சந்திரனின் ஆதிக்கத்தில் இரண்டாவது நட்சத்திரம் இது. நினைவாற்றலுக்கும் கற்பனைக்கும் உரிய கிரகமான சந்திரனின் ஆதிக்கத்திலும் சுயமுயற்சி, தன்மானம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான புதனின் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களை யவன ஜாதகம் ‘பரோபகாரீ ஸர்வக்ஞோ...’ என்கிறது. அதாவது, தனவானாகவும், சாகசம் புரிபவனாகவும், பிறருக்கு உதவுபவனாகவும், சகலமும் அறிந்தவனாகவும் இருப்பீர்கள் என்கிறது.

பிருஹத்ஜாதகம், நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பவர்கள், கொஞ்சம் துடுக்கானவர்கள் என்கிறது. ஜாதக அலங்காரம், ‘இன்பமுறுங் குறிப்புடையன், சூரன், அழகியன், கடினன், இனிய புத்தி...’ என்கிறது. அதாவது, அடிக்கடி பசி உடையவனாகவும், மக்கள் வணங்கும்படியாகவும், வீரம், அழகு, கடின சுபாவம், நல்ல புத்தி ஆகியவற்றை உடையவன் என்றும் உங்களைச் சிலாகிக்கிறது.

நட்சத்திர மாலை எனும் நூலில், ‘மெத்தென நடையனாகும், வெகுளியுஞ் சொல்ல வேண்டும், சித்தமுடையனாகும், செருங்குறியாளனாகும்...’ என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கள்ளங்கபடமில்லாத வெகுளியாகவும், வியாபாரியாகவும், கடின உழைப்பாளியாகவும், வலிமையானவனாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று பொருள். நீங்கள் அழகிய வட்ட முகத்துடன், சராசரி உயரம் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த நட்சத்திரம் ஒளியை உடைய நட்சத்திரம் என்று வானவியலாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கேற்ப உங்களிடம் ஒரு தேஜஸ் தெரியும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சிறந்த நகைச்சுவையாளராகவும் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருப்பீர்கள்.

மனைவி சொல்லே மந்திரம் என்று உரைப்பீர்கள். எந்த முடிவு என்றாலும் ஒருமுறையாவது அவளுடன் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டீர்கள். கொள்கையில் கொஞ்சம் அழுத்தமானவர்களாக இருப்பீர்கள். பணியாட்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள்.

பிற மதத்தினரை மதிக்கும் மத நல்லிணக்கம் உங்களிடம் உண்டு. வேத சாஸ்திர அறிவு பெற்றிருப்பீர்கள். பிறருக்கு எளிதில் உதவக்கூடியவர்களாக இருக்கும் நீங்கள், அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள்.

செல்வச் செழிப்புடன் வாழும் நீங்கள், சித்தர், பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் ஆகியோரைப் போற்றுபவர்களாகவும் பரிமளப் பிரியர்களாகவும் இருப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் என்றால் உங்களுக்குக் கொள்ளைப்பிரியம்.

சிறுவயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பவர்களாகவும் ஆழ்ந்த சிந்தனையுடையவர்களாகவும் இருப்பீர்கள். உங்களை நம்பி வந்தவர்களைக் காப்பாற்றும் இரக்க சுபாவம் உடைய நீங்கள், பாவம் புண்ணியம் பார்த்து காரியங்களைச் செய்வீர்கள்.

அளவான குடும்பத்தைப் பெற்றிருப்பீர்கள். கமிஷன், கட்டட கான்ட்ராக்ட், ஏஜென்சி, வாகனம், உணவு வகைகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள். மிகவும் சிக்கனமாகவும், சற்றே சுயநலத்துடனும் வாழும் நீங்கள், பண விஷயத்தில் நழுவும் மீன்களைப் போன்றவர்கள். மற்றவர்களின் விவகாரத்தில் கூடிய மட்டும் தலையிடமாட்டீர்கள். இனிப்பாகப் பேசி நண்பர்களை ஈர்ப்பீர்கள்.

எடுத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற விடாமுயற்சியுடையவர்கள் நீங்கள். எதிரிகளைத் தோல்வியுறச் செய்வதில் வல்லவர்கள். எந்தவித இடையூறையும் பொருட்படுத்தாமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். இசை ஆர்வம் மிக்கவர்களாக இருக்கும் நீங்கள், எப்போதும், எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் பாட்டு பாடிக்கொண்டோ, பாடலைக் கேட்டுக்கொண்டோ அந்த வேலையைச் செய்வீர்கள். பள்ளி - கல்லூரியில் படிப்பவர்களானால்... பாடலைக் கேட்டுக் கொண்டே சாப்பிடுவது, படிப்பது போன்ற வேலைகளைச் செய்வீர்கள். அவ்வப்போது அயல்நாடு சென்று வரக்கூடியவர்கள், நீங்கள்.

இயற்கைச் சூழலை ரசிப்பீர்கள். காதல் வயப்படுபவர்களாக இருப்பீர்கள். உங்களில் சிலர், நாட்டின் தலைவரையோ பிரபலமான ஒருவரையோ மிகவும் நேசிப்பவர்களாக இருப்பீர்கள். சில நேரங்களில், முன்கோபம் உடையவர்களாகவும் கடுஞ்சொற்களைக் கூறுபவர்களாகவும் இருப்பீர்கள்.

நெருக்கடி நேரத்தில் பிறரை அழுத்திவிட்டு உங்களை உயர்த்திக்கொள்ளவும் தயங்கமாட்டீர்கள். உங்களில் பலர் சகல சாஸ்திரங்களையும் கற்று வைத்திருப்பீர்கள். 27 முதல் 33 வயதுக்குள்ளேயே உங்களில் பலர் பிரசித்திபெற்று விளங்குவீர்கள். 51 வயதிலிருந்து அனைத்து வசதி வாய்ப்புகளும் உங்களை வந்து சேரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் வாழ்வீர்கள்.

முதல் பாதம்

(சந்திரன் + புதன் + செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் எந்தச் செயலையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எப்போதும் புதுமையாகச் சிந்திக்கும் இவர்களது ஆற்றலைக் கண்டு சுற்றியிருப்பவர்கள் வியப்பார்கள். சிறு வயதிலிருந்தே ஆடம்பர வாழ்க்கைக்கு அஸ்திவாரம் தோண்டுவார்கள்.

கல்வியில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். சமாதானத்தையே விரும்புபவர்கள். எனினும், தேவைப்பட்டால் சண்டையிடவும் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச்சை மாற்றிப் பேசவும் தயங்கமாட்டார்கள். வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க அதிகம் பிரியமுடையவர்களாக இருப்பார்கள். அடிக்கடி புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவார்கள். இனிப்பு, காரத்தை அதிகம் விரும்புவார்கள். கட்டடம், பொதுப் பணி, ஆசிரியர், காவல், ராணுவம், நீதி, தொலைபேசி ஆகிய துறைகளில் மிளிர்வார்கள்.

குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் அதிகம் பாசம் வைக்கும் இவர்கள் உறவுகள் மேம்பட உழைப்பார்கள். சந்தை நிலவரத்தை அறிந்து போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள். 35 வயதிலிருந்து கௌரவப் பதவிகள் தேடி வரும். 46 வயதிலிருந்து நீங்காத சொத்துகள் வந்து சேரும்.

பரிகாரம்: ஈரோடுக்கு அருகிலுள்ள கொடுமுடியில் வீற்றிருக்கும் சௌந்தரநாயகி உடனுறை மகுடேஸ்வரரை வணங்கி வழிபட்டு வருவதால், வாழ்க்கை நலமாகும்.

இரண்டாம் பாதம்

(சந்திரன் + புதன் + சுக்கிரன்)

இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள், இல்லையென்று எப்போதும் சொல்லாமல் உதவும் தயாள குணம் படைத்தவர்கள். மற்றவர்களிடம் கனிவாகப் பேசிப் புகழ் பெறுவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை.

நல்ல தேக அமைப்பும் நீண்ட சுருண்ட முடியும் கொண்டவர்கள். அருங்குணங்கள் பலவும் பெற்றிருப்பவர்கள். பல்வேறு தொழில்களைக் கற்றறியும் சாமர்த்தியசாலிகளாகவும் அதிகம் பேசுபவர்களாகவும் இருக்கும் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள். விளையாட்டில் ஆர்வமுடையவர்கள்.

பள்ளிப் பருவத்தில் நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். வணிகவியல், பொருளாதாரம், கணக்குப் பதிவியல், புள்ளியியல், வங்கி மேலாண்மை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத் திறமையைப் பெருக்கிக்கொள்ள அயல்நாடு செல்வார்கள்.

காதலில் ஈடுபாடு உண்டு. மனைவி, குழந்தைகளை நேசிக்கும் இவர்கள் தாய், தந்தைக்கும் நல்ல பிள்ளையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு அதிகம் இருக்கும். சமூகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். அரிமா, ரோட்டரி போன்ற சங்கங்களிலும் மற்றும் மனமகிழ் மன்றங்களிலும் உறுப்பினராக இருப்பார்கள்.

24 வயதிலிருந்து புகழடைவார்கள். 39 வயதிலிருந்து வெற்றிகள் குவியும். இருந்தாலும் கொஞ்சம் சருக்கல்கள் இருக்கவே செய்யும். எனினும் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை; எதையும் சமாளித்து முன்னேறுவார்கள். 50 வயதிலிருந்து முழுமையாக சாதிப்பார்கள்.

பரிகாரம்: மயிலாடுதுறை அருகிலுள்ள திருஇந்தளூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபரிமளரங்கநாயகி, ஸ்ரீசந்திர சாபவிமோசனவல்லி உடனுறை ஸ்ரீபரிமளரங்கநாதரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்

(சந்திரன் + புதன் + புதன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் மாறுபட்ட சிந்தனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்கள். பணம் - காசுக்காக சில நண்பர்கள் இவர்களைத் தேடி வருவார்கள். அதையும் இவர்கள் உடனே புரிந்துகொள்வார்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் சாது, சந்நியாசிகளைச் சந்தித்து ஆசி பெற விரும்புவார்கள்.

குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனம் கொப்பளிக்கும். பள்ளியில் நல்ல பெயரெடுத்தாலும் வீட்டில் இவர்களுடைய சேட்டைகளால் வசப்பாட்டு கிடைக்கும். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவார்கள். பெரிய அளவில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பம் குழந்தைகள் என்று குறுகிய வட்டமாக இருக்காமல் சமூக அவலங்களைக் கொஞ்சம் தட்டிக் கேட்கவும் செய்வார்கள். இவர்களில் சிலருக்கு மணவாழ்க்கை சுமார்தான். நினைவாற்றல் அதிகமுடைய இவர்கள், நெடுங்காலப் பகைவனை மன்னித்தாலும் மன்னிப்பார்களே தவிர, துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 29 - 34 வயது நடக்கும் காலகட்டத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து, வாழ்க்கையின் மீது ஒரு பிடிமானம் வரும். உடன்பிறந்தவர்களால் சிலநேரங்களில் அலைக்கழிக்கப்படுவார்கள். குலதெய்வக் கோயில், பூர்விகச் சொத்துகளைக் கட்டிக் காப்பாற்றுவார்கள். கதை, துணுக்குகள் எழுதுவார்கள். 50 வயது முதல் அனைத்து வகையிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: திருநாங்கூர் - திருக்காவளம்பாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமடவரல்மங்கை மற்றும் ஸ்ரீ செங்கமலநாச்சியார் உடனுறை ஸ்ரீகோபாலகிருஷ்ணனை தரிசித்து வாருங்கள்; நன்மைகள் உண்டாகும்.

நான்காம் பாதம்

(சந்திரன் + புதன் + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்களுக்குக் கலையுணர்வும் நுண்ணறிவும் இழையோடும். எதிலும் ஒரு தனித்துவம் இருக்கும். சிறு வயதிலேயே சினிமா, இசை ஆகியவற்றில் நாட்டம் கொண்டு அதிலேயே பிரபலமாவார்கள். ஆர்க்கிடெக்சர், தணிக்கை, ஃபேஷன் டெக்னாலஜி... இவற்றில் ஒன்றில் சிறந்து விளங்குவார்கள்.

இளகிய மனம் உண்டு. தன்னடக்கம் அதிகம் உள்ள இவர்கள் தான-தர்மம் செய்யத் தயங்கமாட்டார்கள். எப்போதும் சந்தோஷமான மனநிலை உடையவர்கள். தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருப்பார்கள். வியாபாரத்தில் இவர்களுக்கு நிகராக யாரும் வர முடியாது. அந்தளவுக்குத் தரமான பொருள்களைத் தருவதுடன், விளம்பர யுக்திகளையும் மேற்கொள்வார்கள். நாடாள்பவர், ஆன்மிகவாதி ஆகியோரின் நட்பையும் பெற்றிருப்பார்கள். நயவஞ்சகமாகப் பேசத் தெரியாதவர்கள். ஆனால், முன்கோபமாகப் பேசிவிடுவார்கள். 32 வயதிலிருந்து வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, வசதி பெருகும். 39 வயதிலிருந்து அதிகாரப் பதவியில் அமர்வார்கள்.

பரிகாரம் : திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்கி வழிபட்டு வருவதால், எதிர்காலம் சிறப்பாகும்.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அஸ்த நட்சத்திரத்தில்...

திருமணம், உபநயனம், தாலிக்குப் பொன் உருக்குதல், சீமந்தம், மஞ்சள் நீராட்டல், காதணி விழா, விதை விதைத்தல், புது வேலையில் சேர, புது வேலைக்கு விண்ணப்பிக்க, கிணறு வெட்டுதல், வியாபாரம் தொடங்குதல், கல்வி தொடங்குதல், யாத்திரை, புதிய ஆடை, ஆபரணம் அணிதல், மந்திரம் கற்றல், மருந்து உண்ணல், வாகனம் ஏறுதல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல், பொன்னேர் கட்டுதல், புது மனை புகுதல், கடல் பயணம் ஆகிய வைபவங்களைத் தொடங்க ஏற்ற நட்சத்திரம்.

பரிகார ஹோம மந்திரம்:

ஆயாது தேவ: ஸவிதோபயாது
ஹிரண்யயேன ஸுவ்ருதாரதேன
வஹன் ஹஸ்தஹும் ஸுபகம் வித்மனாபஸம்
ப்ரயச்சந்தம் பபுரிம் புண்யமச்ச
ஹஸ்த: ப்ரயச்ச த்வம்ருதம் வஸீய:
தக்ஷிணேந ப்ரதிக்ருப்ப்ணீம ஏனத்
தாதார&மத்ய ஸவிதா விதேய
யோ நோ ஹஸ்தாய ப்ரஸுவாதி யஜ்ஞம்

அஸ்த நட்சத்திரம்

நட்சத்திர தேவதை : ஏழு வண்ணமுடைய குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சூரிய பகவான்.

வடிவம் : உள்ளங்கை வடிவமுடைய ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள் : பூ, ஷ, ந, ட.

ஆளும் உறுப்புகள் : சிறுநீர்ப்பை, குடல், சுரப்பிகள்.

பார்வை : சமநோக்கு.

பாகை : 1600 & 173.20

நிறம் : கருமை.

இருப்பிடம் : நகரம்.

கணம் : தேவ கணம்.

குணம் : எளிமை.

பறவை : பருந்து.

மிருகம் : பெண் எருமை.

மரம் : பாலுள்ள வேலம்.

மலர் : சிவப்பு அரளி.

நாடி : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி : தயிர்.

பஞ்சபூதம் : அக்னி.

நைவேத்தியம் : அப்பம்.

தெய்வம் : ஸ்ரீ காயத்ரிதேவி.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந: ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 7.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் நீலம், வெள்ளை.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : புதன், சனி.

அதிர்ஷ்ட ரத்தினம் : பெரிடாட் (Peridot)

அதிர்ஷ்ட உலோகம் : பித்தளை.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

அர்ஜுனன், நகுலன், சகாதேவன், கூரத்தாழ்வார், எரிபத்த நாயனார், இலங்கை முன்னாள் அதிபர் திருமதி பண்டாரநாயகா ஆகியோர் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.