ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
##~##
ஸ்ரீ
சாய்பாபாவின் 'கேள்வியும் பதிலும்’ புத்தகம் எங்கு கிடைக்கும்? தகவல் தெரிந்த அன்பர்கள் உதவுங்களேன்.

- வி.கல்யாணி, ஹைதராபாத்

'ஸந்த்வாணி’ அபங்கம், தமிழ் அர்த்தத்துடன் புத்தகமாக வெளியாகி உள்ளதா? எந்த பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்? எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இந்தப் புத்தகம் இருந்தால் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- எஸ்.ராகவன், சென்னை-28

'தணிகைமலை சாரேனோ சாமியழகைப் பாரேனோ’  என்று தொடங்கும் பாட்டு ஒன்று, சிறுவயதில் பூஜைகளில் பாடி வழிபட்டதாக ஞாபகம். அந்த முழுப் பாடலும் தற்போது மறந்துவிட்டது. அன்பர்கள் எவருக்கேனும் இந்தப் பாடல் தெரிந்திருந்தால், அனுப்பி உதவுங்கள்; வழிபாட்டில் பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

- டி.சந்திரிகா, சென்னை-20

யிலாடுதுறை ஸ்ரீவிஜயன் தீட்சிதர் குழுவினர் பாடிய, 'பக்த விஜய நாமசங்கீர்த்தனம்’ முதல் பகுதி சி.டியாக வெளிவந்துள்ளதாமே? எங்கு  கிடைக்கும்?

- டி.ரவி, புதுச்சேரி

காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்குத் திசையில், சுமார் 9 கி.மீ. முதல் சுமார் 39 கி.மீ. தொலைவுக்குள், ஸ்ரீமகாலக்ஷ்மியும் ஸ்ரீவிஷ்ணு துர்கையும் குடிகொண்டிருக்கும் ஆலயம் உள்ளது என்றும் அதுவே எங்களின் குலதெய்வம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில், அய்யனார் கோயில் ஒன்றும் மயானம் ஒன்றும் இருப்பதாக பிரஸ்னம் பார்த்தபோது அறிந்தோம். ஸ்ரீமகாலக்ஷ்மி கோயில் எங்கே உள்ளது? எப்படிச் செல்வது? தெரிந்த அன்பர்கள் உதவினால், குலதெய்வ வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

- கே.ரவி, புதுச்சேரி

நாகர்கோவில் எம்.ஆர்.ராமஸ்வாமி என்பவர் வெளியிட்ட, 'ஐஸ்வர்ய ஸ்தோத்திர மஞ்சரி’ எனும் புத்தகம் எங்கு கிடைக்கும்? தகவல் தாருங்களேன்.

- எம்.ராமஸ்வாமி, பெங்களூரு

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

திருஞானசம்பந்தர் அருளிய திருவேதிக்குடி பதிகத்தில், ஏழாவது பாடலான, 'நீறுவரியோட...’ எனத் துவங்கும் பாடலைப் பாடினால், உடலும் உள்ளமும் தூய்மையாகும்; திருமணத் தடை முதலான அனைத்துத் தடைகளும் நீங்கி, நலமுடன் வாழலாம் என்கின்றனர். இந்தப் பதிகத்தைப் பிரதி எடுத்து எவரேனும் அனுப்பினால், நன்றி உள்ளவளாக இருப்பேன் என கடந்த 8.2.11 இதழில் உடுமலைப்பேட்டை வாசகி மீ.சொர்ணம் கேட்டிருந்தார்.

ஸ்ரீரங்கம் வாசகி சுமதி 'நீறுவரியோட’ எனத் தொடங்கும் அந்தப் பதிகத்தின் பாடலை எழுதி அனுப்பியுள்ளார். அந்தப் பாடல், உடுமலைப்பேட்டை வாசகி சொர்ணத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ங்களின் மூதாதையர் நூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் வசித்தனர். பிறகு, காலப்போக்கில் அங்கிருந்து வெளியேறி, பல ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால், குலதெய்வ வழிபாடு என்பதே இல்லாமல் போய்விட்டது. எங்களின் பெரியப்பா, 'நமக்குக் குலதெய்வம் ஸ்ரீபாப்பாத்தி அம்மன்’ என்று கூறியதாக ஞாபகம். தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோயில் உள்ளதா என கடந்த 5.4.11 இதழில், திருப்பத்தூர் வாசகர் என்.குமாரசாமி கேட்டிருந்தார்.

'எங்கள் குலதெய்வமும் ஸ்ரீபாப்பாத்தி அம்மனே! புதுக் கோட்டை மாவட்டத்தில் இருந்து அண்டக்குளம் செல்லும் பேருந்தில் சென்று, புத்தாம்பூர்குளம் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அருகிலேயே ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோயில் உள்ளது என ஊரணிபுரம் வாசகர் கோவிந்தராசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய திருவாரூர் மாவட்டம் (முன்பு தஞ்சை மாவட்டம்) குடவாசல் தாலுகாவில், கண்டிரமாணிக்கம் கிராமத்தில் திருமலை ராஜன் ஆற்றுக்கு வடகரையில், ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு அருகில் நாச்சியார் கோவில் எனும் கிராமத்தில் இருந்து, சுமார் 8 கி.மீ தொலைவில்  கண்டிரமாணிக்கம் அமைந்துள்ளது என்று சென்னை வாசகர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

ங்களின் குலதெய்வம் ஸ்ரீநல்லதங்கம்மன். உடுமலைப்பேட்டையில் ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு கோயில் உள்ளது. தமிழகத்தில், ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு பூர்விகமான கோயில் ஒன்று, விருதுநகர் பகுதியில் உள்ளது என்கின்றனர்.  இந்தக் கோயிலில் மண்ணெடுத்து, பல ஊர்களிலும் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக அறிந்தோம். தமிழகத்தில் ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு உள்ள கோயில்கள் குறித்த விவரங்கள் தேவை. அறிந்த அன்பர்கள் தகவல் தாருங்களேன் என்று என கடந்த 20.9.11 இதழில் கோவை வாசகி டி.மங்களம் கேட்டிருந்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள அர்ச்சுனாபுரத்தில்,  ஸ்ரீநல்லதங்காள் ஸ்ரீநல்லதம்பி கோயில் உள்ளது என்று அந்தக் கோயில் குறித்த தகவல்களை கோவை வாசகர் சி.கதிர்வேல் அனுப்பியுள்ளார். அந்தப் பிரதி, வாசகிக்கு  அனுப்பிவைக்கப்படுகிறது.

ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜையில், அகவல் பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். ஒளவையார் அருளிய 'விநாயகர் அகவல்’ விளக்க உரையுடன் புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? என கடந்த 13.12.2011 இதழில் சென்னை வாசகி காமாட்சி சத்தியநாராயணன் கேட்டிருந்தார்.

விளக்க உரையுடன் கூடிய 'விநாயகர் அகவல்’ புத்தகம் சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், நங்கநல்லூர், காஞ்சிபுரம் முதலான கிரி டிரேடிங் ஏஜன்ஸி கிளைகளில் இந்தப் புத்தகம் கிடைக்கும் என சென்னை வாசகி சௌந்தரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை வாசகி ஆர்.விஜயபாரதி,  விநாயகர் அகவல் பிரதியை அனுப்பியுள்ளார். 'தமிழ் களஞ்சியம்.காம்’ எனும் இணையதள முகவரியில் இருந்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விநாயகர் அகவல் பிரதியை, சென்னை வாசகர் சுயம்புதுரை, கோவை ராஜராஜன் ஆகியோர் அனுப்பிவைத்துள்ளனர். இந்தப் பிரதிகள், வாசகி காமாட்சி சத்தியநாராயணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

டந்த சில வருடங்களாக, கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுகிறேன். பல சிகிச்சைகள் மேற்கொண்டும், எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற, ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா? பதிகங்கள் இருக்கிறதா? தகவல் தெரிவியுங்களேன் என கடந்த 21.12.2011 இதழில் சென்னை வாசகி ஆர்.ஏ.பூரணி கேட்டிருந்தார்.

ஸ்ரீமுருகக் கடவுளை மனதார வேண்டிக்கொண்டு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சஷ்டி கவசம், சண்முகக் கவசம், சுப்ரமணிய புஜங்கம் ஆகியவற்றை மனதாரப் பாராயணம் செய்து வழிபட்டால், உடல் நோய்கள் படிப்படியாகத் தீர்ந்து, விரைவில் நலம் பெறலாம் என்று சென்னை வாசகர் ஆர்.கே.சுந்தரம் தெரிவித்துள்ளார்.