யார் எப்படி அவமானப் படுத்தினாலும் கோபமே படாதவர் அந்த துறவி.

‘எப்படி இவரால் இப்படி இருக்கமுடிகிறது?’ அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.

தன் கேள்வியை அந்தத் துறவியிடமே கேட்டார். துறவி பொறுமையாக விளக்கினார்.

“ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு. ‘இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்...

அது ஒரு வெற்றுப்படகு!

காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?

யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்; இதுவும் வெற்றுப் படகுதான் என்று அமைதியாகிவிடுவேன்!” கேட்ட சிஷ்யர் தெளிவுபெற்றார்.

வள்ளுவனின் வாய்மொழி இப்படிச் சொல்கிறது...

‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது’

குணமென்னும் குன்றேறி நின்றார் - உயர்வான பண்பான நல்ல குணங்களை உடையவர்.

வெகுளி - கோபம்

கணமேயுங் - ஒரு கணமேனும் (நொடிப் பொழுது கூட)

காத்தல் அரிது - தன்வசம் வைத்திருக்க மாட்டார்கள்.

பொருள்: குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தமமான) பண்பாளர்களின் கோபம், ஒரு நொடிப்பொழுதே இருக்கும். தோன்றி மறைந்துவிடும். கோபத்தை தன் வசம் வைத்திருக்க மாட்டார்கள்.

ஆறுவது சினம்! - என்கிறாள் அவ்வை...

ஆறுவது தான் சினம்... தோன்றிய கனப்பொழுதில் மறைந்துவிட வேண்டும்... மறந்தும் விட வேண்டும்.

அறிவோம்...

தெளிவோம்...!

என்.கணேசன், சென்னை - 5.