தாமிரபரணியில் ஏன் நீராட வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்று விரிவாக விளக்கி எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்!
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்
பெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு ஆலயங்கள் பற்றிய தகவல்களைப் படித்ததும் அந்த ஊர்களைத் தரிசிக்க ஆயத்தமாகிவிட்டோம். நன்றி!
- இல. வள்ளிமயில், மதுரை

ஓவியர் பத்மவாசனின் படைப்பில் வெளியான `தாமிரபரணிதேவி' அட்டைப்படம், அருள் பொக்கிஷம்.
- எம்.அருணா, நெல்லை-2
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் அருளாசி குறித்து வெளியான வாசகர் இறையனுபவம் நெகிழவைத்தது!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
`எல்லாம் அவன் அருளாலே நடைபெறுகின்றன' என்பதை அழகாகச் சொன்னது படக்கதை.
- கவிதா சரவணன், திருவரங்கம்
