறிவிப்பும் வந்தது. ஆக, கணபதியின் இயற்கையான சிற்பத்தின் மீது தும்பிக்கை, காது, கிரீடம், பாதம், திண்டு, மேல்துண்டு எல்லாம் ஒட்டி, ஆபரணக் கற்களால் அலங்கரித்து, மலர்கள் சமர்ப்பித்து தீபமேற்றி வணங்கினேன்.

செதுக்காமல் உருவான இந்தப் பிள்ளையாரும் `பொல்லாப் பிள்ளையார்'தான். ஆனந்தமும் ஆயுளும் அருளும் இந்த ஆனந்த கணபதி எல்லா நலமும் வளமும் அருளட்டும்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ன் மகள் அபிராமியும், சித்துவும் இணைந்து செய்த பிள்ளையார் இவர். இங்குள்ள அகல், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை எல்லாமே அரிசி மாவால் உருவானவையே.  தீப அலங்காரத்தில் பிள்ளையாரின் தரிசனம், கண்கொள்ளா காட்சி!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ங்கள் இல்லமெங்கும் நிறைந்திருக்கும் ஆனைமுகன் இப்போது தீப அலங்காரக் கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருக்கிறான். பல்வேறு தருணங்களில் நாங்கள் உருவாக்கிய இந்த பிள்ளையார்கள், எங்கள் வழிபாட்டுக்குரிய படைப்புகள். சக்தி விகடன் - தீபம்  அறிவிப்பைப் பார்த்ததும், எங்களின் செல்லப் பிள்ளையார்களை ஒருங்கே கொலுவீற்றிருக்கச் செய்து, ஆசைப்படி அலங்கரித்தோம். அருள்நிறைந்தது எங்கள் வீட்டில்.

ஆனைமுகனின் அருள் பரவி எங்கும் எப்போதும் ஆன்ம ஒளி வீசட்டும். கணேச மூர்த்தியே சரணம்... சரணம் உன் தாள்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

னக்குக் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம் உண்டு. ஆகவே,   சக்திவிகடன் - தீபம் வழங்கும் இந்தப் போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்ததும், என்னை அவசியம் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார் அம்மா.

நானும் ஆர்வமாகி உருவாக்கிய அழகு பிள்ளையார் இவர். குட்டிப் பானையில் வர்ணம் தீட்டி பிள்ளையாருக்கு அழகான பீடமும் தயார் செய்தேன். நான் முதல் முதலாக செய்த ஆனைமுகனுக்கு, பூ அலங்காரம் செய்தும், அகல் தீபம் ஏற்றியும் வழிபட்டபோது, அளவில்லா மகிழ்ச்சி என் மனதில்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ரத்தால் இழைத்து உருவாக்கிய இந்தக் கணபதி விசேஷமானவர். அழகும் உயிர்ப்பும் கொண்ட இந்தக் கணநாதர் மனதில் நிறைந்துவிட்டார். தெய்வத்தில் முதன்மையானவரை தீபத்தால் வழிபடுவது விசேஷம் என்ற வார்த்தையும் அறிவிப்பும் என்னை ஈர்க்கவே, இந்தப் பிள்ளையாருக்கு தீப அலங்காரமும் செய்தோம். கூடவே சில வண்ணப்பூக்களாலும் அலங்கரித்து மகிழ்ந்தோம்.

மிக அற்புதமாகக் காட்சி தந்தார் எங்கள் வீட்டு ஆனைமுகன். தும்பிக்கையான் அருளால் எல்லாமும் நலமாகும் என்று நம்பிக்கை பிறந்தது!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தி வருவதற்கு ஒரு மாதம் முன்பே ஆங்காங்கே விநாயகர் சிலைகள், பொம்மைகள் என வாங்கிக் குவிப்போம். ஆனால்  இம்முறை ஒரு மாறுதலுக்காக என் விநாயகரை நானே உருவாக்கத் திட்டமிட்டேன். வீட்டில் இருக்கும் எல்லா விநாயகர் படங்களும் எனக்கு முன்மாதிரியாக அமைந்தன. இயற்கையான பொருள்களால் என் விநாயகர் உருவானார். மேலும் மணிகள் கொண்டும் அலங்கரித்தேன்.

இப்போது, பிள்ளையார் நேரிலேயே என் வீட்டுக்கு வந்த திருப்தி எனக்கு.

அழகிய கணபதியே போற்றி!

ஆனைமுகத்தானே போற்றி!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

தாயும் தந்தையும் மட்டுமே உலகம் என்று எல்லோருக்கும் உணர்த்திய கணநாதனே எங்கள் இஷ்டத் தெய்வம். என்னை உயிரில் தாங்கி வளர்த்த என் அன்னை தந்தையை வணங்கி இந்தக் கணபதியை அரிசி மாவில் உருவாக்கி அலங்கரித்தோம்.

பிள்ளையாரைச் செய்யும்போது, அவரது திருக்கதைகளைக் கூறி, என் மகனுக்கு அந்த ஆதிமூலனின் அற்புதங்களையும் எடுத்துச் சொன்னது கூடுதல் சிறப்பு.

ஓம் கணேச ஓம் கணேச,
ஓம் கணேச பாஹிமாம்,
ஓம் கணேச ஓம் கணேச,
ஓம் கணேச ரக்ஷமாம்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

சிறப்புப் போட்டி அறிவிப்பைக் கண்டவுடன் `கணபதி உருவம் ஏதாவது செய்யேன்' என்று மனம் கெஞ்சியது. பிள்ளையார் கணநேரத்தில் உலகைச் சுற்றினாரே, அதுபோல் குறுகிய நேரத்தில் ஏதாவது செய்யலாமா என்று நினைத்ததும், `நானிருக்கிறேனே' என்றது தேன்குழலுக்குத் திரித்த அரிசி மாவு. பிறகென்ன... மாவு, முந்திரி, பிஸ்தா எல்லாம் கலந்து ரங்கோலியாக உருவானார் மகிழ்ச்சி விநாயகர்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

கா சதுர்த்திக்கு வரவேண்டிய கணபதி இன்றே வந்துவிட்டார். மஞ்சள் தூளில் கணபதியை உருவாக்கி, முந்திரி, மலர்கள் கொண்டு அலங்கரித்தோம். சுற்றிலும் தீபங்கள் ஏற்றி ஞான கணபதியை வணங்கினோம். இந்த விநாயகர் தயாரிப்பில் எங்கள் மகன் சாய் பங்கே அதிகமானது. கணபதி சிலை தயாரிக்கவேண்டும் என்றதும் சாய் ஓடி ஓடி மலர்களை பறித்து வந்தும், அலங்கார வேலைகளில் உதவியும் மகிழ்ந்தான். தீப ஒளியில் மிதந்த கணபதிக்கு பாலும், கற்கண்டும் வைத்து நைவேத்தியம் செய்தோம்; கணபதியைக் கைதொழுதோம்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

னைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! விநாயகரை உருவாக்க வேண்டும் என்றதுமே என் மகள் அக்ஷிதா குஷியாகிவிட்டாள். குழந்தைகள் கொண்டாடும் கடவுள்தானே கணபதி. நானும் அவளுமாக பிள்ளையாரை அரிசி மாவில் தயாரித்தோம். கிரீடம், காது, துதிக்கை என்று பயபக்தியோடு பார்த்துப் பார்த்து உருவாக்கினோம். கணநாதரின் அருளால் நன்றாகவே உருவாகிவிட்டார்.

அரிசி மாவுப் பிள்ளையாரை வணங்கினால் அன்னலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ங்கள் அப்பா இந்தத் தீப கணபதி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என்று சொன்னதும் மகிழ்ந்துபோனேன். எங்கள் நிலத்தில் மண்ணெடுத்து பிசைந்து இந்தக் கணபதியை உருவாக்கினோம். காது கொஞ்சம் பெரியதாக உள்ளது, மாற்றுங்கள் என்று அப்பா சொன்னார். அதுவும் எங்கள் பிள்ளையாருக்கு அழகுதான் என்று சொல்லி மறுத்துவிட்டோம். சக்தியின் மூத்த பிள்ளை கணபதியை அலங்கரித்து தீபமேற்றி வழிபட்டு, எங்கள் வீட்டைச் சுற்றி ஊர்வலமும் கொண்டு போனோம். அப்பனவன் மடியமரும் அருட்கனியே கணபதியே போற்றி! போற்றி!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

கேரள மியூரல் பாணியில் இந்த பிள்ளையாரை உருவாக்கியுள்ளேன். கேன்வாஷ் போர்டில் வண்ணங்களை உபயோகித்து வரைந்து, அதன் மீது சரிகைத் தாள்கள் ஒட்டி அழகுபடுத்தி இந்தக் கணபதியை தயார் செய்தேன். எனக்கு என் பேத்தி சாய் தர்ஷினியும், அவள் தோழி சாதனாஸ்ரீயும் உதவினார்கள்.

நெஞ்சுருக வேண்டியே
நிலம்பட சிரம் தொட்டு
வேண்டுவோர் நெஞ்சமெல்லாம்
ஐங்கரன் தோன்றுவான்.
ஆனைமுகம் காட்டுவான்
ஆனந்தமாக வந்து நம்மை ஆளுவான்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய நான், செவ்வக அட்டையில் கோந்து தடவி ஆற்று மணலை தூவி காயவைத்தேன். அதன் மீது வண்ணங்கள் தீட்டி, களிமண்ணால் கணபதியின் கண், துதிக்கை, திருமுடி, சூரியன், திரிசூலம், நாமங்கள், ஸ்வஸ்திக்  உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒட்டவைத்து காயவைத்தேன்.

காய்ந்ததும் மீண்டும் வண்ணம் தீட்டி பூஜையறையில் வைத்து அலங்கரித்து தூப தீபங்கள் காட்டி வழிபட்டேன். நவீன வடிவில் உருவான எங்கள் கணபதி, வாசகர்கள் எல்லோருக்கும் நன்மை அருளட்டும்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ளிமண் பிள்ளையார் கனிவோடு உருவானார். ஆம்! பிள்ளையார் என்றதுமே களிமண் பிள்ளையார்தான் ஞாபகம் வந்தார். களிமண் விநாயகர் சிலை செய்யும் இடத்துக்குச் சென்று அவர்களிடம் களிமண்ணும், அச்சும் வாங்கி, என் மகள் காயத்ரி அங்கேயே அமர்ந்து அச்சில் செய்து வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டாள். வீட்டுக்கு வந்த கணபதியை ரோஜா மலர்களால் அலங்கரித்து, சுற்றிலும் விளக்குகள் ஏற்றி, தீபச் சுடர்களைப் பிரகாசிக்க வைத்து  தரிசித்தோம். பொங்கலும், சுண்டலும் படைத்து பிள்ளையார் சதுர்த்தியை முன்னதாகவே கொண்டாடி மகிழ்ந்தோம். 

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ன் பேரனுக்குச் சறுக்கு மரம் என்றால் ரொம்பப் பிடிக்கும். நான் பிள்ளையார் செய்ய ஆரம்பித்ததும் அவன் விருப்படி சறுக்கு மரப் பிள்ளையாரை செய்தேன். பிள்ளையார் குழந்தைக் கடவுள் என்பதால், குழந்தைகள் விருப்பப்படியும் விநாயகர் திருவுருவைச் செய்யலாமே! அழகிய குழந்தை கணபதி மாவில் உருவானார். இயற்கை வண்ணம் தீட்டி கணபதியை அலங்கரித்து வழிபட்டோம். என் பேரனுக்கும் மிகவும் சந்தோஷம். இந்தக் கணபதியை தன் பொக்கிஷமாகவே வைத்துள்ளான். இன்பமருளும் கணபதி எல்லோருக்கும் துணையிருக்கட்டும்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ன் மகன் தமிழ் விளையாட்டிலும், கலைப் பொருள்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவன். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள களிமண் பிள்ளையாரை வாங்கி, அதற்கு வண்ணங்கள் தீட்டி, அழகுபடுத்தினான். அழகே உருவான பிள்ளையாருக்கு நான் கோலமிட்டு தீபங்கள் ஏற்றியதும், பூச்சூட்டி ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டான். விநாயகர் சதுர்த்தியில், கணபதி ஆசியும் அருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

னிவான பிள்ளையார் 'கனியில்' தோன்றினார். ஞானப்பழம் வென்ற அன்புப் பிள்ளையாரை எப்படி உருவாக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தபோது சட்டென்று உதித்த யோசனையே இந்த ஆப்பிள் பிள்ளையார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தயாராகி எங்கள் வீட்டில் எழுந்தருளிவிட்டார், ஆப்பிள் கணபதி. உடனடியாக பீடமும் தயார் செய்து, சுற்றிலும் தீபங்கள் ஏற்றி கொலுவைத்தோம் ஆப்பிள் கணபதியை. அற்புத தரிசனம்!

`மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும் அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்!'

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ண், பசுஞ்சாணம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். என்றாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் விரைவில் வேண்டியது கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி முதன்முதலாக உருவாக்கியது மஞ்சள் பிள்ளையார்தானே. ஆகவே, மஞ்சள் பிள்ளையார் விசேஷமானவர் என்று நானும் என் மகனும் மஞ்சள் பிள்ளையாரை உருவாக்கினோம். மஞ்சள் கணபதி, சகல சௌபாக்கியங்களும் அளித்து எல்லோருக்கும் அருள்புரியட்டும்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

கொழுக்கட்டை மாவில் என் மகள் கிருத்திகாவும், கார்த்திகாவும் இணைந்து செய்த கணபதி இவர். கூடையில் பட்சணங்கள் வைத்துக்கொண்டு அமர்ந்த நிலையில் ஆனந்தமான கணபதி வீற்றிருக்கிறார். பருப்புகளால் அலங்கரித்து தீபங்கள் சூழ இவரை வழிபட்டோம். எளியோர்க்கு எளியனான எங்கள் கணநாதன் உங்கள் எல்லோருக்கும் அருள்புரியட்டும். நாடும் வீடும் நலம் பெற வாழ்த்தட்டும்.

அன்புடன் அமரரைக்
காப்பாய் ஜய ஜய
ஆன்மத் துணையே
கணபதி ஜய ஜய!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

பிள்ளையார் உருவம் செய்யவேண்டும் என்றதுமே மனம் சந்தோஷத்தில் துள்ளியது. சந்தனப் பிள்ளையார் எழுந்தருளினால் அந்த இடமே பரிமள காந்தியோடு விளங்கும். அதனால் சந்தனம் கொண்டு அழகிய விநாயகரை உருவாக்கினோம்.

காது, தும்பிக்கை, தந்தம் என ஒவ்வொன்றும் உருவாகும்போது கவனமாகச் செய்தோம். எப்படி வந்தாலும் கணபதி அழகுதானே? கணபதியை அரளிப்பூ வைத்து தீபங்கள் கொண்டு அலங்கரித்து வணங்கினோம். எங்கெங்கும் வீற்றிருக்கும் பிள்ளையார் எங்கள் தாம்பாளத் தட்டில் அழகாக அமர்ந்துகொண்டார்.

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!
ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

ரிசாய்க் கிடந்த நிலத்தில், நெற்றி வேர்வையை நீராக்கி விவசாயி படைத்ததாம் அரிசி. அந்த அரிசியை மாவாக்கி, அதிலே தீபமேற்றி தரிசிக்கும் நோக்கத்தில் நாம் படைத்ததாம் - இந்த ஆனை முகன்! வாழ்த்திடுவோம் விவசாயத்தை, வணங்கிடுவோம் விநாயகரை!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.

ஸ்ரீகணேச ஸ்ரீகணேச
ஸ்ரீகணேச பாஹிமாம்!

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!