Published:Updated:

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

ஓவியங்கள்: கேஷவ்

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

ஓவியங்கள்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

கா பெரியவாளை தரிசனம் செய்து ஆசி பெற வந்தவர்கள் ஏராளமானோர். தங்களுக்குத் தோன்றும் பலவகையான சந்தேகங்களை மகானிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லி விளக்குவார் மகா பெரியவா. ஒருமுறை, வட இந்தியாவிலிருந்து அன்பர் ஒருவர் மகாபெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்.

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்...” என்று தயக்கத்துடன் இழுத்தார் அவர்.

“வாயு புத்திரனைப் பற்றியதுதானே... தாராளமாகக் கேளேன்” என்றார் சுவாமிகள். அவர்தம் வதனத்தில் மந்தகாசப் புன்னகை.

வட நாட்டுக்காரர் தன் ஐயத்தைத் தெரிவித்தார்.

“சுவாமி! ஆஞ்சநேயர், பலருக்கும் இஷ்டதெய்வமாக இருக்கிறார். எல்லோருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால், அவருக்கு அணிவிக்கப்படும் மாலையைப் பற்றித்தான் என் சந்தேகம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

மகா பெரியவா மவுனம் காக்க, அந்த அன்பர் தொடர்ந்தார்.

“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால், வட இந்தியாவில் அனுமனுக்கு ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இந்த வித்தியாசம் சுவாமி?”

கேள்வி கேட்ட வடநாட்டு அன்பர் மட்டுமல்ல; பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக, அங்கே கூடியிருந்த அத்தனை பக்தர்களுமே ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.

மென்மையாகப் புன்முறுவல் பூத்தார் மகா பெரியவா. சன்னமான குரலில் ஆரம்பித்தார்.

“நிறையபேர் வீட்டுல கைக்குழந்தைகள் சாப்பிட அடம்பிடிச்சா, வீட்டுக்கு வெளியே தூக்கிண்டு வந்து, ‘அதோ பார் நிலா’ என்று சந்திரனைக் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவா. அதைப் பார்த்துண்டே குழந்தையும் சாப்பிட்டுவிடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள்னா, ராமதூதனான அனுமன் சாமிக்குச் சூரியன் விளையாட்டுப் பொருள். எப்படித் தெரியுமா?

பார்ப்பதற்கு ஏதோ பழம் போலக் காட்சி தந்த சூரியனை, அடுத்த கணமே தன் கையால பிடிச்சுச் சாப்பிடணும்னு தீராத ஆசை அனுமனுக்கு. அந்த அளவு, சூரியன் அவரைக் கவர்ந்துடுத்து. மனித வாழ்க்கையின் ஜீவாதாரமான சூரியனை, சாப்பிடறதுக்கு உகந்த பழம்னு நினைச்சுட்டார் அனுமன். அவர்தான் வாயுபுத்திரன் ஆச்சே! அடுத்த கணமே அது தன் கைல வந்து விழணும்னு ஆசைப்பட்டார். வாயு வேகத்துல வானத்துல பறந்தார்.

ஒரு சின்னக் குழந்தை, சூரியனையே விழுங்கறதுக்காக இப்படிப் பறந்து செல்றதைப் பார்த்த தேவர்களுக்குத் திகைப்பு. வாயுபுத்திரனின் வேகத்தை யாராலும் தடுக்க முடியலே. அதேநேரம், ராகு கிரகமும் சூரியனைப் பிடிச்சு கிரகண காலத்தை உண்டு பண்றதுக்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனா, அனுமனின் வேகத்துக்கு ராகு பகவானால் ஈடு கொடுக்க முடியலே. சூரியனைப் பிடிக்கறதுக்காக நடந்த இந்த ரேஸ்ல அனுமனிடம் தோற்றுப்போனார் ராகு பகவான்.

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

அப்புறம் அனுமனுக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு ரொம்பவும் உகந்த தான்யமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரிச்சுப் படைத்து யார் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்துலேயும் தான் பீடிப்பதில்லை என்றும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாயிடும் என்றும் அனுமனிடம் தெரிவிச்சார் ராகு பகவான். இந்த உணவுப் பண்டம் தன் உடல் போல் - அதாவது பாம்பு மாதிரி - வளைஞ்சு இருக்கணும்னு அனுமன்கிட்ட சொன்னார் அவர்.

அதனால்தான் உளுந்தால் ஆன மாலைகளா தயாரிச்சு அனுமனுக்கு சமர்ப்பணம் பண்றோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வணங்கினால் தோஷம் நீங்கிடும்னு தெரியறது...” என்று மகா பெரியவா சொல்ல, பக்தகோடிகள் மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமானார்கள். மினி உபன்யாச அரங்கமாக அந்த இடமும், சூழ்நிலையும் மாறிக்கொண்டு வந்தன. பெரியவா அதே சன்னமானக் குரலில் தொடர்ந்தார்.

“இப்போ மிளகு வடை, ஜாங்கிரி விஷயத்துக்கு வரேன். வடை, ஜாங்கிரி ரெண்டுமே உளுந்தினால் தயாரிக்கப்படறதுதான். தென்னிந்தியாவில் அனுமனுக்கு உளுந்து வடைமாலை சார்த்தறா. இங்கே உப்பளங்கள் அதிகமா இருக்கு. இங்கேர்ந்து நிறைய வெளிநாடுகளுக்கு உப்பு எக்ஸ்போர்ட் ஆகிறது. அதனால் தான் உப்பும் உளுந்தும் கலந்து, கூடவே மிளகும் சேர்த்து பாம்பு உடம்பு மாதிரி மாலையா தயாரிச்சு அனுமனுக்குச் சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கே நிறைய இருக்கு.

வட இந்தியாவில் நிறைய மாநிலங்கள்லே கரும்பு விளைச்சல் அமோகமா இருக்கு. சர்க்கரையும் அங்கே பெருமளவு உற்பத்தியாறது. தவிர, வட இந்தியர்களிடம் அதிகம் ஸ்வீட் சாப்பிடற வழக்கம் உண்டு. அதுவும், காலை வேளையிலேயே பிரேக்ஃபாஸ்ட் தட்டுல அவாளுக்கு ஸ்வீட்டும் இருக்கணும். இனிப்பு விரும்பிகளா இருக்கறதாலே, அங்கே உளுந்தினால தயாரிக்கப்படற ஜாங்கிரி மாலைகளை அனுமனுக்கு அணிவித்து வழிபடறா.

எது எப்படியோ, அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்ட மாதிரி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்துண்டே இருக்கு. உப்பா இருந்தா என்ன, சர்க்கரையா இருந்தா என்ன... மாலை சார்த்தி வழிபடற பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைஞ்சு போனா சரி...” என்று சொல்லிவிட்டு சிரித்தார் மகா பெரியவா. வடநாட்டு அன்பரும், இதர பக்தர்களும் மகா பெரியவா சொன்ன விளக்கம் கேட்டு நெகிழ்ந்தார்கள்.

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

னுமன் குறித்து மகா பெரியவா ஆற்றியுள்ள பேருரை படிக்கப் படிக்க சிலிர்க்கவைக்கும் வகையில் அமைந்திருக்கும். அற்புதமான ஓர் உரை... அதை அனுபவிப்போம்.

`ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர் களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணா பவேத்

ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரகிக் கிறார் என்பதை இந்தச் சுலோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.

சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல், எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சநேயர்.

இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவை கூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன.

உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு வினயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்சநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே வினயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார்.

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

பக்தி இருக்கிறவர்களுக்கே கூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திரமூர்த்தியின் பரம பக்தராக இருக்கும்போதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக்கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸகிதம்’ சுலோகம் சொல்கிறது.

அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்கு தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகர்ணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அனுபவிக்கிறார்.

பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. அதில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம் (ideal).

ஞானத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை - இப்படி எல்லாமும் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால், அது ஆஞ்சநேயர்தான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மசர்யத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூட காமம் என்கிற நினைப்பே வராத பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமமும் இல்லாமல் ராமனுக்குச் சேவை செய்தே நிறைந்துவிட்டார்.

ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.

இந்தக் காலத்தில், நமக்கு மற்ற எல்லா அனுகிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல், இப்போது நாம் உயரத் உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். அடங்கிக் கிடந்தால்தான் ஈஸ்வர பிரசாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. அதை நமக்கு ஆஞ்சநேயர் அனுகிரஹம் பண்ண வேண்டும்.

அவரைப் பிரார்த்தித்திருப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராம ராஜ்ஜியம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்ம ராஜ்ஜியம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசித்தபோது, ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்றும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அனுகிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், இந்த அனுகிரஹத்தைச் செய்வார்.’

- வளரும்...

- வீயெஸ்வி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism