Published:Updated:

வண்ணங்கள்... வாய்ப்புகள்!

வண்ணங்கள்... வாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
வண்ணங்கள்... வாய்ப்புகள்!

ராம் திலக்

வண்ணங்கள்... வாய்ப்புகள்!

ராம் திலக்

Published:Updated:
வண்ணங்கள்... வாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
வண்ணங்கள்... வாய்ப்புகள்!

ண்ணமயமான வாழ்வைப் பெறுவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆயினும் அப்படியான கொடுப்பினை முன்ஜன்ம வினைப்படியே அமையும். இது ஒருபுறமிருக்க, எந்தெந்த வண்ணங்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் நூல்கள் பலவற்றிலும் விவரித்துள்ளார்கள். அவற்றில் சில தகவல்கள் இங்கே உங்களுக்காக...

வண்ணங்கள்... வாய்ப்புகள்!

மங்கலம் நல்கும் மஞ்சள்: ராசி அதிபதி குரு என்பதால், தனுசு மற்றும் மீன ராசிக்கு உகந்த நிறம் மஞ்சள். இந்த ராசிகளைக் கொண்டவர்கள், மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து, தென்முகக் கடவுள் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், வீட்டில் மங்கலம் பெருகும்; சகல பாக்கியங்களும் ஸித்திக்கும். இக-பர சுகங்களைப் பெறலாம்.

அதிர்ஷ்டம் அள்ளித் தரும் சிவப்பு: இந்த வண்ணத்துக்கு உரிய ராசிநாதன் செவ்வாய் என்பதால், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உகந்த வண்ணம் சிவப்பு. இந்த ராசிகளை உடையவர்கள் செந்நிறப் பட்டு அணிந்து, முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம். சகல நலன்களும் உண்டாகும்.

வெற்றி தரும் வெண்மை: ராசிநாதன் சுக்கிரன் என்பதால் ரிஷபத்துக்கும், ராசிநாதன் சந்திரன் என்பதால் கடகத்துக்கும், ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் துலாம் ராசிக்கும் உகந்த வண்ணம் வெண்மை. ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வெண்பட்டு அணிந்து மகாலட்சுமியை வழிபடுவதால், வெற்றிகள் குவியும்; வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம். கடக ராசிக்காரர்கள் வெண்பட்டு அணிந்து பராசக்தியை வழிபடுவதன் மூலம், உங்களின் எண்ணங்கள் இனிது நிறைவேறும்.

சுபிட்சம் அருளும் பச்சை: ராசிநாதன் புதன் என்பதால் மிதுனத்துக்கும், கன்னிக்கும் உகந்த வண்ணம் பச்சை. இந்த ராசிக்காரர்கள் பச்சைப்பட்டு ஆடை அணிந்து திருமாலை வணங்கி வழிபடுவதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

பதவி வழங்கும் ஆரஞ்சு: சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் ஆவார். இந்த ராசிக்காரர்கள் ஆரஞ்சு நிறப் பட்டாடை அணிந்து, ருத்ரனை வழிபடுவதால், உயர்ந்த பதவி-பட்டங்கள் கிடைக்கும். சிவனருள் ஸித்திக்கும்.

அந்தஸ்து அளிக்கும் கருமை: மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி சனி. இந்த ராசிகளை உடையவர்களுக்கு கருமை நிறம் உகந்தது. இவர்கள் கறுப்பு வண்ணத்தில் பட்டாடை அணிந்து, ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. இதனால் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism