மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

? நவராத்திரியின்போதும், விசேஷ காலங்களிலும் சுவாஸினி பூஜை செய்கிறோம். சுவாஸினி பூஜையின் தாத்பர்யம் என்ன, அதனால் கிடைக்கும் பலன் என்ன?

-ரமாதேவி, சென்னை -33

ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வதுண்டு. அந்த வகையில், நம் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் பெண்களை நாம் கொண்டாடவேண்டும். சாஸ்திரங்களும் இதை வலியுறுத்துகின்றன.

அம்பிகையைச் சக்தி என்று போற்றுகிறோம். பெண் தெய்வ வழிபாட்டை  சக்தி வழிபாடு என் கிறோம். பெண்களையும் சக்தியின் அம்சம் என்று போற்றுகிறோம். ஒரு பெண்ணுக்குக் கிடைக்கிற கல்வி, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பரவும். அதே போல் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் இறைசக்தி, அவளின் வீடு முழுவதிலும் வியாபிக்கும்.

ஒரு வீட்டின் இதயமாகத் திகழும் பெண்களைக் கொண்டாட காரடை யான் நோன்பு, சுமங்கலி பூஜை என எத்தனையோ பூஜைகள், வழிபாடுகள்  உண்டு. அவற்றில் சுவாஸினி பூஜை விசேஷமானது.

‘வஸ்’ என்றால் `தங்குதல்' என்று அர்த்தம். ‘வாஸினி’ என்றால் `தங்குப வள்' என்று பொருள். ‘சு’ என்பது அம்பாளின் சக்தியையும் சாந்நித்தியத் தையும் குறிக்கும். ‘சுவாஸினி’ என்றால், முழுமையான சக்தியுடன் தங்குபவள் என்று அர்த்தம். இந்த சுவாஸினி பூஜையில், சக்தி எனப் படும் அம்பாளின் முழு ஆற்றலும் வெளிப்படும் என்கின்றன வேதநூல்கள். அதாவது, பூஜைக்கு வரும் பெண்களே சுவாஸினி பூஜையை, அம்பிகை வழிபாட்டைச் செய்வார்கள். அப்படிச் செய்வ தற்கு முன்னதாக, அவர்களே அம்பிகையாக மாறி, அந்த பூஜையைச் செய்வார்கள் என்பது பெண் களுக்கு மட்டுமே கிடைக்கும் பெருமை.

பெண்கள், வாழ்வில் ஒரேயொரு முறை சுவாஸினி பூஜையில் கலந்துகொண்டு, அம்பிகை யாக உங்களை வரித்துக்கொண்டு, அந்த ஜகன் மாதாவை, கருணைத் தாயை மனதார பூஜித்தால் போதும்; சீக்கிரமே உங்கள் துயரங்கள் அகன்று, உங்கள் இல்லத்தில் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிடும்.

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

? சமீபத்தில் காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றி ருந்தபோது, சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. என்னை யாரென்றே தெரியாத அர்ச்சகர், அம்பிகையின் எலுமிச்சைப்பழ மாலையைப் பிரசாதமாக எனக்குக் கொடுத்தார். அந்த எலுமிச்சைப் பழங்களை நான் என்ன செய்யலாம்?

-எம்.எஸ்.சுந்தரமூர்த்தி, சென்னை 3

எல்லாம்வல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்தும் தூய்மை நிலையைப் பெற்று விடு கின்றன. இதனாலேயே பிரசாதங்களை நிர்மால்யம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

நாம் இந்த உடலைப் பெற்றிருப்பது, முற்பிறவி யில் செய்த கர்மவினைகளினால் என்பதை உணர்ந்து ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்து இறைவனடி சேருவதே நமது பிறப்பின் குறிக்கோள். இந்த நிலையை அடைவதற்குப் பல வழிகள் கூறப் பட்டிருக்கின்றன.

எனினும் எளிமை யான வழி, ஆலயங்களில் நமக்கு பூஜித்து அளிக்கப்படும் திவ்ய பிரசாதங்களை வீணாக்காமல் பயன்படுத்துவதே. அவை நம் உடலி லும் உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத் தக்கூடிய ஆற்றல் மிகுந்தவை.

எலுமிச்சைப் பழம், சக்தியை தன்னுள் ஈர்க்கக்கூடிய ஆற்றல் உடையது. உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும்,  உரிய காரணங்களுக்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையின் மீது சாற்றப்பட்டு அல்லது அவளின் திவ்ய அருள் பார்வை பெற்ற பழத்தை வீட்டில் மரியாதையான இடத்தில் வைக்கலாம். பூஜை அறை அல்லது பொக்கிஷங்கள் வைக்கும் இடத்திலோ அல்லது பொதுவான இடத்திலோ வைப்பதால், அந்த இடத்தில் உள்ள ஆற்றல் அதிகரிப்பது மட்டுமல் லாமல் தீய சக்திகளின் தாக்கமும் குறைந்து விடுவதாக ஐதீகம்.

உடல் நலம் வேண்டும் அன்பர்கள், பழத்தைப் பிழிந்து சாறாக உட்கொள்வதும் வழக்கத்தில் உண்டு. எந்த ஆலயமானாலும் அங்கு அளிக்கக் கூடிய பிரசாதத்தைப் பத்திரமாக உபயோகப் படுத்துவது உயர்ந்த நன்மையை அளிக்கும். புஷ்பங்களானாலும் பழங்களானாலும் அவை காய்ந்த பிறகு பத்திரமாக நீர் நிலைகளிலோ, மரங் களுக்கு அடியிலோ விடலாம். எக்காரணத்தைக் கொண்டும் குப்பைத்தொட்டிகளில் போடுவது கூடாது.

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

? ஹோமம், யாகம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

-கே.ராமகிருஷ்ணன், சென்னை 44


`தேவதா உத்தேசேன த்ரவ்ய த்யாக: யாக:' என்று யாகங்களின் இலக்கணம், செய்யும் முறை, செய்வதால் ஏற்படும் நற்பலன்கள் ஆகியவற்றை,  பல நூற்றாண்டுகளுக்குமுன் ஜைமினீ முனிவர், ‘த்வாதச லக்ஷணீ’ எனும் நூலில் மிகவும் விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த சாஸ்திரம் `மீமாம்ஸா சாஸ்த்ரம்' என்று போற்றப்படுகிறது.

‘ஒரு தேவதையை நினைத்து, அந்தத் தேவதை யின் பொருட்டு ஒரு பொருளை அர்ப்பணிப்பதே யாகம்' என்று `மீமாம்ஸா பரிபாஷா' நூலின் ஆசிரியர், யாகத்தைப் பற்றி விவரிக்கிறார். எந்தப் பொருள்களையும் அவை நம்முடையது என்று எண்ணாமல், கடவுளால் அனைவருக்கும் நன்மை செய்வதற்காக நமக்கு அளிக்கப்பட்டவை என்று கருதவேண்டும்.

அப்படியான எண்ணத்துடன், அவற்றைத் தூய்மையின் வடிவான அக்னியின் மூலமாக, ‘இவற்றை நான் தங்களுக்கு அளிப்பதன் மூலம் அனைவரும் நற்கதியை அடையவேண்டும்’ என்றும், ‘இதனால் தாங்கள் திருப்தி அடைய வேண்டும்’ என்றும், ‘அளிக்கப்படும் பொருளும் என்னுடையது அல்ல’ என்றும் கூறி அளிக்கப் படுவதே யாகம். மிக உயர்ந்த நன்மையின் பொருட்டு திரவியங்களைத் தியாகமாக அர்ப்பணிப்பதே யாகம். இதுவே, நம் நன்மைக்காக சிறிய அளவில் செயல்படுத்தப்படும்போது,  `ஹோமம்' என்று அறியப்படுகிறது.

இன்றும் மகான்கள் பலரும், எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும், கிராமங்களில் ஸோம யாகம் போன்ற பல உயர்ந்த வேள்விகளைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

? களத்திர தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்தால், தோஷம் நிவர்த்தியாகும்?

- மங்கை சிவராமகிருஷ்ணன், திருச்சி

குடும்ப வாழ்க்கை அமைவதைப் பொறுத்தே ஒரு மனிதனின் வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளலாம். வெளி உலகில் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால், வெற்றியால் எந்தப் பயனும் இல்லை.

கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

செவ்வாய்க்கிழமைகளில் துர்கை வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக் கிழமைகளிலும் அம்பிகையை வழிபடுவதால், தீய விளைவுகள் குறைந்து நன்மை பெருகும். அவரவர் ஜாதகத்தைப் பார்த்து தோஷ பரிகாரங்களைக் கணிப்பதே  சிறப்பு. மேலே கூறியிருப்பது பொதுவானதே.ஜோதிட சாஸ்திரம் மிகப்பெரிய கடல். பல விதமான குறிப்புகளைத் தன்னுள் அடக்கியது. நம்மைப் படைத்த கடவுளைத் தவிர, வேறு எவராலும் முழுமையாக அறியமுடியாதது.

நமது சநாதன தர்மத்தில், பல ஆயிரம் நூல்கள் ஜோதிடங்களின் பலாபலன்களைச் சொல்வ துடன், யும் உரிய பரிகாரங்களையும் அவரவர் செய்யத்தக்க வகையில் அளித்துள்ளன. எனவே,  தோஷ நிவர்த்தி வேண்டுவோர், தங்களின் குடும்ப ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி பரிகாரங்களைச் செய்வதே சரியானதாக இருக்கும். அத்துடன், குலதெய்வ வழிபாட்டையும், சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றையும் தவறாமல் செய்யவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவற்றில் இருந்து விலகுதல் என்பது கூடாது.

- பதில்கள் தொடரும்...

- காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002