Published:Updated:

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை
ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சூரியனும் புதனும் 13-ம் தேதி முதல் வலுவாக இருப்பதால், அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் அளவுக்குப் பணம் வரும்.

13-ம் தேதி முதல், ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், 9-ம் வீட்டில் நுழையும் கேதுவால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் உண்டாகும். ஆனால், 8-ம் வீட்டில் நிற்கும் குருவால் அலைச்சல்களும் செலவினங்களும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

நினைத்ததை  நினைத்தபடி முடிக்கும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால், இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கட்டடப் பணியைத் தொடங்குவீர்கள். பெற்றோரின் உடல்நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

 13-ம் தேதி முதல் ராகு, கேது ஆகிய கிரகங்கள் சரியில்லாத நிலையில் இருப்பதால், பேச்சில் நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் வலுவாக இருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். 12 - ம் வீட்டில்  செவ்வாய் தொடர்வதால் நிலம், வீடு வாங்கும்போதும் விற்கும்போதும் கவனம் தேவை. வியாபாரத்தில், விளம்பர யுக்திகளால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்தபடி பற்று-வரவு அமையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பனிப்போர் நீங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

நிதானமாகச் செயல்பட்டு சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய சொத்து ஒன்றை விற்று விட்டு, புது வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ராசிநாதன் புதன் 9-ம் வீட்டில்  தொடர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும். குரு பகவான் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் தைரியம் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அடகு நகையை மீட்பீர்கள்.

13-ம் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். கேது ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனைவியுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுங்கள். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

எதையும் திட்டமிட்டுச் செய்யவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சூரியனும் புதனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

13-ம் தேதி முதல் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நுழைவதால், தூக்கம் கெடும். திடீர்ப் பயணங்கள் உண்டு. கேது 6 - ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டு. மகான்களின் ஆசி கிடைக்கும்.

சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனப் பயணம், உடல்நலனில் அதீத கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில், தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சுக்கிரன் 5-ம் வீட்டில்  நிற்பதால், உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

குரு 4 - ம் வீட்டில் இருப்பதால் தாயாரின் உடல்நிலையில் கவனமாக இருக்கவும். 13-ம் தேதி முதல் கேது 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். லாப வீடான 11-ம் வீட்டில்  ராகு நிற்பதால், எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில், நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புகழடைவார்கள்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சூரியன் 13-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் அமர்வதால், வாழ்வில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைவதால் டென்ஷன், வேலைச் சுமை, நண்பர்களுடன் நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டுச்செலவு கூடும்.
 
குருபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் புது முயற்சிகள், புதிய காரியங்களையெல்லாம் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். ஆனால் சுக்கிரன் 4-ம் வீட்டில்  இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

முன்னேற்றத்துக்கான தடைகள் உடைபடும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

புதனும் சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் உங்களின் கைகளுக்கு வந்துசேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். தக்க நேரத்தில், எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குருபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

3-ம் வீட்டில் சுக்கிரனும் கேதுவும் வலுவாக இருப்பதால், நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். பழைமையான இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். செவ்வாய் 7-ம்  வீட்டில் அமர்ந்திருப்பதால், வெளி வட்டாரங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முடிவுகள் எடுப்பதில் இருந்துவந்த தயக்கங்களும் தடைகளும் நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில், பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம்; பணிகளில் அதீத கவனம் தேவை. கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.

முன்யோசனையுடன் செயல்படவேண்டிய வேளை இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் வலுவான வீடுகளில் இருப்பதால் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். பூர்வீகச் சொத்துகளில் உங்களுக்கான பங்கினைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. சோர்வு நீங்கும்; உங்களின் தோற்றப்பொலிவு கூடும். ஆனால், 13-ம் தேதி முதல் ராகு, கேது சாதகமாக இல்லை. எனவே, எதிலும் அகலக்கால் வைக்கவேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிரடியாக வேலையாள்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

புதனும், 13 - ம் தேதி முதல் சூரியனும் சாதகமாக இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். கை நிறைய பணம் வந்துசேரும். குடும்பத்தார் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள்.

ஆனால், குரு பகவான் 12-ம் வீட்டில் இருப்பதால், சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 13-ம் தேதி முதல் ராசிக்கு 7-ம் வீட்டில் ராகு அமர்வதால், சோர்வு வந்து நீங்கும். ராசிக்குள் நிற்கும் கேதுவும் அவ்வப்போது கோபப்பட வைப்பார். 5 - ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் எதையும் யோசித்து முடிவெடுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போதைக்குச் செய்யவேண்டாம். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் சிறிது தடைப்பட்டு முடியும்.

செலவுகளில் சிக்கனம் தேவைப்படும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

புதன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு உதவிசெய்வார்கள். வெளியூர்ப் பயணங்களால் திருப்தி உண்டாகும். குரு வலுவாக நிற்பதால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

13-ம் தேதி முதல் ராகுவும் வலுவாகக் காணப்படுவதால் கடந்த கால அனுபவங் களைப் பயன்படுத்தி, அனுபவ அறிவாலும் யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பி-களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஆனால், ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவும், சனியும் நிற்பதால் வேலைச்சுமை மற்றும் அலைச்சலால் அவ்வப்போது தூக்கம் குறையும்; மனச் சோர்வு உண்டாகும். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் உழைப்பீர்கள். வியாபாரத்தில், அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளின் அன்பும் உதவியும் கிடைக்கும் அவர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்படுங்கள்; முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய காலம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

பூர்வ புண்ணியாதிபதி புதன் ராசிக்குள் நிற்பதால் புத்துணர்ச்சி பெருகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், நெடுங்கால நண்பர்கள்கூட உங்களைக் குறைகூறுவார்கள்.

13-ம் தேதி முதல் ராகு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். தியானம் செய்வது நல்லது. ஆனால், கேதுவும் சனியும் லாப வீடான 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வங்கிக்கடன் கிடைக்கும். நினைத்திருந்த டிசைனில் ஆடை-ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக்கிடக்கும் சரக்குகளை, சலுகை விலையில் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி சொல்வதைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

எதிலும் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றிபெறும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

க்னாதிபதி குரு பகவான் வலுவாக இருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு.

13-ம் தேதி முதல் சூரியன் 12-ம் வீட்டில்  மறைவதால் வீண் விரயம், செலவுகள் ஏற்படலாம். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். 13-ம் தேதி முதல் ராகுபகவான் 4-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், தாயார் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை அதிக செலவுசெய்து சீர்திருத்தம் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில், அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினர், சக நண்பர்களிடம் கவனமாகப் பேசுவதும் பழகுவதும் நல்லது.

பணப் பிரச்னைகள் விலகும் நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism