சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் திரிதியை திதி, ‘அட்சய திரிதியை’ என்று சிறப்பிக்கப்படுகிறது. ‘அட்சய’ என்றால் வளர்தல் என்று பொருள். அன்று நாம் செய்யும் எந்த ஒரு செயலும், மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் செய்யும் தானங்கள் அளவற்ற புண்ணியத்தைத் தரும்.

பகவான் கிருஷ்ணர் குசேலரின் வறுமையைப் போக்கியது; பிரம்ம தேவர் கிருதயுகத்தைப் படைத்தது; மகாவிஷ்ணுவின் திருமார்பில் திருமகள் குடிகொண்டது; வியாச முனிவர் மகாபாரதத்தை இயற்றியது; கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது, அவளுடைய உடைகளை வளரச்செய்தது; வனவாச காலத்தில் பாண்டவர்களுக்கு சூரியபகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது போன்ற அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது, அட்சய திரிதியை நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

‘‘அட்சய திரிதியை நாளில் தான தர்மங்களுக்கும் நற்செயல்களுக்கும் சாஸ்திரங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இல்லாதவர் களுக்கு தானம் அளிப்பது, சுமங்கலிகளை அழைத்து மங்கலகரமான பொருள்களைக் கொடுப்பது ஆகியவை நன்மை பயக்கும். புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் உகந்தது, இந்த நாள்.

அட்சய திரிதியை நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம்.

அன்று, நாம் செய்வது பல மடங்கு பெருகும் என்பதால் கடன் வாங்கியோ, கிரெடிட் கார்டு பயன்படுத்தியோ பொருள்கள் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவில்லையென்றால் கடன் சுமைதான் அதிகரிக்கும்’’ என்கிறார், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில் ஸ்தானீகர் சிவராஜ பட்டர்.

அட்சய திரிதியை நாளில், ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு தானம் கொடுப்போம். அதைவிடச் சிறந்த வழிபாடு எதுவுமில்லை!