Published:Updated:

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

Published:Updated:
ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை
ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் 11 - ம் வீட்டில் நிற்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். வேற்று மதத்தினர், நாட்டினரால் உதவியுண்டு. மகனுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல மணப்பெண் அமைவார். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ஆனால் சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

குரு 9 - ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஓரளவு நன்மை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வேற்றுமொழி, மதத்தினர்கள் உதவுவார்கள். உறவினர்கள், நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

முற்பகுதியில் போராடினாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புத்துணர்ச்சி ததும்பும். தடைப்பட்ட காரியங்களில் இனி வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போங்கள். வீண் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கப்பாருங்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

ஆனால் 8 - ல் குருவும் ராசிக்குள் செவ்வாயும் இருப்பதால் கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

பிரபலங்களின் உதவியால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் இருக்கும். செவ்வாய் 12 - ல் மறைவதால் அலைச்சல், சுபச் செலவுகள் ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.

குரு சாதகமாக ராசியைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

செவ்வாய் வலுவாக இருப்பதால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சுக்கிரனும், புதனும் 8 - ல் நிற்பதால் மன தைரியம் பிறக்கும். குடும்பத்தில் அமைதியுண்டு. என்றாலும் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. கொஞ்சம் அலைந்து திரிந்துதான் சில வேலைகளை முடிக்கவேண்டி வரும்.

குருவின் போக்கு சரியில்லாததால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கேது பலமாக இருப்பதால் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காகச் சுட்டிக் காட்டுங்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

அந்தரங்க ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

செவ்வாய் 10 - ம் வீட்டில் நுழைவதால் சொத்துகள் வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதனும், சுக்கிரனும் ராசியைப் பார்ப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் கணிசமாக உயரும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. திருமணம், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வீடு வாங்க, கட்ட, வங்கி லோன் கிடைக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். குரு சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும் நேரம் இது. 

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

செவ்வாய்  9 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் ராசிக்கு 6 - ல் சுக்கிரனும், புதனும் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 4 - ல் நிற்கும் குருவால் அலைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிக்கு 5 - ல் சுக்கிரனும், புதனும் சாதகமாக நுழைந்திருப்பதால் சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.  அயல்நாட்டிலிருப்பவர்களின் உதவிக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 8 - ல் செவ்வாய் செல்வதால் ஏமாற்றம், பணப்பற்றாக்குறை, முன்கோபம் வந்து செல்லும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும்.

நிலுவையிலுள்ள வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவுகளெடுக்க வேண்டாம். சூரியன் 6 - ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

4 - ல் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பதால் பணம் வரும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் 7 - ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.

குரு வலுவாக இருப்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். பழையக் கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழையக் கடனை தந்துவிட்டுச் சேமிக்கத் தொடங்குவீர்கள். செவ்வாய் 6 - ல் நிற்பதால் மனைவிக்கு உடல் நலம் சீராகும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கு, சாதகமாகத் திரும்பும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

ஆனால் ராசிக்குள் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்கள் நிற்பதால் முன்கோபம், வீண் வாக்குவாதம், அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், மூத்த அதிகாரியுடன் மோதல்கள் வந்துபோகும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

பிற்பகுதி அலைச்சலைத் தந்தாலும் முற்பகுதி முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

ராசிக்கு 2 - ம் வீட்டில் சுக்கிரனும், புதனும் சாதகமாக அமைந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் 5 - ல் நிற்பதால் நினைத்தது நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக இருக்கும். ஆனால் 12 - ல் குரு நிற்பதால் தூக்கமின்மை, டென்ஷன், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

பழைய நண்பர்களால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் ராசிக்குள் நுழைந்திருப்பதால் முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை அசத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். செவ்வாய் 4 - ல் நிற்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும்.

தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு 11 - ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துபோகும். கலைத்துறையினர்களே! புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் 12 - ம் வீட்டிற்குள் அமர்ந்திருப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வேற்று மதத்தினரின் உதவிக் கிடைக்கும். செவ்வாய் 3 - ல் அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்து கொள்வார்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும்.

10 - ல் குரு அமர்ந்திருப்பதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

முக்கிய விஷயங்களை நேரடியாகச் சென்று முடிக்க வேண்டிய நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism