Published:Updated:

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’
மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

சென்னை- நுங்கம்பாக்கத்தில் கட்டுமான பொறியாளர் ஒருவர் இருந்தார். திடுமென அவரின் வாழ்வில் விதி விளையாடியது; அவரின் பார்வை பறிபோனது. சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை.

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா சென்னையில் முகாம். ஆறு மாத காலம், நாள் தவறாமல் பெரியவா பூஜைக்குச் சென்று கொண்டிருந்தார் பொறியாளர். வரிசையில் நின்று தினமும் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக்கொள்வார். உதவிக்காக உடன் வருபவர்கள், ‘பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்’ என்று பொறியாளரின் பார்வைத் திரும்புவதற்காக மெய்யுருகப் பிரார்த்திப்பார்கள். மற்ற எல்லா பக்தர்களுடனும் பேசும் பெரியவா, பொறியாளரிடம் மட்டும் எதுவும் பேசாமல், தீர்த்தம் மட்டும் கொடுப்பார்.

ஒருநாள், தேவார இசைப்பணி புரியும் காஞ்சி வரத ஓதுவார் என்ற அடியார், பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார். பொறியாளரை அருகில் வைத்துக்கொண்டு ஓதுவாருடன் உரையாடினார் மகா பெரியவா.

“சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கண் பார்வை போனது ஏன் என்பது தெரியுமா?”

“இறைவனுக்குக் கொடுத்திருந்த வாக்கை அவர் காப்பாற்றத் தவறினார், பெரியவா..”

“எந்த ஊரில் பார்வை இழந்தார்?”

“திருவெற்றியூர் காலடிப்பேட்டை...” என்றார் ஓதுவார்.

“பிறகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ன செய்தார்?”

“அங்கிருந்து திருமுல்லைவாயிலுக்குச் சென்று,  ‘அமுக்கு மெய் கொடு திருவடி அடைந்தேன்’ என்ற பதிகம் பாடி விண்ணப்பம் செய்தார்...”

“அடுத்ததாக என்ன செய்தார்?”

“திருவெண்பாக்கம் என்ற தலத்துக்குச் சென்று, பதிகம் பாடினார். இறைவன் சிறிது கருணை காண்பித்து ஊன்றுகோல் அருளினார்...”

“அப்புறம்?”

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

“காஞ்சிபுரம் சென்று ஏகம்பனை வேண்டினார். ‘ஆலந்தான் உகந்து’ என்ற பதிகம் பாடி, இடது கண் பார்வை கிடைக்கப் பெற்றார். பின்னர், காஞ்சிப் பகுதியிலேயே உள்ள திருமேற்றளி அனேகதங்காவதம் தலத்துக்குச் சென்று கயிலயங்கிரிநாதனைத் துதித்தார்...”

மகா பெரியவாவின் கேள்விகள் தொடர்ந்தன.

“அடுத்து?”

“திருவாரூர் சென்றார் ‘மீளா அடிமை’ என்று துவங்கும் பதிகம் பாடி புற்றிடங்கொண்டானை வழிபட்டு, வலது கண்பார்வையும் கிடைக்கப் பெற்றார்...” சிறிது நேரம் மௌனம்.

“பரமேஸ்வரன் அனுக்கிரகத்தாலே பார்வை கிடைக்கும் இல்லையா?” என்று வினவினார் பெரியவா.

“கண்டிப்பா...”

பொறியாளரை அழைத்து, ‘`சுந்தரமூர்த்தி சுவாமிகள் சென்ற ஸ்தலங்களுக்கெல்லாம், ஓதுவாரை உன்னை அழைச்சுண்டு போகச் சொல்லு. அந்தந்த ஸ்தலங்களுக்கான பதிகங்களை ஓதுவார் பாடுவார்” என்றார்.

“சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஊன்றுகோல் கொடுத்த ஈஸ்வரன் புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலில் இருக்கார். முதல்லே அந்தக் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை பண்ணு. அங்கே அர்ச்சனை செய்யச் சொல்லு. முக்கண்ணன் அருளால் பார்வை கிடைக்கும்...”

மகா பெரியவா ஆணைப்படி யாத்திரை நடந்தது. அவரின் வாக்குப்படி பலனும் கிடைத்தது.

மிழ் மொழியில் மகா பெரியவா கொண்டிருந்த பரந்துபட்ட அறிவு பலரையும் வியக்கவைத்திருக்கிறது.

ஒரு முறை சுவாமிகளின் தரிசனத்துக்காகச் சென்றிருந்தார் கி.வா.ஜ. அவரிடம் “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார் பெரியவா. தொடர்ந்து, “சம்ஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட  மொழி என்று அர்த்தம். அப்படி, தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று சொல்லுங்கள்...” என்று ஒரு விளக்கம் கேட்டார்.

“பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்...” என்றார் கி.வா.ஜ., அடக்கத்துடன்.

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும், அழகையும் இனிமையையும் குறிப்பதாகவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’  வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வை தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா?”

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

“இதைவிடப் பொருத்தமாக யாராலும் சொல்ல முடியாது” என்று சிலாகித்தாராம் கி.வா.ஜ.!

காளமேகப் புலவர் பாடலில் ஒன்று உண்டு. முக்கால், அரை, கால்  அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளைக் குறிப்பிட்டு...

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன் மாகாணிக்கே காமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது...


- எனும் அந்தப் பாடலை எடுத்துக்காட்டுகிறார் மகா பெரியவா.

“முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு கால்களில் நடக்கத் தள்ளாடி, ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே... அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன் - நரை வருவதற்கு முன்னாலே, விக்கலும் இருமலும் வருவதற்கு முன், யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன், ஊருக்கு வெளியேயுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்... காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழே உள்ள ஏகாம்பரேஸ்வரரை இன்றைக்கே துதிப்பாய்” என்று அழகாக விளக்கியிருக்கிறார்.

“என்ன அழகு பார்த்தேளா... ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து, கீழறை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே...’’ என்று சொல்லி தானும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழவைத்திருக்கிறார் மகா பெரியவா.

ல ஆண்டுகளுக்குமுன் மகா பெரியவா தொடங்கிய ‘பிடி அரிசித் திட்டம்’ ஒவ்வொரு குடும்பத்தையும் மனிதாபிமானத்தோடும் தெய்வ பக்தியோடும் வாழவைக்கும் வளமான சமூக நல திட்டம். இந்த உன்னதமான பணியைத் தொடக்கம் முதல் ஆர்வமாக ஆற்றி வருகிறார்கள். பெரம்பூரைச் சேர்ந்த காஞ்சி காமகோடி சேவா  சமிதியினர். அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை. சென்னை வியாசர்பாடியில் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தின் கோயில் மணியோசை கேட்கிறது. அங்கு பெரியவர்களும், தாய்மார்களும், சிறுவர்களும் எதையோ எதிர்பார்த்து வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள்.

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

“பட்டைச் சாதத்தை சுவாமிக்கு நைவேத்தியம் காட்டிக்கிட்டு இருக்காங்க... இப்போ வந்துடும்...”

என்று சொன்ன வயோதிகருக்குக் கன்னம் ஒட்டி, கண்களில் குழி விழுந்திருந்தது.

“ஒருவேளையாவது வயிறு நல்லா நிரம்புது...” என்றார் இன்னோர் ஆசாமி.

“எத்தனையோ வேலைக்கு நடுவுல, எங்க வயிறு நிரம்பணும்னு  இவங்க பாடுபடறாங்களே, இவங்க நல்லா வாழணுங்க...” என்று கூலி வேலை செய்யும் ஒருவர், சேவா சமிதியினரை வாழ்த்தினார்.

“1966-ல் மே மாதம் 15-ம் தேதி இந்தப் பிடி அரிசி கைங்கர்யத்தை ஆசார்ய சுவாமிகளின் அருள் கட்டளைக்கிணங்க ஆரம்பித்தோம்.

இங்கே இருக்கற முருகன் கோயிலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் 5 படி அரிசியை வடித்து, நைவேத்தியம் செய்து, ஏழை எளியவர்களுக்குப் பட்டை சாதமாக அளிப்பது என்று அப்போது ஆரம்பித்தோம். இன்று வாரம் ஏழு நாள்களும் பட்டை சாதம் போடுகிறோம். கிட்டத்தட்ட 150 லிட்டர் அரிசி,  பட்டை சாதமாக அளிக்கப்படுகிறது” என்று அப்போது செயலாளராக இருந்த குருசாமி ஐயரை மேற்கோள் காட்டி, பதிவு செய்திருக்கிறார் பரணீதரன் (விகடன் 17-6-73 இதழ்).

பெரம்பூரிலும் அதைச் சுற்றிலும் உள்ள 81 தொகுதிகளில் சமிதியின் தொண்டர்கள் சுற்றியலைந்து அரிசியை வசூலித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 927 குடும்பங்கள் தினம் ஒரு பிடி அரிசி அளித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் உலையில் அரிசி போடுமுன், பொது தர்மத்துக்காக ஒரு பிடி அரிசியைத் தனியாக வைக்க வேண்டும். அத் துடன் தினம் ஒரு நயா பைசா வீதம் சேர்த்துவைக்க வேண்டும். தொண்டர்கள் வாரம் ஒருமுறை வந்து அவற்றை வசூலித்துச் செல்வார்கள்.

அதிகப்படியான அரிசி கிடைக்கும்போது, இந்தத் திட்டத்திலிருந்து வேத பாடசாலைகளுக்கு அரிசி வழங்கப்பட்டு வந்தது. மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரி, நவராத்திரி வேதபாராயணம், காட்டாங்கொளத்தூர் சிவானந்தா சேவாச்ரமம் ஆகிய ஸ்தாபனங்களுக்கும் மற்றும் நலிவுற்றோர் சங்கங்களுக்கும் அப்போது அரிசி வழங்கப்பட்டது.

“மகா பெரியவா ஆரம்பித்துவைத்த படியரிசித் திட்டம் ஒர் உன்னதமான, தெய்விக சோஷலிச பொருளாதாரத் திட்டம். இதில் பிக்ஷை போடுபவர்களும் இல்லை; பிக்ஷை வாங்குபவர்களும் கிடையாது. 

‘ஒவ்வொரு குடும்பமும் சமூக நலனைப் பற்றி நினைக்கவேண்டும். தெய்வ ஆராதனையை மறக்கக்கூடாது. உழைப்பவர்கள், அவர்களுக் குக் கட்டுபடியாகும் விலையில் ஒரு வேளை யாவது வயிறார உண்ணவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள்களை முன்வைத்துச் செயல் படுத்தப்படும்.  இந்தத் திட்டத்தில் அரிய பெரிய தர்மங்கள் அடங்கியிருக்கின்றன...” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பரணீதரன்.

- வளரும்.

-வீயெஸ்வி

பத்து பாவங்களும் தொலைய...

ராமபிரானுடைய முன்னோரான பகீரதன் தன் முன்னோர்கள் நற்கதி அடைய கடுந்தவம் செய்தார். இதன் பலனாக வைகாசி மாத வளர்பிறை திரிதியை நாளில் கங்கை ஆனந்த பிரவாகமாக பூமிக்கு வந்தாள். எனவே இந்த புண்ணிய நாளில் எல்லா தீர்த்தங்களிலும் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம். வைகாசி திரிதியை நாளில் நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை. சகல வித குடும்பப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இந்த நாளில் மேற்கொள்ளப்படும் வழிபாடு உகந்தது என்கிறது புராணங்கள்.

மகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’

வைகாசி மாத வளர்பிறை தசமிக்கு 'பாபஹர தசமி' என்றே பெயர். இந்த அருமையான நாளில் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி ராமநாத ஸ்வாமியை தரிசித்தால் பத்து வித பாவங்களிலிருந்து விடுபடலாம் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உருவாகும் பாவங்களை இந்த நாளில் போக்கிக் கொள்ளலாம். பிறர் பொருளைக் கவர்வது, தகுதிக்கு மீறி ஆசைப்படுவது, கடுஞ்சொல், பொய், அவதூறு, தீயச் செயல்களைச் செய்வது, பிறரை துன்புறுத்துவது, பெண் பாவம், துரோகம், கஞ்சத்தனம் என்பவை பத்து பாவங்கள் என்று கூறப்படுகிறது. இந்த பத்து பாவங்களிலிருந்து விடுபட வைகாசி வளர்பிறை தசமி நாளில் தீர்த்தமாடி சிவநாமம் சொல்லி வழிபட பாவங்கள் தொலையும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

- வத்சலா சதாசிவன், சென்னை - 64