`நாம் மகிழ்ச்சியாக இருந்தால், இந்த உலகம் அழகாகத் தெரிகிறது. நாம் கவலையாக இருந்தால், இந்த உலகம் அவலட்சணமாகத் தெரிகிறது. நாம் விரும்புவது நமக்குக் கிடைத்துவிட்டால், கொண்டாடுகிறோம். அது கிடைக்காவிட்டால், வாழ்க்கையே முடிந்துபோனது என்று மனமுடைந்துபோகிறோம். ஆனால், இந்த உலகில் எதுவும் நிச்சயமல்ல; நிரந்தரமல்ல என்று புரியும்போது, உண்மையில் நாம் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்போம். பிறகு ஏன் இந்த மனித வாழ்க்கையில் இத்தனை ஆட்டம்?!

``சரி... இதிலிருந்து எல்லாம் விட்டு விடுதலையாகி எங்காவது போய்விடலாமா என்று தோன்றுகிறதா? கவலையே வேண்டாம். இருக்கவே இருக்கிறது தம்மசேது!'' என்றார் நண்பர். ``அப்படியா? பெயரே புதியதாக இருக்கிறதே'' என்ற நம்மிடம், ``சென்னையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, `விபஸ்ஸனா’ எனும் புத்தர் போதித்த வாழ்க்கை நெறிமுறைகளை, வெறும் சித்தாந்தமாக இல்லாமல் வாழ்வியல் முறையாகவே 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. போய்ப் பாருங்கள்!'' என்றார். கிளம்பிவிட்டோம்.

பரந்து விரிந்துகிடக்கும் சென்னை மாநகரின் இடுப்புக்குழந்தையைப் போல், பல்லாவரத்திலிருந்து பழந்தண்டலம் செல்லும் வழியில், திருமுடிவாக்கத்தில் அமைந்திருக்கிறது, 'விபஸ்ஸனா' எனும் வாழ்வு நெறிமுறையை அனைவருக்கும் கற்றுத்தரும் இந்த போதி மரம். ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஓசைகளற்று வனாந்தரமாக இருக்கிறது. இங்கு, நாம் அன்றாடம் சந்திக்கும் வெளியுலகத் தொல்லைகளுக்கு இடமேயில்லை. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், தொடர்ந்து தியானம் மட்டுமே செய்ய வேண்டும்.

ஒரு புதிய நபராக நீங்கள் இந்த தியானப் பயிற்சியைத் தொடங்க விரும்பினால், இவர்கள் நடத்தும் வலைதளத்துக்குச் சென்று பதிவு செய்யவேண்டும். இந்தப் பயிற்சி முகாமில் இருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்துத் தெளிவாகக் கூறியிருப்பார்கள். உங்களின் பயிற்சி தொடங்கியவுடன், பயிற்சி பெறுபவர்களிடமோ மற்றவர்களிடமோ நீங்கள் பேசக்கூடாது; உடல் சைகையோ கண்ஜாடையோ காட்டக்கூடாது. இங்கு மாதந்தோறும் இரண்டு பத்து நாள் முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுழற்சி முறையில் குருவாக இருந்து விபஸ்ஸனாவை நமக்கு போதிக்கிறார்கள். நாங்கள் சென்றிருந்தபோது, விபஸ்ஸனா கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த நீலகண்டனைச் சந்தித்துப் பேசினோம்.

``விபஸ்ஸனா, உண்மையான மனஅமைதியை அடைவதற்கும் மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறை. தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனத்தைத் தூய்மையடையச் செய்யக்கூடிய படிப்படியான செயல்முறை.

`விபஸ்ஸனா' என்ற சொல்லுக்கு `உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் கண்டறிந்த இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, உலகத்தின் அனைத்துப் பிணிகளையும் போக்கும் மருந்தெனவும் இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ பிரிவையோ சார்ந்திருக்காதது இதன் தனித்தன்மைகளில் ஒன்று. நம்முடைய மனம் மேல்மனம், உள்மனம், ஆழ்மனம் என மூன்று நிலைகளில் செயல்படுகின்றது. இதில், நம் ஆழ்மனத்தின் உள்ளே இருக்கும் மாசுகளை அறவே நீக்கி, இயல்பான ஆனந்த நிலையை அடையச் செய்வதே இதன் நோக்கம். மனிதர்களின் மனத்தில் எழும் பல்வேறு விதமான எண்ண அலைகளை சமநிலைப்படுத்தி, எந்த ஒரு சூழலையும் தன்னிலை மாறாமல் மறக்காமல் மனத்தை அமைதியுடன் வைக்க உதவுகிறது'' என்று விளக்கினார்.

பயிற்சி முறை

தொடர்ந்து இந்தப் பயிற்சி முறைகள் குறித்துப் பேசியவர், “பத்து நாள் பயிற்சி முகாம் வாயிலாக இந்த தியான முறை கற்றுத் தரப்படுகிறது. பயிற்சி பெறுபவர்கள் இங்கேயே தங்க வேண்டும்; மௌனம் காக்க வேண்டும். மேலும், பயிற்சி நாள்களில் எந்த உயிரையும் கொல்லவோ, எந்தப் பொருளையும் திருடவோ, பாலியல் உறவில் ஈடுபடுவதோ, எதைப் பற்றியும் தவறாகப் பேசவோ, போதை ஊட்டும் பொருள்களை உட்கொள்வதோ கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிப்படுத்தப் பெரிதும் உதவும். இல்லாவிட்டால், தெளிவாகத் தன்னைத்தான் கவனிக்க இயலாமல் மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். பயிற்சி பெறுவோருக்கு ஆர்வமும் பொறுமையும் மிகவும் முக்கியம். அப்படி இருந்தால்தான் முழுமையான ஈடுபாட்டுடன் பயிற்சியை நிறைவு செய்யமுடியும்

முதல் மூன்று நாள்கள் `ஆனா பானா சத்தி' என்னும் பயிற்சி அளிக்கப்படும். ஒருவர் தன் மூச்சுக்காற்றை அதன் போக்கை, தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தப் பயிற்சி நம் மனத்தின் மீதுள்ள கட்டுப்பாட்டை நாம் ஓரளவு வளர்த்துக் கொள்ள உதவும்.

இரண்டாம் நிலை

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதிபெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்து, அதற்கு எந்தவித எதிர்வினைகளையும் ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே ‘விபஸ்ஸனா’ பயிற்சி! தொடர்ந்து வரும் நாள்களில், இந்தப் பயிற்சியையே நாம் செய்யவேண்டும்.

கடைசி நாள், பத்து நாள்களில் பெருகிய நேர்மறை எண்ணங்களையும் மனத்தூய்மையையும் அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் `பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம் நிறைவடையும்.

பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்கநெறிகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகப் பயிற்சி செய்தால், பத்து நாள்களுக்குள்ளேயே நல்ல பலன்களைப் பெற முடியும் .

விபஸ்ஸனா பயிற்சிபெற எந்த விதமான கட்டணமும் கிடையாது . உணவும் இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.பயிற்சி முகாமில் கலந்துகொள்பவர்கள், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ தங்களால் இயன்ற அல்லது விரும்பும் நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனைத் தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே, மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கின்றனர். தாம் பெற்ற பயனைப் பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கிறார்கள். இவ்வாறு வரும் நன்கொடைகள்தான் உலகம் முழுவதும் இந்தப் பாரம்பர்யத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். மேலும் , இதன் ஆசிரியரோ, நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை . இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றிப் பிரபஞ்சத்தின் சக்தியை உலகெங்கும் பரப்பி வருகிறது.

தெளிவுபெற்ற மனம், தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை விழிப்பு உணர்வுடன் கவனித்து, அதன்மூலம் இந்த உலகில் இருக்கும் எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகி இருக்கச் செய்கிறது. ஒரு விஷயமோ பொருளோ மனிதரோ அல்லது நிலைப்பாடோ, எதுவாக இருந்தாலும், அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன சமநிலையை உருவாக்குகிறது.

இந்த தியான முறை நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சூழ்நிலையைச் சந்திக்க நேரும்போது, சமநிலை இழக்கும் மனத்தின் பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை அவிழ்க்கப் பெரிதும் உதவுகிறது. இந்த தியானப் பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன. யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம்.

இந்தப் பயிற்சி நிலையங்கள், தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மூன்று இடங்களில் அமைந்திருக்கின்றன.

இது கண்மூடித்தனமான சடங்கோ, வழக்கோ அல்ல. அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல . ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்துப் பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து தப்பித்து ஓடுவதற்கான ஒரு வழியும் அல்ல . மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை. இது சமுதாயத்துக்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை. இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனத்தைத் தூய்மைப் படுத்தும் முறை'' என்று விளக்கினார் ஆசிரியர் நீலகண்டன்.

எஸ்.கதிரேசன், எம்.ஆர்.ஷோபனா - படங்கள்: வீ.நாகமணி

பர்மாவிலிருந்து இந்தியா வந்த விபஸ்ஸனா!

இந்தப் பயிற்சிமுறையை உலகம் முழுவதும் பரப்பிய எஸ்.என்.கோயங்கா என்பவர், உடலில் தீராத வலி, இரவில் தூக்கமும் வராமல் நீண்டநாள் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, `உடலில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை' என்று கூறிவிட்டனர். அப்போது அவரின் நண்பர் ஒருவர் பர்மாவிலிருக்கும் விபஸ்ஸனா பயிற்சி முகாம் பற்றிக் கூறி இருக்கிறார். அதன்பிறகு கோயங்கா பர்மா சென்று சயாக்யி
ஊ பாகின் என்பவரிடம் இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொண்டார். அந்தப் பயிற்சி அவருக்கு விழிப்பு உணர்வையும் மனநிறைவையும் தந்தது. தன் ஆசிரியரிடம் 14 ஆண்டுக்காலம் பயின்ற பின், 1969-ம் ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி, விபஸ்ஸனா பயிற்சி முகாமை உருவாக்கினார்.

நம்மை நாமே அறியும் வாய்ப்பு!

கி. ஹரி ப்ரதா, வெளிநாட்டு வாழ் இந்தியர், அமெரிக்கா.

``விபஸ்ஸனாதான் நான் சென்ற முதல் தியானப் பயிற்சி முகாம். தியானம் மன அமைதியைத் தரும் என்பதைத் தாண்டி, வேறு எதுவும் தெரியாமல்தான் போனேன். ஆரம்பத்தில், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால், நான்காம் நாள் விபஸ்ஸனா சொல்லித் தந்தார்கள். அதற்கு அடுத்தடுத்த நாள்கள், நான் என்னையே உணரத் தொடங்கினேன். நம்மிடம் என்ன நிறை குறைகள் இருக்கின்றன என்பதை அறிவது கடினம். ஆனால், விபஸ்ஸனா அப்படி ஓர் உள்நோக்குப் பார்வையை நிச்சயம் கொடுக்கும். இந்தப் பயிற்சிக்கு வருவதற்கு முன்பு, ஸ்ட்ரெஸ் காரணமாக மனதும் உடலும் கனமாக இருக்கும். ஆனால், இப்போது எந்த ஒரு நெருக்கடியான சூழலையும் எளிமையாக அணுக முடிகிறது. வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது இந்தப் பயிற்சியை முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால், நிச்சயம் இந்த உலகத்தில் அன்பும் அமைதியும் நிரம்பி வழியும்!''

“சார்பற்ற தியானம்!”

- கிருத்திகா ராஜேந்திரன், ஐடி ஊழியர், சென்னை.

``இந்தப் பயிற்சிக்கு 2017-ல் நானும் என் அம்மாவும் சென்றிருந்தோம். தியானம் போன்ற பயிற்சி முகாம்கள், ரிலாக்ஸ்டாக அல்லது ஹாலிடே ட்ரிப்புக்குச் செல்வது போன்றுதான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், இந்தப் பயிற்சியில் உண்மையாகவே கடின உழைப்பு தேவைப்பட்டது. நான் வேறுவித தியானப் பயிற்சிகளுக்குக்கூட இதற்கு முன்பு சென்றிருக்கிறேன். அவை ஏதோ ஒரு மதத்தையோ, கடவுளையோ சார்ந்து இருக்கும். ஆனால், மனிதத்தையும் அன்பையும் மட்டுமே போதிக்கிறது விபஸ்ஸனா. நான் அதுவரை உணராத மன சமநிலையைப் பயிற்சியில் உணர்ந்தேன்.”

எப்படிச் சேரலாம் ?

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பத்து வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் உண்டு. பயிற்சியின்போது செல்போன் உபயோகிக்க அனுமதி இல்லை. தங்குவதற்கு ஆண் - பெண் இருபாலருக்கும் தனித்தனிக் கட்டடம். பெண்களுக்கு எனத் தனியாக எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மாதவிடாய் காலத்திலும் இந்தப் பயிற்சியில் சேரலாம். கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் நெருங்கும் காலத்தைத் தவிர்த்து, அவரவர் உடல்நிலைக்கு ஏதுவான காலத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சியில் இருப்பவர்கள் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தாலன்றி, வெளி உலகத் தொடர்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பயிற்சிக்காலம் முழுவதும் பின்பற்ற வேண்டிய கால அட்டவணை தரப்படும். உணவு விஷயத்திலும் சில வழிமுறைகள் உண்டு. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

தொடர்புக்கு: தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம் , 533, பழந்தண்டலம் சாலை , (திருநீர்மலை வழி), திருமுடிவாக்கம், சென்னை - 600044.

தொலைபேசி: 044-65499965, கைப்பேசி: 9444021622, 9444280952.

மின்னஞ்சல்: info@setu.dhamma.org, setu.dhamma@gmail.com