Published:Updated:

‘திருப்புகழைப் பாடப் பாட...’

‘திருப்புகழைப் பாடப் பாட...’
பிரீமியம் ஸ்டோரி
‘திருப்புகழைப் பாடப் பாட...’

‘திருப்புகழைப் பாடப் பாட...’

‘திருப்புகழைப் பாடப் பாட...’

‘திருப்புகழைப் பாடப் பாட...’

Published:Updated:
‘திருப்புகழைப் பாடப் பாட...’
பிரீமியம் ஸ்டோரி
‘திருப்புகழைப் பாடப் பாட...’

ந்த வீட்டுக்குள் நுழையும்போதே ‘சீதள வாரிஜ பாதா நமோநம; நாரதகீத விநோதா நமோநம; சேவல மாமயில் ப்ரீதா நமோநம’ என்று செவிக்கு விருந்தாய் வழிந்து நம்மை வரவேற்றது, திருப்புகழ் இசைப்பாடல். மெய்ம்மறந்த நிலையில் தன்னுள் கரைந்தபடி பாடிக்கொண்டிருந்தார் கர்நாடக இசைப் பாடகி பவ்யா ஹரி. 

‘திருப்புகழைப் பாடப் பாட...’

சில நிமிடங்கள், சங்கீத வெள்ளமெனப் பிரவாகித்த சந்தத் திருப் புகழில் நாமும் லயித்திருக்க, பாடிமுடித்து நம்மைக் கண்டவர் ஆர்வத்தோடு வரவேற்றார். பிரபலமான இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பவ்யா ஹரி. இவரின் தாயார் சுந்தரவல்லி கிருஷ்ணனும் பிரபலமானப் பாடகி.

மட்டுமின்றி, திருப்புகழ் திருத்தல ஆய்வாளரும் ஆன்மிக எழுத்தாளருமான இவரின் தந்தை வலையப் பேட்டை ரா.கிருஷ்ணன், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகளின் மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘திருப்புகழைப் பாடப் பாட...’எல்லா தெய்வங்களைக் குறித்த பாடல்களையும் பாடியிருக்கிறார் என்றாலும், திருப்புகழ் பாடல்கள் என்றால் அவ்வளவு இஷ்டமாம் பவ்யாவுக்கு. காரணம் என்னவாம்? அதை அவரே விளக்குகிறார்...

‘‘மந்திர சொரூபமான திருப்புகழைப் பாடுவதே தவம்தான். என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் என்னை வழிநடத்திச் செல்வது திருப்புகழ்தான். அதன் பாடல்களைப் பாடாமல் என் கச்சேரிகள் நிறைவடைந்தது இல்லை.

என் தாயார் சுந்தரவல்லி பிரபலமானப் பாடகி என்பதால் நான் பேச ஆரம்பித்தபோதே பாடவும் தொடங்கிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். என் தந்தையும் திருப்புகழ் திருத்தல ஆய்வாளர், எழுத்தாளர் என்பதால் சிறுவயதிலேயே திருப்புகழைப் படிப்பதும் பாடுவதும் எளிதில் கைவந்துவிட்டது. ஆமாம்! என் குடும்பமே முருகன் அடியார் கூட்டம் என்பதால் முருக பக்தையாகவே வளர்ந்தேன்’’ என்று கூறும் பவ்யாஹரி தொடர்ந்து, தனது முதல் கச்சேரி அனுபவம் குறுத்து விவரித்தார்.

‘‘எனது பதினாறு வயதில், காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோயிலில் வாரியார் ஸ்வாமிகளின் சகோதரரான திருப்புகழ் மணி முன்னிலையில் 66 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினேன். அதுதான் எனது முதல் பொது மேடைக் கச்சேரி.

நான், இசையோடு ஒன்றித் திருப்புகழைப் பாடப் பாட அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்தன. பழநி, திருச்செந்தூர், சுவாமி மலை என புகழ்பெற்ற முருகனின் திருத்தலங்களுக்குச் சென்று அந்தந்த தலங்களுக்குரிய திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறேன் என்றால், அது முருகன் தந்த வரமே!’’ என்கிறார் பவ்யா ஹரி.

2015-ம் ஆண்டு, மத்திய அரசின் இந்திய கலாச்சாரத் துறையின் சார்பில், ‘திருப்புகழ் அமுதம்’ என்ற தலைப்பில், தன் பெற்றோருடன் இணைந்து கோயில்களிலும் சபாக்களிலும் பாடியதயும், அதே ஆண்டில் இயல் இசை நாடக மன்றத்தில் ‘சந்தத் தமிழில் கந்தக் கடவுள்’ என்ற தலைப்பில் திருப்புகழ் கச்சேரி நடத்தியதையும் மிகுந்த பெருமிதத்தோடு பகிர்ந்துகொள்கிறார் பவ்யா ஹரி.

‘‘மனப் பக்குவம், ஆத்ம திருப்தி, சகஉயிர்களின் மீது நேசம்... என திருப்புகழால் நான் பெற்ற செல்வங்கள் நிறைய. அது ஞானப் பொக்கிஷம். எல்லாக் கடவுளர்களையும் ஆராதிக்கும் நூல் அது’’ என்று கூறும் பவ்யா, தொடர்ந்து திருப்புகழின் மகத்துவத்தை விவரித்தார்.

‘திருப்புகழைப் பாடப் பாட...’

‘‘கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடிய காமதேனு திருப் புகழ். தகுந்த குரு ஒருவரின் மூலம் அர்த்தங்களை அறிந்து தெளிந்து திருப்புகழைப் படிப்பது விசேஷம்.  திருப்புகழைப் பாடுபவர்களை விட கேட்பவர்கள் பாக்கியசாலிகள் என்பார்கள் பெரியோர்கள்.   ஆக, தினமும் திருப்புகழில் ஓரிரு பாடல்களைக் கேட்டுப்பழகினாலே போதும், படிப்படியாய் உங்கள் சொல்லும் செயலும் சிறப்படைவதை உணர்வீர்கள்.

மேடைகளில் நான் பாடுவதைக் கேட்டு பல அன்பர்கள் என்னிடம் வந்து திருப்புகழை அர்த்தத்தோடு சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டதுண்டு. அப்படி ஆர்வத்துடன் வரும் அன்பர் களுக்கு திருப்புகழை இசையோடு கற்றுத்தருகிறேன்.
திருப்புகழ் மீதும் இசையிலும் ஈடுபாடு கொண்ட என் கணவர் ஹரியை எனக்கு அளித்ததே திருப்புகழ் பாடல்கள்தான் என்பேன். ஆமாம் குடும்பத்தை நம் வாழ்க்கையை வரமாக்கும் வல்லமை திருப்புகழுக்கு உண்டு. மணமாகாத அன்பர்களுக்குத் திருமண வரம் அளிக்கத் திருப்புகழ் போதும் என்று உறுதியாகச் சொல்வேன்.

தினமும் வீட்டு பூஜையறையில் காலையிலும் மாலையிலும்  நெய்தீபம் ஏற்றி வைத்து, மனதார அந்த வள்ளிமணாளனைப் பிரார்த்தனை செய்து, ஒருமண்டல காலம் `விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த...’ எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடி வழிபடுங்கள். தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

இப்படி வேண்டும் வரங்களை வாரிவழங்கும் வல்லமையோடு திகழ்கின்றன திருப்புகழ் பாடல்கள். என் தாயாரின் நிறைவு காலத்தில், நினைவு தப்பிய சூழலிலும் அவரின் உதடுகள் அனிச்சை யாக திருப்புகழ் வரிகளை உச்சரித்துக்கொண்டிருந்த அற்புதத்தைக் கண்டு மனம் கசிந்துருகிய அனுபவம் எனக்குண்டு.நானும் காலம் முழுக்க என் நாக்குத் தழும்பேற திருப்புகழை பாடிக்கொண்டே இருக்க வேண்டும். அது எனக்காக மட்டுமில்லை; இந்த சமுதாயத்துக்காவும்’’ என்று நெகிழ்வும் மனநிறைவுமாக பூர்த்தி செய்தார் பவ்யா ஹரி.

இசைப்பயணமும் இறைப்பணிகளும் தொடருட்டும். திருப்புகழால் பெரும்புகழும் சிறப்பும் கிடைக்க முருகனின் திருவருள் கைகூடட்டும்.`

மு.ஹரி காமராஜ் - படம்: சொ.பாலசுப்ரமணியன்

திருமண வரமருள திருப்புகழ் போதும்!

ல்யாணத் தடை நீங்கி விரைவில் திருமணப்பேறு வாய்க்க, மிக அருமையான வழிபாடு உண்டு. முருகனைப் பிரார்த்தித்து ஒரு மண்டலம் விரதமிருந்து, கீழ்க்காணும் `திருச்செந்தூர் திருப்புகழை’ காலை அல்லது மாலை நேரங்களில், 6 முறை பாடி வழிபடவேண்டும். வழிபாட்டு காலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்குவது விசேஷம்.

வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி வியாழன் முதல் சஷ்டி திருவிழா தொடங்குகிறது. அன்று முதல் நிறைவுநாள் வரை (8.11.18 முதல் 13.8.11) தினமும் இப்பாடலை 6 முறை படித்து வழிபட்டால், ஒரு மண்டல காலம் வழிபட்ட பலன் கிடைக்கும்.

விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலையின் கணணிமாலை தந்து
     குறைதீர வந்து குறுகாயோ

மறிமானுகந்த இறையோன் மகிழ்ந்து
     வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த அதிதீரா

அறிவாலறிந்து னிரு தாளிறைஞ்சு
     மடியாரி டைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த பெருமாளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism