Published:Updated:

வினைகள் தீர்க்கும் விசாகம்

வினைகள் தீர்க்கும் விசாகம்
பிரீமியம் ஸ்டோரி
வினைகள் தீர்க்கும் விசாகம்

நட்சத்திர குணாதிசயங்கள்

வினைகள் தீர்க்கும் விசாகம்

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
வினைகள் தீர்க்கும் விசாகம்
பிரீமியம் ஸ்டோரி
வினைகள் தீர்க்கும் விசாகம்

குரு பகவானின் 2-வது நட்சத்திரம் விசாகம். முருகக் கடவுளின் அவதார நட்சத்திரம்.

`இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் புத்திமானாகவும், முன்கோபியாகவும், வலது பக்கத் தில் மரு மச்சம் உடையவராகவும், தான தர்மம் செய்பவராகவும், எவ்வித பேதமும் பார்க்காமல் நியாயத்தைப் பேசுபவராகவும் இருப்பார்கள்’ என்கிறது நட்சத்திர மாலை எனும் நூல்.

`நீதிமானாகவும், அரசர் களுக்கு இனியவராகவும், இனிமையாகப் பேசுபவராகவும் நான்கு வேதங்களை அறிந்தவராகவும், சற்றே முன்கோபம் இருந்தாலும் நற்குணவானாகவும், மக்களால் வணங்கப்படுபவனாகவும் இறை வழிபாட்டில் தீவிரமான வனாகவும், யானை, குதிரை மீதேறி சண்டையிடுவதில் வல்லவனாகவும் இருப்பார்ர்கள்’ என்கிறது ஜாதக அலங்காரம்.

பிருகத் ஜாதகம், ‘கல்ஹக்ருத் விசாகாஸூ...’ என்கிறது. அதாவது, நீங்கள் சற்றே பொறாமை கொண்டவர், கலகம் செய்விப்பவர், உலோபி, சொல் திறமை உடையவர், ஒளி பொருந்தியவர் என்று இந்த நட்சத்திரக்காரர்களின் குணநலன்களை விவரிக்கிறது.

வினைகள் தீர்க்கும் விசாகம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், வசீகரமான முகத்தையும் உடல் அமைப்பையும் பெற்றிருப்பீர்கள்.  கொள்கை - கோட்பாடுகளை நெருக்கடி நேரத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். சட்டம், சமூக நீதி, விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என்று யாவும் அறிந்திருந்தும் வெகுளியாக இருப்பீர்கள்!

தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பேசுவீர்கள். உண்மையைப் பேசுவீர்கள்; நியாயத்தை சொல் வீர்கள். அதனால் உங்களில் பலர், நீதிபதிகளாகவும் சட்ட வல்லுனர்களாகவும் மிளிர்வீர்கள். பெருமையும் புகழும் உடையவர்களாக வாழ்வீர்கள். பெரியவர்களை மதிப்பீர்கள். மதகுரு, சித்தர்களைக் கண்டால் பாதம் பணிவீர்கள். தேவை அதிகரிக்கும்போதுதான் செல்வச் சேர்க்கையில் மனம் நாட்டம் கொள்ளும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அடிக்கடி நஷ்டத்தையும் மாற்றத்தையும் சந்திக்க வேண்டி வரும். கலை, கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.  நல்லவர்க்கு நல்லவனாகவும் தீயவர்க்குத் தீயவனாகவும் இருப்பீர்கள் என்று காக்கேயர் நாடி கூறுகிறது.

பயணத்தை விரும்புவீர்கள். பொதுவாக உங்களில் பலர், தவசிகளாகவும் ஞானிகளாகவும் இருப்பீர்கள் என்று மணிகண்ட கேரள ஜோதிடம் கூறுகிறது. பெற்றோர்களை நேசிப்பவராகவும் உடன்பிறந்தவர்களுக்காக எதையும் தியாகம் செய்பவராகவும் திகழ்வீர்கள்.

உங்களில் பலருக்கும் காலம் கடந்துதான் திருமணம் நடக்கும். இல்லையெனில், உங்களைவிட வயதில் மூத்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள நேரிடும். ஒரு சிலர், ஏற்கெனவே திருமணமானவர்களை வாழ்க்கைத் துணையாக அமைத்துக்கொள்வீர்கள். கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை சீரும், சிறப்புமாக அமையும். ஜாதகத்தில் குரு, செவ்வாய், சுக்கிரனின் நிலையை நன்கு ஆராய்ந்து அதன்பின் வாழ்க் கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சிறு வயதிலேயே சனி தசை வருவதால் உடல் நலக் குறைவுகள் வந்து நீங்கும். உங்களுக்கு 23 வயதிலிருந்து எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியிலும் மேன்மை கிட்டும். விமானம் தொடர்பான கல்வி பயில்பவராகவும், கப்பல், சட்டம், வங்கி ஆகிய துறைகளில் பணி புரிபவராகவும் இருப்பீர்கள்.

சகல கலைகளையும் கற்று, மிகவும் திறமைசாலி களாக இருப்பீர்கள். உங்கள் உடல்நலனைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தமாட்டீர்கள். வாழ்க்கையின் முற்பகுதியைவிட, பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும் உங்களைத் தேடி வரும்.

முதல் பாதம்
(குரு + சுக்கிரன் + மேஷ செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மேஷ செவ்வாய். இதில் பிறந்தவர்கள் தளராத மனமும் தாராள குணமும்  கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அழுதால் பிடிக்காது. இதயத்தால் பேசுபவர்கள். அக்கிரமங்களைக் கண்டு பொங்கி எழுவார்கள். புகார்க் கடிதம் எழுதுவதிலும் வல்லவர்கள். சிறு வயதிலேயே வீர, தீரம் நிறைந்திருக்கும். போலி ஆசாமிகளிடம் அன்பு காட்டி ஏமாறுவார்கள். பள்ளிப் பருவத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள்.

நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். பருப்பு, கீரை வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். மனைவி, குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். செய்யும் தொழிலை விரிவுபடுத்தி நாலைந்து கிளைகளை நிறுவி லாபம் ஈட்டுவார்கள். கனிவான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பார்கள். 30 வயதிலிருந்து இவர்கள் வாழ்வில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும்.

பரிகாரம்: திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள எட்டிக்குடியில் அருளும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்
(குரு + சுக்கிரன் + சுக்கிரன்)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில்  பிறந்தவர்கள் அனைவரை யும் கவரும்படி கனிவாகப் பேசுவார்கள். கொள்கை, கோட்பாடுகளின் சிறந்து விளங்குவார்கள். கதை, கவிதைகளில் சிறுவயது முதலே ஆர்வம் காட்டுவார்கள். அழகு சாதனங்களுக்காகவும் ஆடை, ஆபரணங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வார்கள். அந்தஸ்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு நண்பர்களாவார்கள்.

இளம் வயதிலேயே வசதிகளை அனுபவிப்பர். ஏழை எளியோருக்கு உதவுவதில் நாட்டம் கொண்டவர். தரமான பொருள்களை வைத்துக்கொண்டு, கடையைப் பிரமாண்டமாக அலங்கரித்து ஆடம்பரமாக வியாபாரம் செய்யத்தான் இவர்களுக்குப் பிடிக்கும். சொந்த ஊரில் செல்வாக்குடன் திகழவேண்டும் என்ற முனைப்பு இருக்கும். காது சம்பந்தப்பட்ட குறைகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். 27 வயதிலிருந்து திருப்பங்கள் நிகழும்.

பரிகாரம் : திருக்கண்டியூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீகமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீஹரசாபவிமோசனப் பெருமாளை வணங்குதல் நலம்.       

மூன்றாம் பாதம்
(குரு + சுக்கிரன் + புதன்)


மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புதுமையான சிந்தனைத்திறனால், இவர்கள் நிறைவேற்றும் செயல்களுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைக்கும்.

இவர்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் அலைமோதும். கணிதம், அறிவியல், வானவியல், சாட்டிலைட், சோதிடம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மறைமுக எதிரிகள்கூட இருக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.

வசதி வாய்ப்புகள் பெருகினாலும் வந்த பாதையை மறக்கமாட்டார்கள். மாதா, பிதா, குரு, தெய்வத்துடன், நண்பர்களுக்கும் மதிப்பளிப்பார்கள். சிறுவயதிலிருந்தே தாங்கள் நினைத்ததை நினைத்தபடி சிறப்பாகச் செய்துமுடிக்கும் வல்லமை பெற்றவர்கள்.

ஆசிரியர் பணியிலோ ராணுவம், கப்பல் போன்ற துறைகளிலோ பெரிய பதவி வகிப்பார்கள். மனைவி, பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். இவர்களில் பலர் தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் பண்டிதர்களாக விளங்குவார்கள். 21 வயதில் சில மாற்றங்கள் வந்தாலும், 27 வயதிலிருந்துதான் நிலையான முன்னேற்றம் வரும்.

பரிகாரம்: ஓசூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு சந்திரசூடேஸ்வரரை, நெய்தீபம் ஏற்றிவைத்து வணங்கி வழிபட்டு வருவதால், வாழ்வில் நன்மைகள் பெருகும்.

நான்காம் பாதம்
(குரு + சுக்கிரன் + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள், அடிமனதில் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். வாசனைத் திரவியங்களையும் தங்க ஆபரணங்களையும் விரும்பினாலும் அதிகமாக சூடிக்கொள்ள மாட்டார்கள்.

எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதில் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாகச் செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என நினைப்பார்கள். அதேபோல், விடாமுயற்சியுடன் செயல்பட்டு எதையும் முடித்துக் காட்டுவார்கள். புத்திசாலிகளான இவர்கள், சிலநேரம் ஞானிகளைப் போன்று நடந்துகொள்வார்கள்.

இவர்களுடைய இலக்கியப் பேச்சில் பலர் மயங்குவார்கள். புள்ளி விபரம் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை எவருமில்லை. உயர்வகைப் பொருள்களை வீட்டில் சேகரித்து வைக்க விரும்புவார்கள். அழகான வாழ்க்கைத் துணை அமையும். பிள்ளைகளை நண்பர்களைப் போல நடத்துவார்கள். துயரப்படுவோருக்குத் தோள்கொடுக்கத் தயங்கமாட்டார்கள். புது எண்ணங்களும் முயற்சிகளும் இவர்களுக்குள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

இவர்களில் பெரும்பாலான அன்பர்கள் வருவாய், நீதி, செயற்கைக் கோள், மருத்துவம், விமானம், கணினி ஆகிய துறைகளில் பிரகாசிப்பார்கள். 37 வயதிலிருந்து எல்லாவிதமான வசதிகளும் வந்துசேரும்.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியை,  ஏகாதசி திதி நாளில் வழிபட்டு வருவதால், வாழ்க்கை சிறக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாகத்தில் தொடங்கினால் வெற்றிபெறும் செயல்கள்...

கிணறு மற்றும் குளங்களைச் சீர்படுத்துதல், அறுவடை பணி, ரத்தினம், தங்கம் முதலான ஆபரணங்களை வாங்குதல், அக்னி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவ, பித்ரு பூஜைகளைச் செய்தல், விதை விதைத்தல், சிற்பக் கலை கற்றல், நாட்டியம் பயிலுதல், வியாதிக்கு மருந்துண்ணல்.

பரிகார ஹோம மந்திரம்

தூரமஸ்மச்சத்ரவோ யந்து பீதா:
ததிந் த்ராக்னீ க்ருணுதாந் தத்விசாகே
தந்நோ தேவா அனுமதந்து யஜ்ஞம்
பச்சாத்புரஸ்தாதபயந்நோ அஸ்து
நக்ஷத்ராணாமதிபத்னீ விசாகே
ச்ரேஷ்ட்டாவிந்த்ராக்னீ புவனஸ்ய கோபௌ
விஷூச: சத்ரூனபபாதமாநௌ
அபக்ஷுதந்நுத தாமராதிம்

விசாக நட்சத்திரம்

நட்சத்திர தேவதை    :  இருவர். இந்திரன், தேவ புரோகிதன் அக்னி.

வடிவம்        : மண்பாண்டத்தைத் தயாரிக்க உதவும் சக்கர வடிவத்தில் திகழும் ஐந்து நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள்     :  தி, து, தே, தோ.

ஆளும் உறுப்புகள்     : 1, 2, 3-ம் பாதங்கள்: வயிற்றின் கீழ்ப்  பகுதி, சிறுநீர்ப் பை, சிறுநீரகங்கள்.

4-ம் பாதம்            :  சிறுநீர்ப் பை, பிறப்பு  உறுப்பு, குதம், சிறுகுடல்.

பார்வை        : கீழ்நோக்கு.

பாகை        : 200.00 - 213.20

நிறம்        : சிவப்பு.

இருப்பிடம்        : வெட்டவெளி.

கணம்        : ராட்சச கணம்.

பறவை        : பச்சைக் கிளி.

மிருகம்        : பெண் புலி.

மரம்        : பாலில்லாத விளா மரம்.

மலர்        : தெச்சி.

நாடி        : வாம பார்சுவ நாடி.

ஆகுதி        : பால் சாதம்.

பஞ்சபூதம்        : நெருப்பு.

நைவேத்தியம்    : வெல்லம்.

தெய்வம்        : ஸ்ரீமுருகப் பெருமான்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முக: ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள்    : 1, 3, 9.

அதிர்ஷ்ட நிறங்கள்    : பழுப்பு, ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசை    : கிழக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வியாழன், ஞாயிறு.

அதிர்ஷ்ட ரத்தினம்    : கார்னெட் (garnet).

அதிர்ஷ்ட உலோகம்    : செம்பு.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

நம்மாழ்வார், சுவாமி முக்தானந்த பரமஹம்சர், கௌதம புத்தர், அன்னிபெசன்ட் அம்மையார், ஞானதேசிக நாச்சியப்ப சுவாமி, சுவாமி ராமதீர்த்தர், ஸ்ரீசத்குரு சாந்தானந்த சுவாமி.

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்