வாசகர்களுக்கு வணக்கம். கேள்விகள் இல்லாமல் ஞான விருத்தி இல்லை என்பார்கள் பெரியவர்கள். சரி, கேள்விகள் எழுவது எப்போது? நிறைய படிக்கும்போதும் அறிவார்ந்த விஷயங்களைப் பேசும்போதும்தான். நாமும் நிறைய படிக்கப்போகிறோம்; பேசப்போகிறோம்.

ஆம்! எனக்குத் தெரியாத விஷயங்களை உங்களிடமிருந்து தெரிந்துகொள்ளப் போகிறேன். பெரியவர்கள் மூலம் நான் கேட்டறிந்ததை, ஞான நூல்கள் மூலம் படித்தறிந்ததை நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அனைத்தும் ஆன்மிகம் சார்ந்தவைதான். வழிபாடுகள், விரதங்கள், கோயில் மகத்துவங்கள், தத்துவ விளக்கங்கள், ஆன்மிக சந்தேகங்கள்... இப்படி நிறைய பேசுவோம்; நிறைய அறிந்துகொள்வோம்.

நம்மைப் பொறுத்தவரை, இதுவொரு சத்சங்கமம் என்றே சொல்வேன். ஆன்றோர் சங்கமம் ஞானம் தரும்; தெளிவான ஞானம், சகலத்தையும் சாதிக்கும் சக்தியைக் கொடுக்கும்.

வாருங்கள்... இந்த இதழில், முழுமுதற் தெய்வமாம் விநாயகனைப் பணிந்துத் தொடங்கும்விதம், நம் கடன்களையெல்லாம் நீக்கும் கணபதி விரதமொன்றைப் பார்க்கலாம்.

‘இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்; நோலாத வர் பலர்’ என்பது வள்ளுவர் வாக்கு. இல்லாமையை நீக்கி, நம் தேவைகளை நிறைவேற்றுவது நோன்பு - விரதம் என்பது வள்ளுவர் கருத்து. மேலும், கலங்காத்தன்மையையும் உறுதியையும் அளித்து, நம் நல் எண்ணங்களை நிறைவேற்றி, நம்மை நன்னிலையில் வைப்பவையே விரதங்கள்.

அவ்வகையில், கருணை மழை பொழிந்து கடன்களைத் தீர்த்துக் காப்பாற்றும்... முக்கியமாக ‘பித்ரு கடன்’களிலிருந்து - முன்னோர்களின் சாபங்களில் இருந்து விடுதலை அளித்து, வேண்டியவற்றை அருளும் ஒரு விரதத்தைப் பார்க்கலாம் முதலில்.

பிள்ளையாருக்கு உரிய இந்த விரதத்தின் மகிமையை நமக்கு உணர்த்தியவர், புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தீவிரமாக தவம் செய்து, விநாயக வடிவையே தன் உருவமாகப் பெற்றவர் இவர். புருவங்களுக்கு மத்தியில், ஒரு சின்னஞ்சிறிய துதிக்கை (சுண்டி-துதிக்கை) அமைந்த இவருக்கு, அதன் காரணமாகவே ‘புருசுண்டி’ முனிவர் எனும் திருநாமம் ஏற்பட்டது.

விநாயக பக்தர்களில் முதல்வராகத் திகழும் முத்கல முனிவரின் சீடர் இவர். `விநாயக பக்தர்களில் இனி நீதான் முதல்வன்' என, முத்கல முனிவரால் பாராட்டப்பட்டவர்; விநாயகரை நேருக்குநேராக தரிசித்தவர் எனப் பலவிதமான பெருமைகள் புருசுண்டி முனிவருக்கு உண்டு. ஒருமுறை இவரைத் தேடி நாரதர் வந்தார்.

வழக்கமான உரையாடலுக்குப் பிறகு, “புருசுண்டி முனிவரே! நீங்கள் இங்கு விநாயக வடிவம் பெற்று, ஆனந்த நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் முன்னோர்களோ அங்கே, கும்பீ பாகம் எனும் நரகத்தில், துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை வெளியேற்றும் வழியைப் பாருங்கள்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

விநாயக சாட்சாத்காரம் எய்திய புருசுண்டி முனிவருக்கு, உறவினர் - அல்லாதார் என்ற பேதம் கிடையாது. ஆனாலும் நாரதர் வந்து, ‘உங்கள் முன்னோர்கள்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே?! ஆகவே, புருசுண்டி முனிவர் ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதத்தை முறைப்படிச் செய்து, விநாயகருக்குச் சமர்ப்பித்தார். அதன் பயனாக, அவரின் முன்னோர்கள் கும்பீபாக நரகத்திலிருந்து விடுபட்டார்கள்; விடுதலை அளித்த புருசுண்டி முனிவரை மனதார வாழ்த்தினார்கள்.

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபங்களிலிருந்து விடுதலை அளிக்கும் வல்லமைபெற்றது இந்த விரதம். இந்த விரதத்துடன் சந்திரனுக்கும் முக்கியமான தொடர்பு உண்டு. அதை கச்சியப்ப முனிவர் அற்புதமாக விவரிக்கிறார்.

ஒருமுறை, பிரம்மதேவர் முதலான யாவரும் கயிலையில் கூடியிருந்தபோது, பிரம்மதேவரைக் கண்டு ஏளனமாக நகைத்தான் சந்திரன். இதைக் கண்ட விநாயகர் சினம் கொண்டார். ``ஒளி குன்றி இவ்வுலகில் மறைந்து போவாயாக’' என்று சந்திரனைச் சபித்துவிட்டார்.

சந்திரன் ஒளியிழந்து மழுங்கிப்போனான். தான் செய்த தவற்றுக்காக வருந்தினான். அவன் மீது இரக்கம்கொண்ட தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிள்ளையாரைத் தரிசித்து வணங்கி, சந்திரனின் சங்கடத்தைத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டார்கள். “தேவேந்திரா! தவற்றை எண்ணி வருந்திய பிறகு, மன்னிப்பதே உயர்ந்தது. சாபவிமோசனம் அளிக்கிறேன். ஆவணி மாதம், வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் மட்டும், சந்திரனை யாரும் பார்க்காதிருக்கட்டும்! அப்படிப் பார்த்தால் துன்பங்களும் வீண் அபவாதங்களும் வரும். ஏனைய நாள்களில், சந்திரனைப் பார்க்கலாம்; பிழையில்லை. சந்திரனின் துயர் தீரட்டும்” என்றார் விநாயகப் பெருமான்.

சந்திரனைப் பிடித்திருந்த சாபம் விலகியது. இருந்தாலும் சந்திரனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. `தவறு செய்தது நான். ஆனால் எனக்காக தேவர்கள் மன்னிப்பு வேண்டியிருக்கிறார்கள். தவறு செய்த நானல்லவா, அதற்குப் பரிகாரம் காணவேண்டும்’ என்று எண்ணிய சந்திரன், சர்வசித்திகரம் எனும் இடத்துக்குச் சென்று, விநாயகரைத் தியானித்து 22 ஆண்டுகள் கடுந்தவம் இருந்தான்.

கணபதி மகிழ்ந்தார். சந்திரனின் முன் தோன்றி னார். “சந்திரா! உனக்கு வேண்டிய வரமெல்லாம் முன்னமே யாம் வழங்கியுள்ளோம். மேலும் ஒரு வரத்தையும் இப்போது வழங்குகிறோம். தங்களுடைய சங்கடங்களைப் போக்கிக்கொள்ள விரும்பும் அன்பர்கள், அங்காரக சதுர்த்தித் திருநாளில் சந்திர உதயமாகும் காலத்தில், எம்மைப் பூஜித்து உன்னையும் அர்ச்சித்து வழிபாடு செய்வார்களாக. எம்மை வழிபடும் அனைவரும் உன்னையும் வழிபடும்படியாக, உன் கலைகளில் ஒன்று எமது திருமுடியின் மீது திகழட்டும்” என்று அருள்பாலித்தார். அவ்வாறே திருமுடி மீது சந்திரகலை தரித்த விநாயகர், ‘பால சந்திர விநாயகர்’ எனும் திருநாமம் பெற்றார்.

அதுசரி, அங்காரகனையும் (செவ்வாயை) சேர்த்து ஐங்கரன் சொல்லக் காரணம் என்ன?

அதற்கும் ஒரு திருக்கதை உண்டு!

- சந்திப்போம்...

சீர்வரிசையுடன் பெருமாள்!

மதுரையில், தங்கை மீனாட்சியை ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு மணம் முடிக்க, ஸ்ரீகூடலழகர் எழுந்தருள்கிறார். அதேபோல் சென்னைக்கு அருகிலுள்ள கோவூர் தலத்திலும் திருமேனீஸ்வரர்- சௌந்திராம்பிகை திருக்கல்யாணத்தின்போது, ஸ்ரீகருணாகர பெருமாள், சீர்வரிசையுடன் எழுந்தருள்கிறார்.

- சக்கரத்தாழ்வார்,

தூத்துக்குடி