Published:Updated:

திதிகளும் குணங்களும்!

திதிகளும் குணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
திதிகளும் குணங்களும்!

திதிகளும் குணங்களும்!

திதிகளும் குணங்களும்!

திதிகளும் குணங்களும்!

Published:Updated:
திதிகளும் குணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
திதிகளும் குணங்களும்!

ஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று திதி. அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில் திதிகள் தோன்றுகின்றன.

ஒரே தீர்க்க ரேகையில் இருந்த சூரியனிடமிருந்து விலகி சந்திரன் பயணிக்கும் வேளையில் முதல் திதி ஆரம்பிக்கிறது. இந்த ரேகை வித்தியாசம் பன்னிரண்டாக வரும்போது, முதல் திதி நிறைவடைகிறது. அதன் பின் இரண்டாம் திதி துவங்கும். அதாவது, சூரியனிடம் இருந்து சந்திரன் எவ்வளவு தூரம் விலகியுள்ளது என்பதை குறிப்பது திதி. சூரிய உதயத்தில் எந்த திதி உள்ளதோ அதுவே அன்றைய முழு நாளுக்கும் உரிய திதியாகும். குறிப்பிட்ட திதியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் குறித்த விவரம் இங்கே உங்களுக்காக...

திதிகளும் குணங்களும்!

பிரதமை: நல்ல மனைவி அமைவாள்.

துவிதியை: உண்மை பேசுபவர், அனைவராலும் விரும்பப்படுபவர், ஆயுதப் பயிற்சியில் வல்லவர்.

திருதியை: மற்றவர்களைச் சோதிப்பதில் வல்லவர்.

சதுர்த்தி: ஆசைகளும் ரகசியங்களும் மிகுந்தவர்.

பஞ்சமி: அறிவாளிகள், ஆயுள் பலம் மிகுந்தவர்.

சஷ்டி: ஆண் குழந்தைகள் அதிகம் உண்டு. நண்பர்களும் மிகுதி. உலக இன்பங்களில் பற்றுள்ளவர்.

சப்தமி: நற்குணம், செல்வம் மிக்கவர், கற்றோரையும் மூத்தோரையும் மதிப்பவர்.

அஷ்டமி: வாழ்க்கைத் துணைவருக்கு உண்மையாக இருப்பார்கள், பேச்சாற்றல் கொண்டவர்.

நவமி: தைரியமும், பாசமும், கலையார்வமும் மிக்கவர். எதிரிகளுக்குப் பயங்கரமானவர்.

தசமி: வியாபாரத்தில் வெற்றி பெறுபவர், விஞ்ஞான அறிவும் ஆர்வமும் மிகுந்தவர்.

ஏகாதசி: சகல விஷயங்களிலும் போட்டிபோடும் வல்லவர்; கொள்கைப்பிடிப்பு ஏதும் இல்லாதவர்.

துவாதசி: சொத்துக்கள் மிக்கவர், எதிரிகள் அதிகம் உண்டு. பெண்கள் மத்தியில் புகழோடு திகழ்வார்.

திரயோதசி: தூய உள்ளம், உடல் நலம் கொண்டவர். உறவினர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்.

சதுர்த்தசி: அழகும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர். தமக்கென தனிக் கொள்கையுடன் வாழ்வார்.

பெளர்ணமி: நீண்ட கேசம் உண்டு. முயற்சிகளில் வெற்றி பெறுபவர், ஆயுள் பலம் மிகுந்தவர்.

அமாவாசை: நல்ல வாழ்க்கையைப் பெற்றவர், எதிரிகளுக்குப் பயங்கரமானவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் எஸ்.முருகேசன், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism