Published:Updated:

குதிரை... குலுங்க..! குலுங்க..!

குதிரை... குலுங்க..! குலுங்க..!

குதிரை... குலுங்க..! குலுங்க..!
குதிரை... குலுங்க..! குலுங்க..!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ம்மன் வழிபாடு என்பது தனி மகத்துவம் வாய்ந்தது. அதிலும், கிராமங்களில் அம்மனுக்குக் கோயில் எழுப்பி, விழாக்கள் நடத்து வதற்கும் நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஊரும் திரண்டிருக்கிற சுவாரஸ்யமே அலாதி!

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது முருங்கத்தொழுவு கிராமம். இந்த ஊர்மக்கள் அம்மனுக்குக் கோயில் கட்டி, தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகிறார்கள். அம்மனின் திருநாமம் - வாகைத் தொழுவு அம்மன்.

எந்தவொரு கஷ்டம் என்றாலும் 'முருகனைத் தொழு’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் இந்த கிராம மக்கள். பிறகு காலப்போக்கில் 'முருங்கைத்தொழுவு’ என்றே மாறிப்போனதாம் ஊரின் பெயர்!

இங்கே குடிகொண்டு, அனைவருக்கும் அருள் வழங்கும் வாகைத் தொழுவு அம்மன், கிராமத்து தேவதையாகவும் எல்லைத் தெய்வமாகவும் திகழ்பவள்தான் என்றாலும், மிகப்பிரமாண்டமாகத் திகழ்கிறது ஆலயம்! எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கும் முன்னதாக, அம்மனின் திருச்சந்நிதிக்கு வந்து, அவளிடம் முறையிட்டு காரியத்தில் இறங்கினால் போதும்... பிறகு அந்தக் காரியத்தை வெற்றிபெறச் செய்து அருள்வாளாம் அம்மன். எனவே, வெற்றியைத் தரும் அம்மனுக்கு வாகைத் தொழுவு அம்மன் எனப் பெயர் அமைந்ததாம்!

குதிரை... குலுங்க..! குலுங்க..!

ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீவேலாயுதம் தாங்கிய முருகக் கடவுள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருப்பராய சுவாமி ஆகியோரும் இங்கு தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

முருங்கைத்தொழுவு கிராமத்தில் கோயில் கொண்டுள்ள வாகைத் தொழுவு அம்மனை, மயிலாடி, காளிங்கவலசு, புதுப்பாளையம், உப்பிலிபாளையம் என சுமார் 15 கிராம மக்கள், தங்களின் கண்கண்ட தெய்வ மாகவும் இஷ்ட தெய்வமாகவும் போற்றி வணங்கித் தொழுகின்றனர்.

சித்திரை மாதப் பிறப்பு நாளில், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். அம்மனின் திருக்கோலத்தைக் கண்டு  பலருக்கும் அருளே வந்துவிடுமாம்! ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், எல்லா நாட்களிலும் இங்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து, பொங்கல் படையலிட்டு, அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். ஆடி வெள்ளிக்கிழமையில் விமரிசையாக நடை பெறும் திருவிளக்கு பூஜையில், ஆயிரக்கணக் கான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆவணி மாதத்தில் அம்மனுக்குப் பொங்கல் படையல் விசேஷமாக நடைபெறும். இந்த நாளில், அம்மனின் பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம், குடும்ப சகிதமாக வந்து, படையலிடுவார்கள். அப்போது, ஊரின் நாலாதிசைகளிலும் குதிரைச் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள். எல்லைகளில்... குதிரை குலுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். வருடம் முழுவதும் எல்லைப் பகுதியை காக்கிற அம்மனின் காவலாதிகளுக்குச் செய்கிற மரியாதையாகச் செய்கிற சடங்கு அது என்கின்றார்கள் கிராம மக்கள்! அப்போது, குதிரைச் சிலையானது நன்றாகக் குலுங்கி ஆடினால், அந்த வருடம் விவசாயம் செழிக்கும்; கிராம மக்கள் ஒரு குறையுமின்றி நிம்மதியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை!

அம்மனிடம் பிரார்த்தனை செய்த அன்பர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறி யதும், இங்கு வந்து தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்திச் செல்கின்றனர். அந்த வகையில், நிஜக் குதிரையையும் பசுமாடு களையும் நேர்த்திக் கடனாகச் செலுத்தியிருக் கிறார்களாம், பக்தர்கள்!  

            - மு.கார்த்திகேயன்
படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்