Published:Updated:

துர்கையின் திருக்கோலங்கள்!

துர்கையின் திருக்கோலங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

புதுக்கோட்டை மாவட்டம் மலையப்பட்டியில் உள்ள சிவன் குடவரைக் கோயிலின் மேற்குச் சுவரில், தாமரை மலரில் நின்ற கோலத்தில் துர்கையானவள் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். சுருட்டப்பள்ளி ஈஸ்வரன் திருக்கோயிலில் அருள்புரியும் துர்கை, பிடாரியின் மீது நின்று காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ திருக்கோலம் என்பர்.

துர்கையின் திருக்கோலங்கள்!

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருத்தலத்தில் மூன்று கண்களுடனும் எட்டுத் திருக்கரங்களுடனும் காட்சி தரும் துர்கை, பக்தர்களைக் காக்க உடனே புறப்படும் தயார் நிலையில் உள்ளாள். இவளது எட்டுக் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது சிறப்பு.

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் உள்ள மேற்புற தேவ கோஷ்டத்தில் துர்கையானவள் மகிஷன் மீது நின்று சங்கு- சக்கரம், அபயம்- வரதம் என்ற அமைப்பில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். காஞ்சியில் பல்லவர் கால ஐராவதேஸ்வரர் கோயிலில் வடக்குக் கோஷ்டத்தில் காட்சி தரும் துர்கையின் மேல்புறம் மானும், கீழே சிங்கத்துடனும் காட்சி தருகிறாள்.

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் என்ற ஊரில் குடவரைக் கோயிலில் உள்ள துர்கை முன்னிரு கரங்களில், வலக்கை காக்கும் குறிப்பிலும், இடக்கை இடுப்பிலும் இருக்க, பின்னிரு கரங்களில் சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறாள்.

- ராதா பரிமளம், திருச்சி-21

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு