Published:Updated:

ஆன்மிக துளிகள்!

ஆன்மிக துளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்!

ஆன்மிக துளிகள்!

ஆன்மிக துளிகள்!

ஆன்மிக துளிகள்!

Published:Updated:
ஆன்மிக துளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்!

அஷ்டாங்க விமானம்!

ஆன்மிக துளிகள்!

மதுரையில், ரயில் நிலையம் அருகிலுள்ளது அருள்மிகு கூடலழகர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குப் பல சிறப்பம்சங்கள் உண்டு. தசாவதாரங்களில் முதலாவதான மச்ச அவதாரம் நிகழ்ந்த, கிருதமால் நதி, இந்தக் கோயிலை ஓர் ஆரம் போன்று சூழ்ந்து ஓடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இக்கோயிலின் சூரிய ரதம் அவசியம் தரிசிக்கவேண்டிய ஒன்று. அதேபோல், கோயிலின் அஷ்டாங்க விமானமும் விசேஷ அம்சமாகும்.

இந்தத் தலத்துடன் சேர்த்து மூன்று தலங்களில் மட்டுமே அஷ்டாங்க விமானம் உண்டு என்கிறார்கள். மற்றவை:  திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர். மதுரை - கூடலழகர் கோயிலின் அஷ்டாங்க விமானம் தேவசிற்பியான விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டதாம். மூன்று தளங்களுடன் திகழ்கிறது இந்த விமானம். கருவறையில் கூடலழகர் பெருமாள் வீற்றிருக்கிறார். மேல் இரண்டு தளங்களில் சூரிய நாராயணரும், க்ஷீராப்தி நாதரான பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளும் அருள்கிறார்கள். மீனாட்சி அம்மைக்கும், சொக்கேசருக்கும் திருமணம் நடக்க அருள்புரிந்தவர் கூடலழகர் என்கின்றன ஞானநூல்கள்.

- அ.உமாராணி, கிருஷ்ணகிரி-1.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னம் பூ பிரசாதம்

குமரிமாவட்டம், அழப்பன்கோடி பூதந்தான் கோயிலில் பக்தர்களுக்குத் தென்னம்பூவும் சந்தனமும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. தென்னம்பூ பிரசாதமாக வழங்கப்படும் வழக்கத்தை வேறு தலங்களில் காண்பதரிது!

- நெ.இராமன், சென்னை-74.

சேவலை ஏந்தி நிற்கும் முருகன்!

முருகனைச் சேவற்கொடியோன் எனப் போற்றுகின்றன புராணங்கள். கோவை அருகிலுள்ள செஞ்சேரி மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், கையில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே ஏந்தியிருக்கிறார்.

- அ.மீனாட்சி, விழுப்புரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism