Published:Updated:

எடுத்த காரியங்களில் வெற்றி...

எடுத்த காரியங்களில் வெற்றி...
பிரீமியம் ஸ்டோரி
எடுத்த காரியங்களில் வெற்றி...

பி.சந்த்ரமெளலி - ஓவியம்: கேஷவ்

எடுத்த காரியங்களில் வெற்றி...

பி.சந்த்ரமெளலி - ஓவியம்: கேஷவ்

Published:Updated:
எடுத்த காரியங்களில் வெற்றி...
பிரீமியம் ஸ்டோரி
எடுத்த காரியங்களில் வெற்றி...

ங்கலங்கள் நிறைந்த மாதம் பங்குனி. மான்- மழு ஏந்தியவர் மலைமகளை மணம் புரிந்த மாதம். ஆயிரம் பசு மாடுகளை தானம் செய்த புண்ணியம் தரும் மாதம். தடைகளை நீக்கி வெற்றி அருளும் மாதம். திருஅரங்கரை விபீஷணர் பெற்ற மாதம். திருஅரங்கர், திருஅரங்கத்தை அடைந்த மாதம். இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த பங்குனியில் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் இரண்டு உண்டு.

எடுத்த காரியங்களில் வெற்றி...

விஜயா ஏகாதசி: எந்த விதத் தடங்கல் இருந்தாலும் அதை நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதத் தேய்பிறையில் வருவது இது. கோரிக்கைகளை நிறைவேற்றி, பலன்களை அளிப்பது இந்த விஜயா ஏகாதசி.

ஒரு வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்காமல் என்றும் சொல்வது உண்டு), ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் நாராயணரின் திருவடிவை வரைந்து முறைப்படி வழிபட வேண்டும். மறுநாள் துவாதசி அன்று, ஒரு சாது அல்லது ஏழைக்கு உணவு அளித்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தர வேண்டும். அதன் பிறகே நாம் உணவு உண்ண வேண்டும்.

‘கடல் கடந்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்டு வருவது?’ என்று ராமர் சிந்தனையில் ஆழ்ந்தபோது, முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் கூறுகிறது.

ஆமலகீ ஏகாதசி: பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி எனப்படும். இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தின் அடியில் தூய்மை செய்து, அங்கு பரசுராமனின் திருவடிவம் வரையப்பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, முறைப்படி வழிபட வேண்டும்.

அதன் பிறகு நெல்லி மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். ஒரு ‘கோ’தானமே அனைத்தையும் அருளும் என்றால், ஆயிரம் கோதான பலன் பற்றிச் சொல்லவா வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism