ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'எல்லா நாளும் விரத நாள்தான் எனக்கு!'

'எல்லா நாளும் விரத நாள்தான் எனக்கு!'

'எல்லா நாளும் விரத நாள்தான் எனக்கு!'

'இன்னிக்கு நான் ஆரோக்கியத்தோடு நல்லபடியா இருக்கிறதே, ஆரியங்காவு ஐயனோட அருளால தான்! சுமார் 23 வருஷத்துக்கு முன்னாடி, கடும் வயித்து வலியால அவதிப்பட்டேன். 'குடல்ல வால் வளர்ந்திருக்கு’னு டாக்டர் சொல்லிட்டார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவனுக்கு, ஆபரேஷன் செலவு வந்தா என்ன பண்ண முடியும்? ஆனா, ஆரியங்காவு ஐயன் என்னைக் கைவிடலை. எங்கேருந்தெல்லாமோ, யார் யாரெல்லாமோ உதவி பண்ணினாங்க. எல்லாம் அவனருள்!'' - நிறுத்தாமல், படபடவெனப் பேசுகிறார் இசக்கிமுத்து குருசாமி. கடந்த 43 வருடங்களாகச் சபரிமலைக்குச் சென்று வருகிறார்.

##~##
''என்னோட குரு பிச்சுமணி சாமிதான், எனக்கு எல்லாமே! அவரோட வழிகாட்டுதலால, சுமார் 17 வருஷம், சென்னைலேருந்து பாதயாத்திரையாவே சபரிமலைக்குப் போய் தரிசனம் பண்ணியிருக்கேன்.

ஒருமுறை... நாங்க குழுவா மலையேறிக்கிட்டிருந் தோம். ராத்திரி வேளை... இப்ப மாதிரி வசதியும் வெளிச்சமும் இல்லாத காலம் அது! அப்ப அங்கே வந்த நம்பியார் குருசாமி, அவரோட மடத்துலயே எங்களைத் தங்கிக்கச் சொன்னார். அதுமட்டுமா? அன்னிக்கு ரொம்ப நேரம், ஐயன் ஐயப்பனோட மகிமைகளை அவர் எங்களுக்குச் சொல்லிக்கிட்டே இருந்தார். இன்னிக்கும் அவரோட குரல் எங்க காதுல கேட்டுக்கிட்டே இருக்கு'' எனச் சிலிர்த்தபடி சொன்னவர், நம்பியார் சாமி வழங்கிய விபூதிப் பையைக் காட்டினார்.

'எல்லா நாளும் விரத நாள்தான் எனக்கு!'

தென்காசி- செங்கோட்டை அருகில் உள்ள புளியரை கிராமத்தில், அந்த ஊர்மக்கள் மற்றும் தன் குழுவினருடன் பழைய ஐயப்பன் ஆலயத்தைப் புதுப்பித்து, தினமும் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வரும் தகவலைப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

''வருஷத்தின் எல்லா நாளுமே ஐயப்பனை வழிபடுற நாட்கள்தான் எனக்கு. அதனால, எப்பவும் விரதத்துலதான் இருக்கேன். தினமும் குளிச்சு, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணினாத்தான் அந்த நாள் பொழுது, விடியும் எனக்கு!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் உள்ள ஐயப்ப திருவிக்கிரக டாலரைக் கைகளில் ஏந்தி, கண்களில் ஒற்றிக்கொண்டபடி சொல்கிறார் இசக்கிமுத்து குருசாமி.

- இரா.மங்கையர்கரசி
படங்கள்: ப.சரவணகுமார்