மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 13

மகா பெரியவா - 13
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 13

மகா பெரியவா - 13

ன்று காஞ்சி மடத்தில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்துக்கும் அதிகமா கவே இருந்தது. சுவாமிகளை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். கருமேகங்கள் கூடியிருந்தன. ‘ஹரஹர சங்கர...’ கோஷம் விண்ணை முட்டியபடி இருந்தது.

பக்தர்களுக்கு தரிசனமும், பிரசாதமும் வழங்கிக்கொண்டிருந்த மகா பெரியவரின் பார்வையில், 20 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் தென்பட் டான். சுவாமிகளுக்கு அடுத்த கணமே புரிந்துவிட்டது. அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார்.

“பெரியவா...”

“இங்க வரிசையில பதினைஞ்சாவது ஆசாமியா, குள்ளமா, கொஞ்சம் கறுப்பா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்... நீ கவனிச்சியா?”

“ஆமா பெரியவா..”

மகா பெரியவா - 13

“நீ என்ன பண்றே... உடனே பக்கத்துல ஜவுளிக் கடைக்குப் போய், அந்தப் பையன் சைஸுக்கு சரியா இருக்கற மாதிரி ரெடிமேட் சட்டை, பேன்ட் வாங்கிண்டு வா. நல்ல ஒஸ்தி துணியா இருக்கட்டும்” என்று பணித்தார் சுவாமிகள். 

மடத்து அலுவலகத்தில் பணம் வாங்கிச் சென்று, பெரியவா சொன்னபடி டிரஸ் வாங்கி வரப்பட்டது.

“ஒரு மூங்கில் தட்டுல நெறைய பழங்கள், மட்டைத் தேங்காய் வைத்து இந்தத் துணிகளையும் வை. நான் சொன்னேன்னு மடத்து மானேஜரிடம் சொல்லி ஆறாயிரத்து இருநூத்தம்பது ரூபாயை ஒரு கவர்ல போட்டு எடுத்துண்டு வா. அதையும் தட்டுல துணிமணிகளுக்கு மேலே வச்சுடு...”
மகா பெரியவா உத்தரவின்படி அனைத்தும் நடந்தன.

பெரியவா குறிப்பிட்ட அந்த இளைஞன் வரிசையில் மெள்ள நகர்ந்து சுவாமிகளுக்கு முன் வந்து நின்றான். அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரின் பாதார விந்தங்களை வணங்கினான்.

கண் ஜாடையாலேயே தன் உதவியாளரை அழைத்தார் பெரியவா. “இந்தப் பையனுக்கும் இவன் குடும்பத்துக்கும் நான் பரிபூரணமா ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்த மூங்கில் தட்டை இவன் கைல கொடு” என்று பணித்தார். பணமும், பழங்களும், புதுத்துணிகளும் அடங்கிய தட்டு அது.
இளைஞனுக்கு எதுவும் புரியவில்லை. கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. குழப்பத்துட னேயே தட்டை வாங்கிக்கொண்டு, தயாள பரமேஸ்வரனை மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்து விட்டு நகர்ந்தான் அவன்.

தரிசன நேரம் முடிந்தது. தன் அறைக்குத் திரும்பிய பெரியவா, அந்தத் தொண்டருக்கு அழைப்பு விடுத்தார். இளைஞனுக்குப் பணமும், துணிமணிகளும் அளித்ததற்கான காரணத்தை சன்னமானக் குரலில் விளக்கினார்.

மகா பெரியவா - 13


“ரொம்ப வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது. அப்போ மடத்துக்குக் கொஞ்சம் சிரம திசை. வடதேச யாத்திரை கிளம்பலாம்னு முடிவுப் பண்ணிப் புறப்பட்டேன். மடத்துக்கு எதுத்தாப்பலே சின்ன மளிகைக் கடை வச்சுருந்தார் செட்டியார் ஒருவர். அங்கதான் மடத்துக்கு வேண்டிய மளிகை சாமான்கள் வாங்கறது வழக்கம்...’’

தொடர்ந்து விவரித்தார் மகாபெரியவா. அந்தச் சம்பவம் இதுதான்...

மகாபெரியவா யாத்திரைப் புறப்படுவதைக் கவனித்த மளிகைக்கடை செட்டியார், தயங்கிய படியே அருகில் வந்தார்.

“பெரியவா என்னை மன்னிக்கணும்...”

“சொல்லுங்க செட்டியார்...”

“பெரியவா யாத்திரை முடிஞ்சு திரும்பி வர ஆறு மாசம் ஆவும்னு சொல்றாங்க. இப்பவே நாலஞ்சு மாசம் மடத்து மளிகை பாக்கி நிலுவைல இருக்கு. நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க சாமி” என்று சொல்லி சுவாமி களை வணங்கினார் செட்டியார்.

“ஓ! அத்தனை பாக்கி இருக்கா? கவலைப்படாதீங்க செட்டியார். யாத்திரை போயிட்டு வந்தவுடனே உங்க பாக்கியைப் பைசல் பண்ணச் சொல்றேன்...”

யாத்திரை முடித்து திரும்பி வந்தபோது செட்டியார் கடைப் பூட்டியிருந்ததைக் கவனித்தார் பெரியவா. விசாரித்தார். செட்டியார் காலமாகி விட்ட விவரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொண்டரிடம் பகிர்ந்துகொண்ட மகாபெரியவா தொடர்ந்து கூறினார்.

“செட்டியாரோட குடும்பம் எங்கே இருக்குன்னு அப்போ கண்டுப் பிடிக்க முடியலே. செட்டியாருக்கு மடத்துலேர்ந்து எவ்வளவு பாக்கின்னு கேட்டுத் தெரிஞ்சுண்டேன்... எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கா ரூவான்னு சொன்னா. அந்தப் பாக்கியை இன்னிக்குத்தான் அசலும் வட்டியுமா செட்டியாரோட பேரன்கிட்ட தீர்த்து வச்சேன். அவன்தான் இன்னிக்கு தரிசனத்துக்கு வந்த இளைஞன். இனிமே கடன் பாக்கி மனசை இம்சிக்காது...”

தொண்டர் மறுபடியும் வாசலுக்கு ஓடி வந்தார். நல்லவேளை, அந்த இளைஞன் அங்கு யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, செட்டியாரைப் பற்றி விசாரித்தார்.

“எங்க தாத்தா திடீர்னு ஏற்பட்ட மாரடைப்பால காலமாயிட்டாரு. நிறைய கடன் ஏற்பட்டு சமாளிக்க முடியாம கடையை மூடிட்டு கிருஷ்ணகிரிக்கு வந்துட்டாங்களாம். இப்ப எங்க அப்பா அங்கதான் மளிகைக் கடை நடத்துறார். நான் தெரிஞ்சவங்க சிலரோட டூர் வந்தேன். பெரியவங்களைத் தரிசனம் பண்ணலாம்னு உள்ளே வந்தேன்...”

மகா பெரியவா - 13மகா பெரியவரின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தபடியே சுவாமிகளிடம் வந்தார் தொண்டர்.

“என்னடா... நான் சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லையான்னு உனக்கு சந்தேகம். அதைத் தெளிவுப்படுத்திக்க வாசலுக்கு ஓடிப்போய் செட்டியாரோட பேரன்கிட்டேயே கேட்டு ஊர்ஜிதப்படுத்திண்டியாக்கும்...” என்றுகேட்டு சிரித்தார் சுவாமிகள்!

கா பெரியவரின் மகிமையைப் பற்றி பலரும் நூல்கள் பல எழுதியிருக்கிறார்கள். பேருரைகள் நிகழ்த்தி வருகிறார்கள் சிலர். அவற்றையெல்லாம் படிக்கும்போதும் கேட்கும்போதும் வியத்தகு தகவல்கள் பல நமக்குக் கிடைக்கின்றன.

சாமண்ணா ஷான்பாக். இவர், கர்நாடக மாநிலத்தில் உடுப்பிக்கு அருகிலுள்ள அலவூர் என்கிற சிற்றூரில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பிழைப்பைத் தேடி மும்பை வந்து சேர்ந்தவர். அங்கே ஓட்டல் ஒன்றில் அவருக்கு சர்வர் வேலை கிடைத்தது. அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது.

கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. நண்பர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு கோலாப்பூருக்கும் சதாராவுக்கும் இடையேயுள்ள `கரோட்' என்ற ஊரில் வடைகள் தயாரித்து வியாபாரம் செய்யத் தொடங்கினார் சாமண்ணா. ஏராளமான வடைப் பிரியர்கள் கடையை முற்றுகையிடத் தொடங் கினார்கள். வியாபாரம் பெருகியது.

வடை மட்டும் ஏன், இதர டிபன் வகைகளும் தயாரித்தால் என்ன என்று யோசித்தார். நட்பும், உறவும் உற்சாகப்படுத்தின. அவர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டு சிறுசிறு உணவகங்கள் நடத்தத் திட்டமிட்டார். கூட்டம் அதிகமாக வரும் பஸ் நிலையங்களில் அவற்றைத் திறந்தார். தொழில் பெருகியது; பணம் குவிந்தது. பெரிய செல்வந்தரானார் சாமண்ணா!

நாளாவட்டத்தில் சதாராவில் உள்ள ரஜதாத்திரி ஓட்டலின் முதலாளியானார் இவர். நாஸிக்கிலும் ஓர் ஓட்டலைத் திறந்தார். உள்ளத்தில் உறுதியிருந்த துடன் நெஞ்சில் ஈரமும் கசிந்தது. சமுதாயத்தில் வசதியற்றவர்களுக்கு உதவும் தன்மை இவரிடம் அதிகரித்தது.

பிறந்த ஊரில் பள்ளிக்கூடம், எளியவர்களுக்கும் பயன்படும் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவினார். திருவனந்தபுரத்தில் குறைந்த வாடகையில் திருமண மண்டபம் கட்டினார். இப்படி எத்தனையோ தான தர்மங்கள் செய்தவர் சாமண்ணா.

1983-ல் சாமண்ணா மறைந்தபோது, சதாரா நகரமே துயரக் கடலில் மூழ்கியதாம். இவருடைய இறுதி யாத்திரையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக் கிறார்கள்.

இந்தப் புண்ணியவான் சதாராவில் ஸ்ரீநடராஜர் கோயிலைக் கட்டுவதற்கு, காஞ்சி முனிவர் பரிபூரண ஆசி வழங்கியதில் வியப்பேதுமில்லை.சதாராவில் சங்கர மடத்துக்கு எழுந்தருளிய மகா பெரியவர் பற்றி நண்பர் ஒருவர் தெரிவித்த போது, சாமண்ணா முதலில் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அதற்குமுன் ஓரிரு சந்நியாசிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் காரணம்.

“ஏற்கெனவே சில சாமியார்களை நம்பி நான் மோசம் போனது போதும். இனிமேல் சாமியார் சம்பந்தமே வேண்டாம்’’ என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்.  நண்பர் ஒருவர் அவருக்கு நம்பிக்கை அளித்து வற்புறுத்தி ஒரு நாள் காஞ்சிப் பெரியவரிடம் அழைத்துச் சென்றார்.

அப்போது மௌன விரதம்  மேற் கொண்டிருந் தார் மகா பெரியவா. ஜன்னலுக்குப் பின்னால் சாந்தமே உருவமாக அமர்ந்திருந்த மகா பெரிய வரைப் பார்த்ததுமே சாமண்ணாவின் உள்ளத்தில் ஆனந்தம் பெருகிற்று.

- வளரும்...