Published:Updated:

அர்ஜுனன் தோற்றது ஏன்?

அர்ஜுனன் தோற்றது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுனன் தோற்றது ஏன்?

அர்ஜுனன் தோற்றது ஏன்?

அர்ஜுனன் தோற்றது ஏன்?

அர்ஜுனன் தோற்றது ஏன்?

Published:Updated:
அர்ஜுனன் தோற்றது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுனன் தோற்றது ஏன்?

ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின், கிருஷ்ணரின் தேவியரில் ருக்மணி உள்ளிட்ட எட்டு மகளிர், கிருஷ்ணரின் திருமேனியுடன் அக்னிப் பிரவேசம் செய்தனர். மற்ற தேவியர்களை ‘பஞ்சவதம்’ என்ற தேசத்துக்கு அழைத்துச் சென்றான் அர்ஜுனன்.

வழியில் கானகப் பாதையில் திருடர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் எவ்வளவோ முயன்றும் திருடர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கடைசியில் திருடர்கள், அர்ஜுனன் அழைத்து வந்த பெண்களைக் கவர்ந்து சென்றனர்.

இதனால் சோர்வடைந்து அஸ்தினா புரத்தை நோக்கிக் கிளம்பினான் அர்ஜுனன். வரும் வழியில் வியாசரைக் கண்டான். உடனே அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நடந்ததைக் கூறினான்.

அர்ஜுனன் தோற்றது ஏன்?

உடனே வியாசர், ‘‘இதற்காக வருந்தாதே. இதற்கெல்லாம் பகவானது அருளே காரணம். திருடர்கள் அபகரித்துச் சென்ற மகளிர் அனைவரும் தேவமங்கையர்கள்’’ என்ற வியாசர், அதுகுறித்து விளக்கத் தொடங்கினார்:

‘‘முன்னொரு காலத்தில் அஷ்டவக்கிரர் என்ற முனிவர் கழுத்தளவு நீரில் அமர்ந்து நெடுங்காலம் தவம் செய்தார். அப்போது, தேவர்களுக்கும் அசுரர் களுக்குமிடையே நடந்த போரில் தேவர்கள் வென்றனர்.

இந்த வெற்றியை மேருமலைச் சாரலில் கொண்டாடினர். அந்த விழாவுக்கு ஊர்வசி, ரம்பை, திலோத்தமை போன்ற அநேக தேவகன்னியர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தவம் புரியும் அஷ்டவக்கிரரைக் கண்டு வணங்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த முனிவர் ‘உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள்!’ என்றார்.

அவர்கள், ‘பெருமானே! ஸ்ரீகிருஷ்ண பகவானே எங்களுக்குக் கணவராக வரவேண்டும்’ என்று வேண்டினர். அவரும், ‘அவ்வாறே ஆகும்’ என்று ஆசீர்வதித்தார்.

அதன் பின், நீரிலிருந்து கரையேறினார் அவர். வெளியே வந்த அஷ்டவக்கிரரின் உடல் எட்டுக் கோணல்களுடன் விகாரமாக இருந்ததைக் கண்ட தேவ மங்கையர், கிண்டல் பொங்கும் தொனியில் சட்டென்று நகைத்தனர்.

அதனால் கோபமடைந்த முனிவர், ‘பெண்களே! நீங்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானையே மணந்து வாழ்ந்தாலும் இறுதியில் திருடர்கள் வசமாவீர்கள்’ என்று சாபமும் கொடுத்தார்.

இதைக் கேட்டதும் தேவமங்கையர் பதறி முனிவரின் பாதங்களில் வீழ்ந்து, ‘எங்களுக்குச் சாப விமோசனம் அளியுங்கள்’ என்று மன்றாடினர்.

முனிவரின் கோபம் தணிந்து. ‘திருடர்களின் கை உங்கள் மீது பட்டவுடன் நீங்கள் சொர்க்கலோகத்தை அடைவீர்கள்’ என்று அருளினார்.

அர்ஜுனா! முனிவரின் சாபப்படி பரந்தாமனை மணந்த அவர்கள், திருடர்களிடம் அகப்பட்டு இப்போது சொர்க்கம் சேர்ந்து விட்டனர். நீ கவலையை விடு. அத்துடன் உங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டது. அதனாலேயே உனக்கும் இந்தத் தோல்வி உண்டானது. ஆகையால் நீ உன் சகோதரன் தர்மரிடம் சொல்லி நாளையே வனத்துக்குச் செல்லும் முயற்சியை மேற்கொள்’’ என்று கூறினார்.

வியாச முனிவரிடம் விடைபெற்று அஸ்தினாபுரம் சென்றான் அர்ஜுனன். தன் சகோதரர்களிடம் நடந்ததைக் கூறினான். அதன் பிறகு பாண்டவர்கள் பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்துவிட்டு, வனவாசம் புகுந்தனர்.

- என். சிவராமன், சென்னை - 41