
இப்படிக்கு... வீரபத்திரரே சரபர்!

வீரபத்திரரைக் குறித்து இத்தனைத் தகவல்களா என்று வியந்து போனோம். சரபரும் வீரபத்திரரும் ஒன்றே என்ற தகவலும் ஆச்சரியமானது
- சரவணன், திருவரங்கம்
பிரகலாதன் மகாபலிக்கு அருளிய உபதேசக் கதை, நல்ல நீதியைப் போதித்தது, அருமை.
- நந்தினி, விருதுநகர்
தேரோடும் திருவாரூர்... கட்டுரை அற்புதமான தகவல் களஞ்சியமாக இருந்தது.
- சிவகுமார், காஞ்சிபுரம்
இறையனூர் ஈசனுக்கு ஆலயம் எழுப்புவோம்! என்ற கட்டுரை நெகிழ வைத்தது. எங்களால் இயன்ற உதவி செய்ய தீர்மானித்துள்ளோம்
- மணி, கும்பகோணம்
`பூஜை வழிபாடுகள் அவசியம்தானா?' என்ற கேள்விக்கு அருமையான பதில் கிடைத்தது. நன்றி
- ரமேஷ்குமார், மதுரை