Published:Updated:

பதவி உயர்வு எப்போது?

பதவி உயர்வு எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
News
பதவி உயர்வு எப்போது?

ராம்திலக்

‘பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வாசகம், நமது பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியத்தைக் குறிக்கிறது. பூர்வ ஜென்மத்தில் அதிக புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.

பலம் மிகுந்த 10-ஆம் வீட்டோனது தசை- புக்தி காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும். உதாரணமாக கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு தொழில் ஸ்தானமான மேஷத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்க, அவரது தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

10-ஆம் வீட்டுக்கு நேர் 7-ஆம் வீடான 4-ஆம் இடத்தில், 4-ஆம் வீட்டோன் அமர்ந்திருக்க, அவருடன் சுபக் கிரகங்கள் கூடியிருந்தால்... 4-ஆம் வீட்டோனின் தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

4-ஆம் வீடு நாம் அமரும் நாற்காலியைக் குறிக்கும். அந்தப் பதவி அல்லது வேலை மிகச் சிறப்பாக அமைய,  4-ஆம் இடம் வலுத்திருக்க வேண்டும். 4-ஆம் வீட்டோனும், 10-ஆம் வீட்டோனும் இணைந்து 4-ல் அமர்ந்து, 10-ஆம் இடத்தைப் பார்க்கும் நிலை அமையப் பெற்ற ஜாதகருக்கு உயர்பதவி கிடைப்பதுடன், பதவிச் சிறப்பும் உண்டாகும்.

பதவி உயர்வு எப்போது?

குறிப்பாக, தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்புடைய சுப ஆதிபத்தியமுள்ள கிரகங்களின் தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

பதவியைப் பெறுவதற்கு உரிய வழிபாடுகள்...

மேஷ, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சனி பகவான், சாஸ்தா மற்றும் ஆஞ்சநேயருக்கு ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது. மிதுன, மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

கடக, கும்ப லக்னக்காரர்கள் முருகப்பெருமானையும் செவ்வாயையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும். சிம்ம லக்னக்காரர்கள் மகாலட்சுமியையும் சுக்கிரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப்பெறலாம். கன்னியா, தனுசு லக்னக்காரர்கள் புதனையும் திருமாலையும் வழிபட வேண்டும். துலாம், மகர லக்னக்காரர்கள் சந்திரனையும் பராசக்தியையும், விருச்சிக லக்னக்காரர்கள் சூரியனையும் ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும்.

முயன்றால் முடியாதது இல்லை. பக்தி, ஞானம், தவம், வேள்வி, இறை அருள் ஆகியவற்றின் மூலம் எதையும் சுலபமாகப் பெறலாம்.  நினைத்ததை சாதிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz