திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகத் துளிகள்

ஓவியம் : ம.செ

சிவ விரதங்கள்

சிவ விரதங்கள் எட்டு’ என்று கந்த புராணத்தின் 7-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவை

திங்கட் கிழமை : சோமவார விரதம்.

வைகாசி (பூர்வ பட்ச அஷ்டமி) : அஷ்டமி விரதம்.

ஐப்பசி மாதம் (தீபாவளி) : கேதார கௌரி விரதம்.

கார்த்திகை (பௌர்ணமி) : உமா மகேஸ்வர விரதம்.

மார்கழி மாதம் : திருவாதிரை விரதம்.

தைப்பூசம் : பாசுபத விரதம்.

மாசி மாதம் : மகா சிவராத்திரி விரதம்.

பங்குனி மாதம் : (உத்திரம்) - கல்யாண விரதம்.

இவற்றை முறைப்படி அனுஷ்டித்து, விரதம் கடைப்பிடித்து வந்தால் வாழ்வில் அனைத்து நலனையும் பெற்று வாழலாம்.

ஆன்மிகத் துளிகள்

சிவ வாகனம்

சிவனாரின் வாகனமாகிய நந்தியை சிவாலயங்களில் ஐந்து விதமாக தரிசிக்கலாம்.

இந்திர நந்தி: கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கிய நிலையில் அமைந்து இருக்கும்.

வேத நந்தி: சுதை மற்றும் சுண்ணாம்பினால் அமைந்திருக்கும்.

ஆன்ம நந்தி; கொடி மரத்தை ஒட்டி தலைமை நந்தியாக வீற்றிருக்கும்.

மால்விடை நந்தி: மகா மண்டபத்தில் காட்சி அளிக்கும்.

தரும நந்தி: மகா மண்டபத்தில் சிறு நந்தியாக வீற்றிருக்கும்.

சிவ மலர்கள்!

புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, செண்பகம், நீலோத்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை ஆகியன சிவபூஜைக்கு உரிய எட்டு புஷ்பங்கள்.

சிவச் சின்னங்கள்

திருநீறு, ருத்திராட்சம், வில்வம், ஸ்படிக லிங்கம், பஞ்சாட்சரம் ஆகிய ஐந்தும் சிவச் சின்னங்கள் ஆகும்.

தொகுப்பு: சுரேந்திரன், சென்னை-116