வருவதற்கு ஏன் தாமதம்?!

சுவாமி விவேகானந்தர் வீரத்துறவி மட்டுமல்ல, அவர் ஒரு அவதாரப் புருஷர் என்றே பகவான் ராமகிருஷ்ணர் கண்டு கொண்டார். ஆம், 1881-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரமஹம்ஸ ராமகிருஷ்ணரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் முதன் முதலாக தரிசித்தார்.

விவேகானந்தரிட மிருந்து பொங்கிப்பெருகிய இசை நாதத்தைக் கேட்டு பரவசித்த பரமஹம்ஸர், அவரை தனியே அழைத்துச் சென்று “இவ்வளவு காலதாமதமாக நீ வரலாமா? சாரமற்ற வெற்றுப் பேச்சுக்களைக் கேட்டு என் காதுகள் சலித்துவிட்டன. நீரே நாராயணரின் அம்சமான நர ரிஷி. புதிய உலகை விழித்தெழச் செய்ய நீங்கள் அவதாரம் செய்துள்ளீர்கள்” என்று பரவசப்பட்டார் பரமஹம்சர்.

அவர் கணித்தபடியே விவேகானந்தர் உருவானார்; புதிய இந்தியாவின் மலர்ச்சிக்கு ஞான சூரியனாக உருவெடுத்தார்!

நாம் ஆண்டவனின் தொண்டர்கள்

`வலிமைமிக்க புதிய இந்தியாவின் உறங்குகிற ஆத்மா விழித்தெழ வேண்டும். ஒழுக்கம் மிகுந்த சமுதாயம் உருவானால் வளர்ச்சி ஓங்கும்; புகழ் ஓங்கும்; சக்தி பெருகும்' என்று நம்பிக்கை முழக்கம் செய்யும் சுவாமிஜி, எந்த நிலையிலும் துவண்டுபோகக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். இதை வலியுறுத்த கதை ஒன்றும் சொல்கிறார் பாருங்கள்...

`எருது ஒன்றின் மீது ஒரு கொசு நீண்ட நேரமாக அமர்ந்திருந்ததாம். எருது கண்டுகொள்ளாமல் போகவே, கொசு கோபித்துக்கொண்டு, ‘நீண்ட நேரமாக அமர்ந்திருந்தேன், உங்களுக்கு அது பெரும் தொந்தரவாக இருந்திருக்கக்கூடும். எனவே நான் கிளம்புகிறேன்’ என்று சொன்னதாம்.

அப்போதுதான் கொசுவைக் கண்ட எருது ‘நீங்கள் வந்ததையே இப்போதுதான் அறிந்தேன், ஒன்றும் கவலையில்லை. நீங்கள் குடும்ப சகிதமாகக்கூட வந்து என்மீது அமர்ந்துகொள்ளலாம். அதனால் பாதகமில்லை' என்றதாம் எருது. அந்தக் கொசு அளவே உங்களுடைய கவலைகள் இருக்கவேண்டும். எருதைப் போன்ற வலிமையான நெஞ்சம் உங்களுக்கு வேண்டும். ஆயிரம் முறைகள் வீழ்ந்தாலும் லட்சியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் இலக்குகள் பொதுநலமாக இருந்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். நாம் ஆண்டவனின் தொண்டர்கள்; அவரின் வழித்தோன்றல்கள். இறைவனின் விருப்பங்களை ஈடேற்றுவதில் நாம் தியாகம் புரிகிறவர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளத்தில் வேரூன்றி விட்டால் போதும்; புதிய வலிமையான இந்தியா தோன்றிவிடும்.'

முத்துக்களை உருவாக்குங்கள்!

இளைஞர்களே, நீங்கள் ஒரு முத்துச் சிப்பியைப் போல மாறவேண்டும். புராண நம்பிக்கையின்படி, வானில் சுவாதி நட்சத்திரம் ஒளி வீசும்போது பெய்யும் மழையில் ஒரு துளி திறந்திருக்கும் முத்துச் சிப்பிக்குள் விழுந்தால், அது முத்தாக மாறிவிடுமாம். நீங்களும் பல முத்துக்களை உருவாக்க தயாராகுங்கள். பெருமை மிக்க புதிய இந்தியாவை உருவாக்குங்கள். நேர்மையான சிந்தனைகள்தான் உங்களை செயலாற்றவைக்கிற உந்து சக்தி. உங்கள் மனங்களை நேர்மையான சிந்தனைகளால் நிரப்பிக்கொள்ளுங்கள். வலிமையான செயல்திறனால் உங்கள் சிந்தனை மெய்ப்படட்டும்.

என் நாட்டின் இளைஞர்களே, நமது புராதானப் பெருமைகளை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள். மேலை நாட்டினரிடமிருந்து அறிவியலையும், புதிய கண்டுபிடிப்புகளையும் கற்றுக் கொள்ளுங்கள். ‘வாழுமளவும் நான் கற்கிறேன்’ என்று என் குருநாதர் பரமஹம்சர் சொன்னபடி பல கலைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் கொஞ்சமும் பெருமையில்லாத மேலை நாட்டு நாகரீகங்களை புறம்தள்ளி விடுங்கள். மேலை நாட்டவர்களைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் ஆழ்ந்துவிடாதீர்கள்.

- சுவாமி விவேகானந்தர்

தொகுப்பு: மு. ஹரி காமராஜ் - ஓவியம்: பத்மவாசன்