ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...
பிரீமியம் ஸ்டோரி
News
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

திருக்கோயில், இளங்கோயில் என்று இரண்டு கோயில்கள் ஒரே தலத்தில் அமைந்த தலம் திருமீயச்சூர். திருவாரூர்  மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். இந்தக் கோயிலின் நிர்வாகம் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அருணன், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம். மட்டுமின்றி, தட்சிண கங்கை காவிரியும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூஜித்து பேறு பெற்ற தலம் இது. மேலும் கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், யமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்த தலம் என்று சொல்லப்படுகிறது.

சூரியன் சாபவிமோசனம் வேண்டி இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை கஜவாகனாரூட ராக வழிபட்டு புத்திரப் பேறு பெற்ற தலம்.

திருக்கோயிலில் இறைவன் மேகநாத சுவாமி என்ற திருப் பெயரிலும், இளங்கோயிலில்  இறைவன் சகலபுவனேஸ்வரர் என்ற திருப்பெயரிலும் காட்சி தருகின்றனர். மேகநாத சுவாமியை திருஞானசம்பந்தரும், இளங்கோயில் இறைவனை அப்பர் பெருமானும் பாடியுள்ளனர். திருக்கோயில் இறைவி அருள்மிகு லலிதாம்பிகை; இளங்கோயில் இறைவி அருள்மிகு மேகலாம்பிகை.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

திருமீயச்சூர் திருக்கோயிலில் அருளும் லலிதாம்பிகை, தெற்கு நோக்கிய சந்நிதியில், வலக் காலை மடித்து, இடக் காலை தொங்க விட்ட கோலத்தில் அரியாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் அருள்கிறாள். வேறு எந்தத் தலத்திலும் காணமுடியாத அற்புதக் காட்சி இது. சாந்த ஸ்வரூபிணியாக அருளும் இந்த அம்பிகைக்கு சௌந்தர்யநாயகி என்ற திருப்பெயரும் உண்டு.

ம்பிகையிடம் லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்ற ஹயக்ரீவர், அதை அகத்திய முனிவருக்கு உபதேசித்தார். உபதேசம் பெற்ற அகத்தியர், ‘எந்தத் தலத்தில் லலிதா சஹஸ்ரநாமம் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?’ என்று ஹயக்ரீவரிடம் கேட்டார். அவர் கூறியபடி மனைவி லோபாமுத்திரையுடன் திருமீயச்சூர் தலத்துக்கு வந்த அகத்தியர், லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைத் துதித்தார். அவருக்கு லலிதாம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அருளினாள். அம்பிகையின் நவரத்தின தரிசனம் கண்டு மகிழ்ந்த அகத்தியர், ‘‘லலிதா நவரத்தின மாலை’ பாடலை இயற்றினார்.

ன்னை லலிதாம்பிகை பக்தை ஒருவரின் கனவில் தோன்றி, தனக்கு கொலுசு அணி விக்கும்படி கூறினார். அதேபோல் அந்த பக்தையும் அம்பிகைக்கு கொலுசு காணிக்கை அளித்தார். இன்றும் கோயிலுக்கு வரும் பக்தர் கள் பலர் கொலுசு காணிக்கை  தருகின்றனர்.

திருமீயச்சூரில் உள்ள துர்கை கிளியுடன்  காட்சி அருள்கிறாள். எட்டு திருக்கரங்களுடன் திகழும் இவளை, ‘சுகபிரம்ம துர்கா தேவி’ என்று அழைக்கின்றனர். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்கை மூலமாக லலிதாம்பிகை தேவியிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

திருமீயச்சூர் கோயிலில் ஏராளமான கிளிகள் இருப்பதும், அவற்றின் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். நாம் அம்பாளிடம் வேண்டிக்கொள்ளும்போது, கிளிகள் கோபுரத்தின் மீது அமர்ந்து, பிறகு அம்பாள் சந்நிதி கொடிமரத்தில் அமர்ந்து சென்றால், நம் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ண்டுதோறும் சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் 21-வது நாள் முதல் 27- வது நாள் முடிய, காலை 6 முதல் 7.30 வரை, சூரியன் தன் கிரணங்களால் சிவலிங்கத் திருமேனியைத் தழுவி வழிபடுவது காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.

ங்குள்ள இறைவனுக்கு, பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம், செல்வ வளம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமி, மாசி மாதம் மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.

தொகுப்பு:  தி.குணநிலா

படங்கள்: ர.கண்ணன்